சத்தியமேவ ஜெயதே! #ModiWin2019




2019-ல் மோடி மீண்டும் பிரதமராகாமல் இருக்க மசூதி-சர்ச் ஆகியவைகளில் நடக்கும் பிரார்த்தனைக் கூட்டங்களில் பிரசாரம் செய்கிறார்கள். ஆனால் அவைகளை செக்குலர் கூட்டங்கள் கண்டு கொள்வதும் இல்லை; கண்டிப்பதும் இல்லை.

உண்மையில் அவைகளை ரகசியமாக ஆதரிப்பதாகவே படுகிறது. மேலும் மசூதிப் போதகர்கள், சர்ச் பாதிரிமார்கள் ஆகியவர்கள் தேர்தலின் போது நேரிடையாகவே எந்தவிதமான பயமும் இன்றி, தேர்தல் விதிமுறைகள் – இந்திய அரசியல் சட்ட நடைமுறைகள் ஆகியவைகளையும் புறம்தள்ளி மோடிக்கு எதிராக ஓட்டுப் போடும்படிப் பிரசாரம் செய்வதும் இப்போது முன்பை விட அதிகரித்துக் கொண்டு தான் இருக்கிறது.

இதை அனைத்தையும் பெரும்பான்மையான இந்துக்கள் உணருவதாக இல்லை. திண்ணை வேதாந்தம், சங்கப்பரிவார் கூட்டம், வலது சாரிக் கொள்கையினர் – என்று நம்மை நாமே இகழ்ந்து, ஒற்றுமையை இழந்து, குழம்பித் தவிக்கிறோம்.

இந்தியாவின் உண்மையான இருதயமான ஹிந்துமதக் கொள்கையான – எம்மதமும் சம்மதம் – என்பதை இந்துக்களாகிய நாம் கடைப்பிடிக்கிறோம் என்பதைப் பெருமையாகக் கொள்கிறோம். ஆனால் மற்ற மதத்தினர்கள் குறிப்பாக முஸ்லீம்கள் – கிருஸ்துவர்கள் – ஏன் கடைப்பிடிக்காமல் இருப்பதையும் கேள்வி கேட்கும் மனத் தைரியமும் இந்துக்களாகிய நம்மிடம் இல்லை. இந்த நிலை நீடித்தால், நமது கலாச்சாரத்தைப் பறிகொடுத்து மீண்டும் அன்னிய ஆதிகத்தின் பிடியில் விழ வழிவகுக்கும் நிலைக்கு இந்தியா சென்றுவிடும்.  

அதை நிறைவேற்றத்தான், ‘மோடியை ஒழிப்போம்’ என்ற ஒரே கொள்கையுடன் பல இந்திய அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளன.
இந்தியா விழித்து, இந்துக்கள் ஒற்றுமையுடன் இந்த தீய சக்தியினை ஒழிக்க மோடி மீண்டும் பிரதமராக வேண்டும். அதற்கு ஒவ்வொரு இந்துவும் உறுதி பூணவேண்டும். அதற்காகப் பிரார்த்திப்போமாக.  

எஸ். பலராமனின் இ-மெயிலின் (கீழே உள்ளது) தாக்கத்தினால் என் மனத்தில் பட்டதை உங்களுடன் பகிர்ந்துள்ளேன்.

எஸ். சங்கரன்
நாடு நலம்பெற பிரார்த்திக்கும் ஒரு பிரஜை

எஸ். பலராமனின் இ.மெயில்:

NGOக்கள் கிருஸ்த்துவ மிஷினரிகளுக்கு வரும் பணத்தை  சட்டத்தின் மூலம் வரையறைப்படுத்தி கட்டுபடுத்தியாகி விட்டதாய் நினைக்கிறோம். ஆனால் சட்டத்தையும் மீறி, பணம் வங்கி மூலம் கிருஸ்த்துவ மிஷினரிகளுக்கும் வருவதை நானே நேரில் அறியும் சந்தர்பம் சமீபத்தில் வங்கியில் ஏற்பட்டதை அறிந்து, அது என்னைத் திகைக்க வைத்தது.

