பாரததேசம் பழம் பெரும் தேசம்

 


சித்திரையில் புத்தாண்டு பிறக்கிறது. அந்த புத்தாண்டை இந்தியாவில் வசிக்கும் ஹிந்துக்கள் அந்தந்த மாநிலத்தில் பலவிதமான பெயர்களில் கொண்டாடி ஹிந்து மக்களின் ஒருங்கிணைப்பை உலகத்திற்குப் பறைசாற்றுகிறார்கள்.

அந்த புதிய ஆண்டின் பெயர்கள் அந்தந்த மாநிலத்தில் இங்கு பிரசுரமாகி இருக்கும்  இந்திய வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளன.

சித்திரையில் பிறக்கும் ஒரே புத்தாண்டு தினம் நமது பாரத தேசத்தின் பல மாநிலங்களில் வெவ்வேரு பெயர்களில் கொண்டாடப்படுவது ஒரு சிறப்பு அம்சம் என்றால், வருடத்தின் 12 மாதங்களிலும் ஏதோ ஒரு பண்டிகை – திருவிழா – ஹிந்துமத சடங்குகள் – கோயில் குளங்கள் – புண்ணிய ஆறுகள் – இந்தியாவைச் சுற்றி உள்ள மூன்று சமுத்திரங்கள் ஆகியவைகளில் புனித நீராடுதல் – என்று வருடம் பூராவும் ஹிந்து மதக் கடவுள்களையும் – வாழ்வு கொடுத்த தாய் தந்தையர்கள் இருந்தால் வணங்குவதும் – இறந்திருந்தால் அவர்களை நினைத்து தர்பணம் போன்றவைகளை மந்திர உச்சாடணத்துடன் நீத்தார் நீர்கடன்கள் செய்து அவர்கள் தாகம் தீர்த்து அவர்களின் ஆசிகளைப் பெறுவதும் – என்று பாரத தேசம் ஒரு தனித்துவ ஆன்மீக பூமியாக இந்த உலகத்தில் பிரகாசிக்கிறது என்பது நம் அனைவருக்கும் ஒரு மகத்தான பெருமையாகும்.

அனைவரின் நலம் கருதி பிராமணர்கள் அனைவரும் இறந்த மூதாதையர்களுக்கு தர்பணம் செய்ய பந்துக்கள் இல்லாத ஜீவன்களுக்காக நீரினால் அர்க்கியம் செய்வார்கள். அப்போது தர்பணம் செய்யும் பிராமணர்கள் சொல்லும் மந்திரம்: யேஷாம் ந மாதா ந பிதா ந பந்து: நான்ய கோத்ரிண: தேஸர்வே த்ருப்தியாந்து மயோத் ஸ்ருஷ்டை: குஸோ தகை: த்ருப்பயத த்ருப்யத த்ருப்யத’ என்று உச்சரித்து ஜலத்தை பிரித்த கூர்ச்சத்தில் விடுவார்கள். “தர்பணம் செய்ய எவர்களுக்கு தாயோ தந்தையோ ச்நேகிதரோ தாயாதிகளோ பந்துக்களோ இல்லையோ அவர்களெல்லாம் நான் என் தரப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும்” என்பது தான் இந்த மந்திரத்தின் அர்த்தமாகும்.  

ஆகாய வழியாக வந்து இந்தத் தர்ப்பைப் புல்லில் எழுந்தருளுங்கள் என்று வேண்டும் போது அவர்கள் சொல்லும் மந்திரம் எல்லா இடங்களிலும் மங்களத்தையும் அமைதியையும் உண்டாக்க வேண்டுவார்கள்:

காற்று இனிமையாக வீசட்டும்
நதிகள் இனிமையைப் பெருக்கிக்கொண்டு ஓடட்டும்
செடி கொடிகள் இனிமை அளிக்கட்டும்
காடுகளில் உள்ள மரங்கள் இன்பம் தரட்டும்
சூரியன் மகிழ்ச்சி அளிப்பானாகுக
பசுக்கள் இனிமையான பாலைப் பொழியட்டும். (மதுவாதே ருதாயதே…..)

இதனால் தான் ஹிந்து மதம் ஒரு மதம் அல்ல – சனாதன தர்மத்தை நிலைநிறுத்த மக்களை – இனம், மதம், தேசம் – ஆகியவைகளைக் கடந்து ஒரு நெறியைப் போதிக்கும் வழிகாட்டியாகும்.

உலகமே சுபீட்சமாக ஒளிவிடவேண்டும் என்பது தான் ஒவ்வொரு சனாதனவாதிகளின் பிரார்த்தனை.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017