பீஹார் சட்ட சபைத் தேர்தல் முடிவு – 10 – 11 – 2020
மொத்த
வோட்டுக்களில் 1% கீழாக ஓட்டுக்களைப் பெற்று வென்ற இடங்கள் 15. அந்த இடங்களை வென்ற
கட்சிகள்:
பிஜேபி
– 2, ஜேடியு – 7, ஆர்ஜேடி – 5, காங்கிரஸ் – 1
1%
-லிருந்து 5%-க்கு கீழான ஓட்டுக்களை பெற்று வென்ற இடங்கள் 52. அந்த இடங்களை வென்ற கட்சிகள்:
பிஜேபி
– 12, ஜேடியு – 11, ஆர்ஜேடி – 20, காங்கிரஸ் – 9
5%-லிருந்து
10% கீழான ஓட்டுக்களை பெற்று வென்ற இடங்கள் 57. அந்த இடங்களை வென்ற கட்சிகள்:
இந்த
பட்டியலின் படி பார்த்தால் மிகக் குறைந்த ஓட்டுக்களில் பிஜேபி 38 இடங்களிலும், ஜேடியு
– 29 இடங்களிலும், ஆர்ஜேடி – 45 இடங்களிலும், காங்கிரஸ் 12 இடங்களிலும் இருக்கின்றன.
இதன் படி இரு கூட்டணிக் கட்சிகளும் தலா 67 இடங்களில் குறைந்த ஓட்டுக்களில் வென்றுள்ளன.
ஆகையால் எந்தக் கட்சியும் மற்றவர்களை இந்த குறைந்த ஓட்டு என்று குற்றம் சொல்ல முடியாது.
இப்போதைய
நிலவரப்படி, என்.டி.ஏ.யின் மொத்த ஓட்டுச் சதவிகிதம் 37.26 என்றால் மஹாகட்பந்தன் கூட்டணியின்
மொத்த ஓட்டுச் சதவிகிதம் 37.23 – வித்தியாசம் மிகவும் குறைந்த 0.03% தான்.
ஓட்டு
சதவிகிதம் எப்படி இருப்பினும், நிதிஷ் குமாரின் மூன்று முறை தொடர்வெற்றி – ஆட்சியில்
தொடர்ந்து இருப்பதால் ஏற்படும் வெறுப்பு ஆகியவைகளை எல்லாம் கடந்து மீண்டும் முதல்வராக
ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளார் என்றால் அது சாதாரணமான சாதனை அல்ல. சிராக்கின் திடீர்
எதிர்ப்பையும் மீறி ‘மவுன ஓட்டர்கள்’ மோடியின் தலைமையை நம்பி ஓட்டளித்துள்ளார்கள் என்றால்
அது மிகையாகாது. 2015-ல் மோடி 40 பிரசார கூட்டங்களில் பேசி, 53 இடங்களையும், 33.8%
ஓட்டையும் பெற்றவர், இப்போது 12 பிரசாரத்தில் மட்டும் பேசி 74 இடங்கள் – 66.4% ஸ்ரைக்
ரேட் (ஜேடியு – 75 இடங்கள் – 52.8% ஸ்ரைக் ரேட் தான்) என்ற நிலையால் மோடியின் அலை மவுனமாகப்
பரவி மக்களைக் கவர்ந்துள்ளது என்பது சர்வ நிச்சயம்.
2015
பீஹார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 41 தொக்குதிகளில் போட்டி இட்டு 27 சீட்டுக்களில்
வென்று 65.9% ஸ்ரைக் ரேட் இப்போதைய தேர்தலில் அது நின்ற 70 இடங்களில் 19 இடங்களே வென்றதால்
ஸ்ரைட் ரேட் 27.1% என்று குறைந்து விட்டது. தங்களது வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு காங்கிரசுக்கு
70 இடங்களில் போட்டி இட வாய்ப்பளித்தது என்ற குற்றச் சாட்டுடன் ராஹுல் அதிக இடங்களில்
பிராசாரத்திற்கு வரவில்லை என்றும் காங்கிரசைப் பழிக்கிறார்கள்.
நிதிஷ்
குமார் 160 பிரசாரக் கூட்டங்கள், தேஜஸ்வி யாதவ் – 20 நாட்களில் 251 பிரசாரக் கூட்டங்கள்
– அதிலும் அக்டோபர் 31-ல் ஒரே நாளில் 19 கூட்டங்கள் என்று உழைக்கவும், ராஹுல் வெறும்
8 கூட்டங்களோடு தனது பிரசாரத்தை முடித்துக் கொண்டார்.
