மூன்று விவசாயச் சட்டங்கள் – விவசாயிகளுக்கு வரமா? சாபமா?

 

இந்த மூன்று விவசாயச் சட்டங்கள் பற்றி இ-டச், வாய்மை 

இரண்டிலும் மிக விரிவாக விளக்கி விட்டோம்.


பொது மண்டியில் தான் விவசாயப் பொருட்களை அனைத்து 

விவசாயிகளும் விற்க வேண்டும், குறந்த பட்ச விவசாய 

கொள்முதல் விலை முறையை இந்தச் சட்டங்கள் தகர்த்து 

விடும், பொது வியாபார மண்டிகள் தனியார் நுழைவதால் பாதிக்காப்படும், விவசாய வியாபராத்தில் நுழையும் கார்ப்பரேட் நிறுவனங்கள் விவசாய நிலங்களை கபளீகரம் செய்து விவசாயிகளின் உரிமைகள் பாழாகும், கார்ப்பரேட்டுக்களுடன் விவசாயிகள் ஒப்பந்தம் போட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போகும் நிலையில் விவசாயிகளின் நிலங்களை கைப்பற்றி விவசாயிகள் அநாதையாக்கப் படுவார்கள் – என்பது தான் விவசாயிகள் போராட்டத்தின் முக்கிய அம்சமாகும்.


இந்த அத்தனை அம்சங்களுக்கும் மோடி அரசு விளக்கமும், 

எழுத்து பூர்வமான உறுதி மொழிகளையும் கொடுக்கத் தயாராக 

உள்ளது. சட்டத்தின் போராட்டக்காரர்களின் ஆட்சேபனைகளை 

ஷரத்து வாரியாக விவாதித்து ஒரு நியாயமான முடிவை 

எட்டவும் தயாராக இருப்பதை பல முறை சொல்லியாய் விட்டது.

இப்போது 3 சட்டங்களை ரத்து செய்த பிறகு தான் பேச்சு 

வார்த்தை என்ற நிலையில் போராட்டம் சூடுபிடித்துள்ளது.


தனியாருக்கு விவசாயிகள் தங்களது விளை பொருட்களை 

விற்கக் கூடாது, மண்டியில் தான் விற்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாத – ஏன், கூடாத – கோரிக்கையாகும். ஏனென்றால், இந்த இடத்தரகர்களை ஒழிக்க வேண்டும் – இல்லையேல் கட்டுப்படுத்த வேண்டும், விவசாயிகளின் விளைபொருட்களை விளையும் மாநிலம் விட்டு வேறு மாநிலங்களுக்கு எடுத்துச் சென்று விற்க அனுமதிக்க வேண்டும் என்பது தான் பல வருடங்களாக எந்தக் கட்சியும் நேர்மையாக செயல்படுத்தாமல், ஆனால் தங்கள் தேர்தல் அறிக்கையில் இதைக் குறிப்பிட்டு தேர்தல்களைச் சந்தித்துள்ளனர். இப்போது இதையே பல இடர்களுக்கு இடையில் அந்த நெடுநாளைய உண்மை விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சட்டம் இயற்றையதை எதிர்க்கின்றனர். போராடுகின்றனர்.


இந்தப் போராட்டத்தில் 10 விவசாய யுனியன்களுக்கு மேல் 

மோடியின் இந்த 3 சட்டங்களை ஆதரிக்கின்றன. இதைப் பார்த்த 

போராடும் – பஞ்சாப் – ஹரியானா மாநில விவசாயிகள் ‘மோடி 

அரசு தனியாக எந்த விவசாய சங்கங்களுடனும் நேரடியாகப் 

பேசக்கூடாது என்று இப்போது சொல்ல ஆரம்பித்துள்ளனர்.

ஒரு தனிப்பட்ட விவசாயியின் சுதந்திரத்தைப் பாதிக்கும் இந்த 

‘மண்டி வியாபாரம் மட்டும்’ என்ற நிலை ஏற்புடையதாகாது. 

மேலும், பொது விநியோக கொள்முதலில் அரசாங்க உணவு 

சேமிக்குக்கும் கிடங்குகளில் வருடா வருடம் கொள்முதல் 

தானியங்கள் சேதமடைவதால் பல லட்சங்கள் அரசாங்கத்திற்கு 

நஷ்டமாகிறது.


மண்டித் தரகர்கள் குறைந்த விலைக்கு விவசாயிகளிடம் வாங்கி, 

பிறகு இந்திய உணவுக் கழகங்களுக்கு அதிக விலைக்கு விற்று இடைத்தரகர்கள் நியாயமான விலை பயிரிடும் விவசாயிகளுக்குக் கிடைக்காமல் தடுக்கின்றனர். மேலும், அழுகிய தானியங்களை இந்திய உணவுக் கழங்களிடமிருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கி, மது வகைகள் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்கு அதிக விலைக்கு விற்கிறார்கள் அல்லது இந்த மண்டி இடைத் தரகர்களே நடத்தும் மது ஆலைகளுக்கு அடிமட்ட விலைக்கு வாங்கி சச்சாப் பொருளாகப் பயன்படுத்துகிறார்கள். இந்த மாதிரியான நிலை பஞ்சாப் – ஹரியானாவில் தான் நடைமுறையில் உள்ளது. ஆகையால் போராட்டமும் இந்த இரண்டு மாநிலங்களில் தீவிரமாக உள்ளது.


டெல்லி முதல் மந்திரி அர்விந் கெஜ்ரிவால் சென்ற சில மாதத்திற்கு முன் இந்த வேளாண் சட்டத்தை ஒப்புக் கொண்டு, கெஸட் அறிவிப்பு செய்துள்ளார். ஆனால் அதற்கு முரணாக அந்த மூன்று சட்டங்களையும் டெல்லி சட்ட சபையில் கிழித்து எரிந்துள்ளார். மேலும் பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி யின் 2017 தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் நல்ல விலை கிடைக்க பெரிய உணவு பதனிடும் கம்பனிகளுக்கு விற்க வழிவகை செய்யப்படும். சிறந்த விலை கிடைக்க Agricultural Produce Market Committee Act – விவசாயிகள் தங்கள் இஷ்டம் போல் மாநிலம் தாண்டியும் விற்க இந்த சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும். – என்ற வாக்குறிது உள்ளது.


மேலும், டெல்லியில் நடக்கும் விவசாயிகள் போராட்டத்தில் கலவரத்தைத் தூண்டும் தீய சக்திகள், அன்னிய நாட்டு தேச விரோத சக்திகள், காலிஸ்தான் ஆதரவாளர்கள் என்று பலர் விவசாயிகள் என்ற போர்வையில் புகுந்துள்ளனர்.

இப்போது உச்ச நீதிமன்றமும் இதில் தலையிட்டுள்ளது. நாட்டின் நலம் கருதி மோடி அரசு இந்த போராட்டத்திற்கு அடிபணியாமல் – ஆனால் அதே சமயத்தில் அவர்களின் சந்தேகங்களை நீக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு இதை ஒரு முடிவுக்குக் கொண்டு வரவேண்டியது மிக அவசியமாகும். அதுவும் இது சீக்கிரத்திலேயே நிகழ ஆண்டவனைப் பிரார்த்திக்கிறோம்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017