Posts

Showing posts from February, 2019

ரஃபேல் - பித்தலாட்ட பிரச்சாரத்தின் உச்சம்

Image
"ஜூட் போல், ஜோர்சே போல், பார் பார் போல்" என்று இந்தியில் சொல்வார்கள். அதாவது "பொய் சொல், ஓங்கிச் சொல், ஓயாமல் சொல்" - ராஜீவ் காந்தியின் ஆலோசகரும் ஸ்கேமோனியாவின் நண்பருமாகிய சாம்பிட்ரோடா பப்பு ராகுலுக்கு வழங்கிய அற்புதமான ஆலோசனை இது! பிரச்சினை என்னவென்றால் பப்புவிற்கு லாகிரியின் பாதிப்போ என்னவோ புத்தி சரியாக வேலை செய்வதில்லை. அதனால் சொல்லுகின்ற பொய்யை சாமர்த்தியமாக சொல்லத் தெரியவில்லை. பப்பு இதுவரை விமானத்திற்கு குறிப்பிட்ட விலை 520 கோடியில் இருந்து 740 கோடி வரை! இவரே போய் துணி எடுத்து தைத்து மோடிக்கு போட்டு விட்ட மாதிரி பத்து லட்சம் ரூபாய் கோட் பத்து லட்சம் ரூபாய் கோட் என்று உளறியதை எப்படி ஒரு படிப்பறிவில்லாத அல்லது படித்தும் அறிவில்லாத கூட்டம் நம்பியதோ அதைப் போல இந்த விமான விவகாரத்தையும் பேசித் திரியலாம் என்று கணக்குப் போடுது பப்பு! அந்த கோட் யார் கொடுத்தது எதற்கு கொடுத்தார்கள் என்று தெரியாமல் எவ்வளவு கதை கட்டினார்கள்! பப்பு பத்து லட்சம் என்று சொல்லியதால் அது நாலரைக் கோடிக்கு ஏலம் போய், அந்தப்பணம் கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கு சென்று விட்டது....

ஜெயகாந்தன் பார்வையில் அண்ணாத்துரை

Image
பிணத்தை வைத்துக் கொண்டு அரசியல் நடத்துவது என்பது கம்யூனிஸ்ட்களின் இன்றைய வாடிக்கையான காரியம் . அதுவும் அந்தப் பிணம் இஸ்லாமியர் எந்த விதத்திலும் சம்பந்தப்படாத தலித் பிணமாக இருக்க வேண்டும் . ஆனால் இவர்கள் இதைக் கற்றது நம் கட்டுமரத்திடமும் திமுகவிடமும்தான் என்பது பல இளைய தலைமுறையினருக்குத் தெரியாது . 1969 அண்ணாதுரை இறந்துவிட்டார் . அதை திரு ஜெயகாந்தன் எப்படிப் பார்க்கிறார் என்பதை பாருங்கள் . ஒரு நாட்டின் பெருமைக்குரிய ஜனாதிபதி மறைந்தபோது கூட இல்லாத அளவுக்கு மிக அதிகமான அவலக் குரலை ரேடியோவும் , தமிழக அரசாங்கமும் அருவருக்கத்தக்க முறையில் இங்கு கிளப்பின . இறந்துபோன ஒருவரைப் பற்றி அவர் நமது எதிரியாக இருந்தாலும் நாலு வார்த்தை நல்லதாகச் சொல்ல வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன் . ஆனால் அரசியல் நோக்கம் கருதி வரப்போகும் தேர்தலை மனத்துள் கொண்டு தமிழகத்தில் ஒரு மாயையை உருவாக்குகிற மாரீசத்தனத்தைத் தி . மு . க . தொடர்ந்து செய்வதற்கு அண்ணாதுரையின் பிணத்தையும் , அந்தச் சமாதியையும் பயன...