காரடையான் நோன்பு - 14 – 03 – 2022 திங்கட் கிழமை

 


மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும்.

கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லை குத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு, காராமணி கலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

“உருக்காத வெண்ணெயும் ஓரடையும் நான் தருவேன், ஒருக்காலும் என்னைவிட்டு என்கணவர் பிரியாதிருக்க வேண்டும்“என்று சொல்லி வழிபடவேண்டும். நல்ல நேரம் பார்த்து, பெண்கள் மாங்கல்ய கயிறு கட்டிக்கொள்ள வேண்டும்.

மறுநாள் இரண்டு அடையை பசுமாட்டிற்க்குக்கொடுக்க வேண்டும்.  ராமாயணத்தை  படித்தால், அது படிக்கப்படும் இடத்திற்கு ஆஞ்சனேயர் வந்து விடுவார் என்பதுபோல், சாவித்திரியின் சரித்திரத்தை கேட்டாலோ – படித்தாலோ அந்த இடத்தில் சாவித்திரிதேவியே முன் வந்து ஆசி வழங்குவாள்.

 

தீர்க்க சுமங்கலி பவ என்று யமனே ஆசி வழங்குவார்.


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017