ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை


ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி – 23-08-2019 – வெள்ளிக் கிழமை




ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் அஷ்டமி திதி தினத்தன்று கிருஷ்ண ஜெயந்தி எனும் கிருஷ்ணர் அவதரித்த தினமாக கொண்டாடப்படுகின்றது

இந்தாண்டு ஆகஸ்ட் 23ம் தேதி கிருஷ்ணர் அவதரித்த அஷ்டமி திதி வருவதால், அன்று கிருஷ்ண ஜென்மாஷ்டமி எனும் கிருஷ்ண ஜெயந்தி கடைப்பிடிக்கப்பட் உள்ளதுஅந்த புனிதமான நாளில் கிருஷ்ணரின் காயத்திரி மந்திரம் ஜெபித்தால் அபிரிமிதமான பலன் உண்டு.

கிருஷ்ணர் காயத்ரி மந்திரம் :

ஓம் தேவகிநந்தனாய வித்மஹே
வாசுதேவாய தீமஹி
தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்

கிருஷ்ணன் அருளிய கீதை ஒரு அற்புதமான புனித இந்து தர்மத்தைப் 

போதிக்கும் பக்தி நூலாகும். அவரது பிறந்த நாளில் அந்த நூலை 

அனைத்து இந்து மதத்தினரும் பாராயணம் செய்ய முடிவெடுத்து தினமும்

சில ஸ்லோகங்களை பக்தியுடன் படிக்க வேண்டும். 

அதன் பொருளை அறிந்து ஓதுவது இன்னும் சாலச் சிறந்ததாகும். கீதை 

வேதத்திற்கு ஈடாகப் போற்றப்படுவதினால், அதன் மகிமையை உணரலாம்.

அனைவருக்கும் கண்ணனின் கடாஷ்டம் கிட்ட வாய்மை அவன் புகழ் 

பாடி தாள் பணிகிறது.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017