Posts

Showing posts from October, 2019

அலைகடலே! அடியேனின் வணக்கம்

Image
‘அலை கட லே! அடியேனின் வணக்கம்' என்று எட்டு பத்திகளில் மோடி பாக்கள் புனைந்துள்ளார். அதன் இந்தி மூலம் அவரது கையெழுத்திட்டு வெளியிடப்பட்டுள்ளது. அதன் ஆதார பூர்வமான தமிழாக்கம் மோடியால் அவரது டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.   இங்கு மூலமான ஹிந்தி மொழிக் கவிதையுடன் தமிழ் மொழிபெயர்ப்புக் கவிதையும் இங்கே உள்ளன. 

மாமல்லபுரம் படைத்த மாபெரும் சரித்திர நிகழ்ச்சி

Image
அக்டோபர் 11 – 12, 2019 – தேதிகள் இந்திய – சீன தலைவர்கள் முறைசாரா உச்சி மா நாட்டில் சென்னையிலுள்ள கடற்கரை கற்கோயிலான மாமல்லபுரத்தில் சந்தித்து உரையாடியதுடன், அங்குள்ள கலைநய பல்லவ காலத்துச் சிற்பங்களை ரசித்ததுடன் அடையார் கலாச்சேத்திராக் குழுவினர்களின் இந்தியாவின் கலாச்சாரத்தைப் பறை சாற்றும் கலை நிகழ்ச்சிகளையும் ரசித்து இரண்டு நாட்கள் இரு தலைவர்களான பாரதப் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஷி ஜிங்பிங்கும் மிகவும் நட்புடன் பழகியது உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. மாமல்லபுரத்தில் காண வேண்டிய அர்ஜுனன் தவம், கிருஷ்ணாவின் வெண்ணெய்ப் பாறை, ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட ஐவர் ரதங்கள், கடற்கரைக் கோயில் போன்ற பல்லவர்காலத்து அற்புத சிற்பக் கலைத் திறனை எல்லாம் சீன அதிபர் ஷி ஜிங்பிங்குக்கு மோடியே விளக்கிய உள்ளார். அந்தத் தலைவர்கள் இருவரும் கைகளைக் கோர்த்தபடி பல இடங்களில் காணப்பட்டனர். மோடி தமிழ் நாட்டின் பாரம்பரிய வேஷ்டி – அங்கவஸ்திரம் அணிந்து ஷி ஜிங்பிங்கை வரவேற்றுப் உரையாடியது தமிழ் மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. அந்த சரித்திரம் வாய்ந்த சந்திப்பில் சக்தி வாய்ந்த சரித்தி...

ஹிந்துப் பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள்

Image
சத்யமேவ ஜெயதே! ஹிந்துப் பத்திரிகையின் பாரபக்ஷ் - அதர்ம வெளியீடுகள் ஆக்கம்: எஸ். சங்கரன், ஆசிரியர் இது ஒரு பெரிய குற்றச் சாட்டு என்பதை உணரும் போது அதற்கான ஆதாரங்கள் – ஆணித்தரமான ஆதாரங்கள் உங்களிடம் இருக்கிறதா? – என்று வாசகர்கள் கேட்பது என் காதுகளில் விழுகிறது. நானும் நிதானம் தவறாமல் அதி ஜாக்கிரதையாகத் தான் இந்தக் குற்றப்பத்திரிகையை உங்கள் முன் சமர்ப்பித்து அதற்கான விளக்கத்தையும் உங்கள் முன் படைக்கிறேன். நீங்களும் என் ஆதாரத்தின் சக்தியை உணர்ந்து ‘ஆமாம், ஹிந்து அதர்மமாக செய்திகளை வெளியிட்டுள்ளது’ என்று ஒப்புக் கொள்வீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. சமீபத்தில் ஆங்கில ஹிந்து தினசரி வெளியிட்ட மூன்று செய்திகளை நான் சுட்டிக் காட்ட விழைகிறேன். 1.    07-06-2019 – முஸ்லீம் ஈத் கொண்டாட்டத்தின் போது 700-க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் கூட்டத்தில் ‘ரெயின்போ டான்ஸ் குருப்’ பெண்களை ஆடைகளைக் கலைந்து நிர்வாணமாக ஆடச் சொன்ன செய்தியைப் பற்றி ஹிந்துவின் மூத்த நிருபர் நீனா வியாஸ் வெளியிட்ட கருத்துக்கள். 2.    அக்ஷய பாத்திராவின் கர்நாடகாவின் பள்ளிப் பிள்ளைகளு...

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

Image
முக்குணங்கள் என்றால் அவைகள் சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம் என்று பகவத் கீதையில் பகவான் கிருஷ்ணன் விளக்கம் சொல்கிறான். சதுர்வர்ணம் என்று கீதையில் சொல்லி இருப்பது நான்கு வர்ணம் – அதாவது நான்கு நிறம் என்பதைக் குறிக்கும் சொல்லாகும். அந்த நான்கு வர்ணங்களுக்கும் ஆணி வேர் முக்குணங்களாகும். அந்த மூன்று குணங்களையும் மூன்று நிறங்களாக உருவகப்படுத்தி அதன் தன்மையை வெளிப்படுத்துவார்கள். சத்துவ குணம் வெளுப்பு, ரஜோ குணம் – சிகப்பு; தமோ குணம் – கருப்பு. இந்த மூன்று குணங்களையும் முறையே – தூய்மை, வலிமை, எளிமை என்றும் வகுக்கலாம். பிருக்ரிதி என்ற இயற்கை பஞ்ச பூதங்கள் என்று சொல்லப்படும் ஐந்து மூலப் பொருள்களான – காற்று, தீ, நீர், நிலம், ஈதர் ஆகியவைகளின் ஒருங்கிணைப்பால் உண்டானது. அவைகள் தான் அனைத்து பிறப்புக்களுக்கும் தாயாய் இருந்து, பரப்பிரம்மம் என்ற தகப்பனால் ஜீவ விந்து பெற்று உலகத்தின் இனப்பெருக்கம் உண்டாகிறது. உயிரை உடலுடன் இணைப்பது அந்த மூன்று குணங்களாகும்.    இப்போது அந்த மூன்று குணங்களின் தன்மைகளைப் பற்றி பகவான் கிருஷ்ணன் கீதையில் விளக்கியதைப் பற்றிப் பார்ப்போம். பொ...