சில நாட்களுக்கு முன் நான் ஒரு தேசிய வங்கிக்கு சென்ற போது ஒரு வயதான அம்மா என்னிடம் பணம் எடுக்க பாரம் நிரப்பத் தந்தார்கள். ஐம்பதாயிரம் தேவை என கூறினார்கள். ஆனால் அவர்களை பார்த்தால் மிகவும் ஏழ்மை நிலையான பாட்டிதான்.

சரி என அவர் பாஸ்புக்கை பார்த்த போது சில மாதங்களாகவே அவர் அக்கவுண்டில் மாதம் தோறும் 50,60,40 ஆயிரம் என டெப்பாசிட் செய்யப்பட்டதும் இரண்டு  நாட்களிலே அந்த பணத்தை முழுமையாக எடுத்ததும் தெரியவந்தது.

சில சந்தேகங்கள் முளைத்தன எனக்கு.  ஒருவேளை அந்த அம்மாவுக்கு பென்சன் பணம் என்றால் அவர்களால் பாரம் கூட நிரப்பத் தெரியவில்லை. பார்க்கும்போது பலவிதத்தில் இயலாமை தெரிந்தது.

ஒரு வேளை அந்த பாட்டியின் கணவர் அரசு உத்தியோகத்தால் வரும் தொகையா? அவ்வாறு எனிலும் இவ்வளவு பெரிய தொகை மாதாமாதம் வருவதும் எடுப்பதுமாய் இருந்தது சந்தேகிக்க வைத்தது.

அது ஒருவருடைய தனிப்பட்ட விஷயம் என்றும் உதவ வேண்டிய மூதாட்டிக்கு இடையூறு செய்கிறோமோ என்றே நினைத்தாலும் என் வங்கி நண்பரிடம் விசாரித்ததில் அதிர்ச்சியாயிருந்தது. அதாவது ஒவ்வொரு கிறிஸ்துவ சபைக்கும் அதில் உள்ள இது போன்ற வயதான நம்பிக்கையான விசுவாசிகளை தேர்ந்து எடுத்து அவர்கள் அக்கவுண்டிற்கு மாதாமாதம் தவறாது பணம் வருவதும் சம்பந்தப்பட்டவர்கள் அதை அப்படியே அங்குள்ள சர்ச் பாதிரியாரிடம் பணத்தை ஒப்படைத்துவிடுவார் என்றும் இதுபோல் எல்லா கிறிஸ்துவ சபைகளிலும் இதுபோன்று கூத்து தொடர்ந்து நடைபெறுகிறது என்றும், இந்த அம்மாவும் நேராக பணத்தை அப்படியே சர்ச் பாதிரியாரிடம் கொடுத்துவிடுவார் என்றும், அதன் மூலம் எப்பொழதும் போல் அவர்கள் ஊழியக் கூட்டங்களுக்கும் பிரச்சாரங்களுக்கும் சுகபோக வாழ்க்கைக்கும் குறுக்கு வழியில் வந்து கொண்டிருப்பதை சொன்ன போது திகைக்க வைத்தது.

சட்டம் மூலம் என்ன தான் இது போன்ற அக்கிரமங்களை கட்டுபடுத்த நினைத்தாலும் கயவர்கள் வயதான ஏழைகளை மதத்தை பயன்படுத்தி அவர்களை பகடைகாய்களாக்கி பாதிரிகள் பண மழையில் குதூகலித்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

இதனால் விளையும் பிரச்சனைகளை நாம் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியாது. இதன் பின்விளைவுகளை யோசிக்க பகீர் என்கிறது.

இதனால் நம் தேச இறையாண்மையே சிதைந்து விடும் பல சதிகள் இந்த வெளிநாட்டு பண பரிவர்த்தனை மூலம் அரங்கேற வாய்ப்பிருக்கிறது.

இதை எச்சரிக்கையுடன் கையாண்டு இதிலுள்ள ஆபத்தை ஆரம்பத்திலையே வேறோடு களைந்து விபரிதங்களை தவிர்க்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017