பிலவ தமிழ் புத்தாண்டு


 

தமிழ் புத்தாண்டு பிலவ வருடம் ஏப்ரல் 14-ம் தேதி புதன் கிழமை வருகிறது. பொன் கிடைத்தாலும், புதன் கிடைக்காது என்பர். மேலும், பிலவ என்றால் நம்மை நல்வழிக்கு வழிகாட்டும் வருடம் என்று பொருள்.

சென்ற இரண்டு வருடங்கள் – 2019-ல் விகாரி வருடம் – விகாரி என்றால் வெறுப்பு என்றும்,  2020-ல் சார்வரி வருடம் – சார்வரி என்றால் இருள் என்றும் பெயர் கொண்டு நம்மை கொரோனா என்ற கொடூர வியாதியால் பலவிதமான இழப்புகளை நம் தேசம் மட்டுமல்லாது உலகமே சொல்லணா துக்க சாகரத்தில் மூழ்கி இன்னும் அதன் தாக்கம் குறைந்தபாடில்லை.

இந்த பிலவ – கஷ்டத்திலிருந்து கரைசேர்க்கும் என்ற கருத்துள்ள வருடமாக பிறப்பதால், ஆண்டவன் அருளால் நம் நாடு மட்டுமல்லாது – உலக நாடுகள் அனைத்தும் இந்த கொடூர கொரோனா தொற்று நோயிலிருந்து கூடிய சீக்கிரம் பூரண குணம் அடைந்து, சுபீட்சம் எங்கும் பரவும்.

நம் வாய்மை வாசகர்களுக்கு பிலவ தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017