மோடியை
மோடியால் தான் தோற்கடிக்க முடியும் – என்ற வாசகம் தான் நினைவுக்கு வருகிறது. 0.03%
தான் என்.டி.ஏ.க்கும் எம்.ஜி.பி.க்கும் வித்தியாசம் என்று சொல்பவர்கள் கவனத்திற்கு
பிஜேபியின் ஸ்ரைக் ரேட் 13.6% ஜேடியுவை விட
அதிகம் என்பது மிகவும் தேஜஸ்வியை அதிரவைக்கும் எண்ணிக்கை என்றால் மிகையாகாது.
2015-ல்
சட்ட சபையின் கட்சிகளின் நிலவரம்: தே.ஜ. கூட்டணி – 127 – மஹா கூட்டணிக்கு – 108 என்பது
இந்த 2020 தேர்தலில் தே.ஜ. கூட்டணி – 125 – மஹா கூட்டணி – 110 என்று 3 இடங்களே வித்தியாசம்
என்பதால் அதிக வித்தியாசம் இல்லாமல் இருப்பதையும் பார்க்க வேண்டும். இதில் பாஜக மட்டுமே
அசுர பலமாக தனது 53 என்ற 2015-ல் அடைந்த வெற்றியை இந்த 2020 தேர்தலில் 74 இடங்களாக
(21 இடங்கள் அதிகம்) அதிகரித்து ஒரு சீட்டில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை விட (75 சீட்டில்
வென்றதால்) அதிக சீட்டுக்கள் பெற்ற கட்சி என்ற தகுதியை இழநதுள்ளது என்பது ஒரு பெரிய
இழப்பே இல்லை.
இந்தத்
தேர்தலின் மூலம் காங்கிரஸ் ஒரு தீண்டத் தகாத கட்சியாக உருமாறி விட்டது. ஒபாமா தான்
எழுதிய – A Promised Land – புத்தகத்தில் ராஹுல் – சோனியா ஆகியவர்களைப் பற்றி – அதிலும்
குறிப்பாக ராஹுலை ‘பதற்றமடைபவர், பக்குவமில்லாதவர், எந்த பாடத்தையும் படித்து அறிந்து
கொள்ளும் ஆர்வமோ, தகுதியோ இல்லாதவர். தனக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியரைக்
கவரச் செய்யும் முயற்சியில் தோற்றவர்’ என்று கணித்துள்ளது ராஹுலின் அரசியல் நடவடிக்கைகளைப்
பார்பவர்களுக்கு ‘சரியான கணிப்பு’ என்று சொல்லும் நிலையில் தான் ராஹுல் இருக்கிறார்.
ஒரு அயல் நாட்டுத் தலைவர் நம் நாட்டுத் தலைவரை இப்படி மதிப்பீடு செய்வது அவசியமற்றது,
ஏற்கக் கூடாத ஒன்று என்று நினைத்தாலும், ராஹுலின் மோடி எதிர்ப்பு அரசியலைப் பார்ப்பவர்கள்
– இதை அவரே சம்பாதித்த சன்மானம் – என்று சமாதானமும் ஆகலாம்.
மஹாகட்பந்தன்
கட்சிகள் நிதிஷ் மந்திரிசபை பதவி ஏற்பு விழாவினைப் புறக்கணித்துள்ளனர். இது ஒரு தவறான
செயல். நியாயமான எதிர்கட்சியாக ஆர்ஜேடி செயல்பட முயலவேண்டும்.
நிதிஷ்
குமார் அரசு ஐந்து ஆண்டுகள் மிகவும் சிறப்பாக – பீஹாரை முன்னேற்றப்பாதையில் கொண்டு
சென்று முத்திரை பதிக்க வேண்டும். பீஹார் மக்கள் கடும் உழைப்பாளிகள். அவர்களால் தான்
பல திட்டங்கள் இந்தியாவின் பல மாநிலங்களில் குறுகிய கால கட்டத்தில் நிறைவேற்ற முடிகிறது.
ஆகையால் மோடி தேர்தலுக்கு முன்பே பல திட்டங்களுக்கு வித்திட்டுள்ளார். பீஹார் மக்களின்
உழைப்பை பீஹாரிலேயே பயன்படும் அளவில் செயல்படுத்தி, பீஹாரை ஒரு மாதிரி மாநிலமாக நிர்வகிக்க
வேண்டும்.
நிதிஷ்
குமாருக்கும் அவரது மந்திரி சபை மற்றும் எம்.எல்.ஏ.க்களுக்கும் வாய்மை பூச்செண்டு கொடுத்து
வாழ்த்துத் தெரிவிக்கிறது.
