பெர்முடா நாட்டின் வீராங்கனை ஃப்ளோரா டஃப்பி டிரையத்லான் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார் – அனுப்பு: வத்ஸலா சங்கரன்

பெர்முடா நாடு ஒரு குட்டி நாடு . அந்த நாட்டின் மொத்த ஜனத் தொகையே வெறும் 63 ஆயிரம் மக்கள் தான் . ஒலிப்பிக்கில் அந்த நாட்டிலிருந்து பங்கேற்றவர்கள் இருவர் தான் . அதில் ஒருவரான ஃப்ளோரா டஃப்பி தங்கம் வென்று விட்டார் . அவர் பங்கேற்ற போட்டியின் பெயர் டிரையத்லான் . டிரையத்லான் என்பது நீச்சல் , சைக்கிள் , ஓட்டம் ஆகிய மூன்றும் கலந்த போட்டி. முதலில் 1,500 மீட்டர் நீச்சல் , அதன் பிறகு 40 கி.மீ. தொலைவுக்கு சைக்கிள் பயணம் , பின்னர் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஓட்டம் ஆகியவற்றைக் கொண்டது. இடையே ஓய்வெடுக்க முடியாது. டஃப்பி பங்கேற்ற 51.5 கி.மீ. தொலைவு கொண்ட டிரையத்லான் போட்டி , அவரது நாட்டின் மொத்த அகலத்தையும் விட குறைவா னது. ஏனெனில் பெர்முடா தீவைக் குறுக்காக அளந்தால் வெறும் 40 கிலோ மீட்டர் நீளம்தான் இருக்கும். அந்த அளவுக்கு சின்னஞ்சிறிய தீவு அது. 33 வயதான அவருக்கு இது நான்காவது ஒலிம்பிக் போட்டி. இதற்கு முன்னதாக 2008- ஆண்டு பெய்ஜிங் , 2012- ஆம் ஆண்டு லண்டன் , 2016- ஆம் ஆண்டு ரியோ என மூன்று ஒலிம்பிக் போட்டிகளிலும் அவ...