கர்நாடக அரசியல் நாடகம்

கர்நாடகாவின் எம்.எல்.ஏ.க்களின் ராஜினாமாவிற்கு முன் அதன் அசெம்பளியின் கட்சிகளின் நிலவரம் இது தான்: மொத்த அசெம்பளி மெம்பர்கள்: 224. அதில் பி.ஜே.பி. 105, காங்கிரஸ் 79, ஜேடிஎஸ் 37, பி.எஸ்.பி 1, மற்றவர்கள் 2. காங்கிரசும் – ஜேடிஎஸ் இணைந்து பிஜேபியை ஆட்சி அமைக்க வரவிடாமல் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்க கவர்னரிடம் கோரினாலும், அதிக இடங்களைப் பெற்ற கட்சி என்ற நிலையில் பிஜேபியின் எடியுரப்பாவை முதன் மந்திரியாகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்து, 15 நாட்களில் மெஜாரிட்டியை நிரூபிக்க கவர்னர் உத்திரவிட்டார். அதை காங்கிரஸ் – ஜேடிஎஸ். எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை இரவோடு இரவாக நாடி, உச்ச நீதிமன்றமும் இன்னும் 24 மணி நேரத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்திரவிட்டவுடன், எடியுரப்பா சட்ட சபையில் ஒரு நீண்ட உரை நிகழ்த்தி நம்பிக்கை ஓட்டு எடுப்பதற்கு முன்பாகவே தமது பதவியை ராஜினாமா செய்து விட்டார். அதன் பிறகு காங்கிரஸ் – ஜேடிஎஸ். கூட்டணி ஆட்சி எச்.டி.குமாரசாமி முதல்வர் – ஜி. பரமேஸ்வரா துணை முதல்வராகவும் பதவி ஏற்றனர். ஆனால் கூட்டணியில் ஒற்றுமை இல்லை. சித்தாராமையாவை காங்கிரஸ் ஒரங்கட்ட நினைப்பதாக ...