பாரதியின் 138-வது வருடப் பிறந்த நாளான சர்வதேசப் பாரதி விழா 2020

 






பாரதி விழாவில் பாரதப் பிரதமர் பங்கு கொண்டு பேசியது இதுவே முதல் தடவையாகும். பாரதிக்காகவே தம் உடல், பொருள், ஆவி அத்தனையையும் அர்பணித்து “பாரதி பணியே – என் பணி” – என்று உழைக்கும் உத்தமர் சீனி விஸ்வநாதன் என்றால் அது மிகையாகாது. அவரைப் பற்றி குமுதத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்ணதாசன் உருக்கமாக ஒரு கட்டுரை எழுதி உள்ளார். அதை வாய்மை பிரசுரித்தது. அதை உடனே என்னால் கண்டு பிடிக்க முடியவில்லை.  இருப்பினும் சினி விஸ்வநாதன் மோடி கையால் ‘பாரதி விருது’ அளிக்கப்பட்டதைப் பார்க்கும் போது நான் ஆனந்தக் கண்ணீர் விடுகிறேன். ஏனென்றால் அவரது பணி புனிதமானது. அவரை முன்பு ஆண்ட திராவிடக் கட்சிகள் குறுகிய மனப்பான்மையால் உண்மையான உழைக்கும் உத்தமரைப் பாராட்டாமல் இருந்ததை என்னால் மன்னிக்க முடியவில்லை.

எதற்கும் காலம் கனிய வேண்டும். அது மோடி அரசால் ஏற்பட்டது என்பது ஒரு சிறப்பாகும்.      -  ஆசிரியர். 
















நமது பாரதப் பிரதமர் மோடி அவர்கள் பாரதியின் 138-வது வருடப் பிறந்த நாளான சர்வதேசப் பாரதி விழா 2020 பேசிய பேச்சின் சாராம்சம்:

பாரதி வாழ்ந்தது 39 வருடங்களே. ஆனால் அந்தக் குறிகிய காலத்திலும்

அவர் எழுதியவைகள் பல. செயல்கள் பல. எல்லாவற்றிலும் சிறந்து 

விளங்கியவர். ஒரு புகழ்வாழ்ந்த எதிர்காலத்தை உருவாக்க ஒரு ஒளி 

விளக்காக தமது எழுத்துப் பணியை ஆற்றியவர்.


‘அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே!

இச்சகத்துளோரெலாம்

எதிர்த்து நின்ற போதிலும்

அச்சமில்லை அச்சமில்லை

அச்சமென்பதில்லையே!’ என்று பாடியவர் பாரதி. இது தான் பாரதி 

இன்றைய இளைஞர்களுக்கு இருக்க வேண்டிய விவேகம் என்று 

முழங்குகிறார்.


புதியதும் – பழையது ஒருங்கிணைந்து ஒரு ஆரோக்கியமான 

கலவையை நம்பியவர் பாரதி. தமிழ் மொழியும், தாய்திரு நாடும் இரு 

கண்கள் என்று பாடியவர் பாரதி. வேதங்கள், உபநிடதங்கள், நமது 

கலாச்சாரம், சடங்குகள், நமது ஒப்புயர்வற்ற கடந்த கால சிறப்பு 

அம்சங்கம் ஆகியவைகளைப் பற்றி எல்லாம் புகழ்ந்து பாடியவர் பாரதி. 

அதே சமயத்தில் பழங்கதைகள் பேசி காலத்தை ஓட்டாமல், 

முன்னேற்றப்பாதையில் வீருநடை போடவேண்டும் என்றும் 

முழங்குகிறார் பாரதி. பெண்கள் தலை நிமிர்ந்து வீர நடை போட 

வேண்டும் என்றார் பாரதி.


தனியொருவனுக் குணவிலை யெனில்

ஜகத்தினை அழித்திடுவோம் – என்று எழைகளை காத்து, அவர்களின் வாழ்வாரத்தை உயர்த்த வேண்டும் என்று பாடியவர் பாரதி.


வானவில் கலாச்சார அமைப்பு பாரதியின் அற்புதமான படைப்புகளை 

பரப்பும் உன்னதப் பணியைச் செய்து வருகிறது. இந்தியாவின் புதிய 

பாரதத்தை உருவாக்க இந்த அமைப்பின் பணி உதவும்.

                                           

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017