நிதிஷ் குமார் மோடியையும், பிஜேபியையும் பல முறை முதுகிலும் நெஞ்சிலும் குத்திய போதிலும், அவைகளை எல்லாம் மறந்து பெரிய மனதுடனும், பெருந்தன்மையுடன் மோடியும், பிஜேபியும் – குறிப்பாக மோடி நடந்து கொண்டார்கள்.
மீடியாக்கள் பிஜேபி ‘பெரியண்ணனாக நிதிஷ் குமாரை நடத்தும் என்பதும் பொய்த்துப் போய்விட்டது. இருப்பினும் அதைப் பற்றி இங்கு நினவு கூர்வது அவசியமாகிறது. இதன் மூலம் நிதிஷ் குமார் – மஹாகட்பந்தன் ஆகியவைகளின் குமாரை இந்திய அளவில் மோடிக்கு எதிராக பிரதம மந்திரிப் பதவியில் உட்காரவைக்கும் பேராசை நிராசையாகி, நிதிஷை பிஹார் எல்லைக்குள் உலாவரும் அரசியல் வாதியாக குறுக்கி விட்டது. முன்பு போல் அவர் ஆர்.ஜே.டி.யுடன் மீண்டும் உறவு கொள்வார் என்று தேஜஸ்வியின் கனவு பகல் கனவாகத் தான் முடியும் என்று நிச்சயம் சொல்லாம்.
கூட்டணி கட்சி என்ற அடிப்படையில் பீகாரில் வந்து பிரச்சாரம் செய்ய இருந்த மோடியை நீ எல்லாம் வந்து பிரச்சாரம் செய்து நான் வெற்றி பெற வேண்டிய அவசியம் இல்லை என்று கடந்த காலத்தில் மோடியை அலட்சியம் செய்த மனிதன் தான் இந்த நிதீஷ் குமார்
மோடியை பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவித்ததை எதிர்த்து பாஜக கூட்டணியை விட்டு விலகிய மனிதன் தான் இந்த நிதீஷ் குமார் ( தன்னை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்ற நப்பாசையில்).
பீகார் வெள்ளத்திற்கு நிவாரண நிதியாக குஜராத் முதல்வராக இருந்த மோடி அனுப்பிய பணத்தை திருப்பி அனுப்பி மோடியை அசிங்கப்படுத்திய மனிதன் தான் இந்த நிதீஷ் குமார்.
இவ்வளவு வீம்பு பிடிச்ச குமாரை கடவுளே பார்த்து நிதீஷ் வாயாலேயே மோடி நீங்கள் பீகார் வாருங்கள் எனக்காக பிரச்சாரம் செய்யுங்கள் என்று பேச வச்சான் பாரு கடவுள்!
அதன் அடிப்படையில் மோடி பீகாரில் தீவிர பிரச்சாரம் செய்து நிதீஷ் மேல் இருந்த வெறுப்பினால் மகா கட்பந்தன் வசம் போக இருந்த பீகார் ஆட்சியை காப்பாற்றியுள்ளார்.
புல்வாமா தாக்குதல் மோடியால் தேர்தலுக்காக திட்டமிட்டு மோடி நடத்திய நாடகம் என்று பொய் பிரச்சாரம் செய்த ராகுலுக்கு, பாக்கிஸ்தான் மந்திரியே நாங்கள் தான் தாக்குதல் நடத்தினோம் என்று பேச வச்சான் பாரு கடவுள்.
அதன் விளைவாக 70 தொகுதியில் போட்டி போட்ட காங்கிரஸ்சை 19 தொகுதியல் மட்டும் ஜெயிக்க வைத்து, 51 தொகுதியில் தோற்கடிக்க செய்து தேஜஸ்ஸை முதல்வர் ஆவதை காங்கிரஸ் தான் கெடுத்து விட்டது என்று அனைவரையும் பேசவச்சான் பாரு கடவுள்
அத்தோடு நில்லாத கடவுள், காங்கிரஸ்க்கு கொடுக்கும் தொகுதிகள் என்பது நாமே நம் தலையில் மண்ணை அள்ளிப்போடும் செயல் என்று பிற மாநில கட்சி தலைவர்களை சிந்திக்க வச்சான் பாரு கடவுள்!
இப்போது
நீங்களே சொல்லுங்கள் கடவுள் மோடிக்கு ஆதரவாக இருக்கிறாரா இல்லையா ? என்பதை!
Comments