வறுமை தேசமான ருவாண்டா இனி சுபீட்சமாகும்

ஆப்ரிக்கா நாடான ருவாண்டாவில் இன்று மோடி பால் ககாமே உருவாக்கிய கிரிங்கா என்கிற வீட்டுக்கு ஒரு பசு என்கிற திட்டத்திற்கு 200 இந்திய பசுக்களை ருவாண்டாவின் புகசெரா மாவட்டத்தில் உள்ள ர்வெரு கிராமத்தில் வாழும் ருவாண்டா மக்களுக்கு இந்தியர்களின் சார்பாக பரிசளித்தார். என்னடா..வறுமையில் வாழும் ஒரு ஆப்பிரிக்கா நாட்டுக்கு இந்தியா பசுக்களை தானமாக வழங்குகிறதே! இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தின் அடிப்படை அல்லவா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் ஒரு காலத்தில் ருவாண்டா மக்களை இந்த பசுக்கள் தான் சமுதாயத்தில் உயந்தவர்கள் மற்றும் தாழ்ந்தவர்கள் நிலையை நிர்ணயித்து வந்தது. காலம் காலமாகவே ருவாண்டாவின் இனங்களான துட்சிக்களும் ஹூட்டுக்களும் தவாக்களும் சகோதரர்களாகவே ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தார்கள். சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்களை துட்சிகள் என்றே அழைத்து வந்தார்கள். அவர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த மக்களை ஹூட்டுக்கள் என்று அழைத்து வந்தார்கள். பண்ணை அடிமைகளாக இருந்தவர்களை தவாக்கள் என்று அழைத்தார்கள். ஒரு வீட்டில் பத்து பசுக்கள் இருந்தால் அவர்களை துட்சுக்கள் என்றார்கள்., அதாவது அவர்கள் சமூகத்தில் உ...