தீபாவளித் திருவிழா – 14-11-2020
புராண வரலாறு: தீர்த்தமஸ் முனிவர் சனாதனர் என்னும் இன்னொரு முனிவரிடம் ‘சுபீட்சம் உண்டாக என்ன செய்ய வேண்டும்?’ என்பதற்கு அவர் தீபாவளியைப் பற்றி விளக்கியதாக ஒரு புராணக்கதை உண்டு.
சனாதனர் சொன்ன விளக்கம்:
“திபாவளிக்கு முதல் நாளான தேய்பிறை த்ரயோதசி திதி அன்று, மகா பிரதோஷம் பூஜை செய்து, யமனை வழிபட்டு, யமதீபம் ஏற்றி, அடுத்த நாள், நரக சதுர்த்தசி அன்று, நல்லெண்ணெய் ஸ்நானம் செய்து, புத்தாடை உடுத்தி, மகா விஷ்ணுவிற்காக தீபங்கள் ஏற்றி, இனிப்பு, மருந்து வகைகளைப் படைத்து வழிபட்டால் சுபிட்சம் உண்டாகும்.
ஏனென்றால் புத்தாடையில் மகா விஷ்ணுவும், இனிப்பில் அமிர்தமும், மருந்தில் தன்வந்திரியும், தீபத்தில் பரமாத்மாவும், எண்ணெயில் லட்சுமியும், அரப்பில் சரஸ்வதியும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கெளரி தேவியும், புஷ்பத்தில் மோகினியும், தண்ணீரில் கங்கையும் இருப்பதால், இந்த வழிபாடு எல்லா தெய்வங்களையும் ப்ரீதி அடையச் செய்யும். “
மகா விஷ்ணு, தன்வந்திரி, பரமாத்மா, லட்சுமி, சரஸ்வதி, பூமாதேவி, கெளரி தேவி, மோகினி, கங்காதேவி ஆகிய தெய்வங்களின் அருள் நம் அனைவருக்கும் தீபாவளி தினத்தில் கிட்டும் என்பது ஐதீகம்.
வாய்மை வாசகர்கள், அவர்கள் குடும்பத்தினர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள் அனைத்துப் பேர்களுக்கும் அனைத்துத் தெய்வங்களின் அருள் அனைவரின் வாழ்நாட்கள் முழுவதும் கிட்ட நாங்கள் பிரார்த்திக்கிறோம்.
·
எஸ். சங்கரன் & வத்ஸலா சங்கரன்
தீபாவளி நாளில் புன்னிய ஸ்நானம் செய்யும் பொழுது தியானிக்க வேண்டிய ஸ்லோகம்:
ஓம் நமசிவாயை நாராயண்யை
தச தோஷ ஹராயை கங்காயை நமஹ//
அர்த்தம்:ஸ்ரீமந் நாராயணரின் திருவடிகளில் இருந்து பெருகியவளே! சிவனாரின் சிரசினில் தங்கியிருப்பவளே! எத்தகைய பாவத்தினையும் போக்கும் வல்லமை உடையவளாகிய கங்கையே உன்னை நமஸ்கரிக்கிறேன்.
Comments