ரத சப்தமி – 19 – 02 – 2021 – வெள்ளிக் கிழமை



உலகிற்கு ஒளி தரும் சூரிய பகவானுக்கு உரிய விரதங்களில் மிக முக்கியமானது ரத சப்தமி விரதம்.

ரத சப்தமி நாளில் சூரியன் பிறந்ததாக கருதப்படுவதாலும், அந்த நாளில் சூரியனுக்கு விசேஷமான ஒளிபிறப்பதாலும், அன்றைய தினத்தில் விரதம் கடைபிடித்து சூரிய பகவானை வழிபட வேண்டும். இந்த தினத்தை சூரிய ஜெயந்தி என்றும் அழைக்கப்படுகிறது.

 சப்தம் என்பது வடமொழியில் ஏழு என்று பொருள்படும். அமாவாசைக்கு பிறகு 7-வது நாள் சப்தமி திதி ஆகும். உத்திராயண புண்ணிய காலத்தின் வளர்பிறையில் வரும் சப்தமி திதியே, ரத சப்தமி என்று போற்றப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு (19.02.2021) வெள்ளிக்கிழமையன்று ரத சப்தமி அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த இனிய நாளில் சூரிய உதயத்தில் எழுந்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவது சிறப்பு சேர்ப்பதாகும்.

 அப்படி செய்ய இயலாதவர்கள் வீட்டில் சூரிய ஒளிபடும் இடத்தில் நின்றபடி நீராட வேண்டும். ஏழு எருக்கம் இலைகள், மஞ்சள் பொடி கலந்த அட்சதையுடன் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் உள்பட அனைவரும் தங்கள் தலைக்கு மேலே வைத்துக்கொண்டு நீராடுவது நல்லது.


 ரத சப்தமி ஸ்னான சுலோகம்



 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017