மோடி தலைமையில் இந்தியாவின் வளர்ச்சிப் பரிணாமத்தின் சில துளிகள்

எதைச் செய்தாலும் எதிர்க்கும் எதிர்க்கட்சிகளின் போராட்டங்களை சமாளித்து, இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல பலவிதத்திலும் முயன்று வருகிறார் மோடி. அதில் பல வெற்றியும் பெற்றுள்ளார் என்பதற்கு நான்கு திட்டங்கள் பற்றி உங்களிடம் சுருக்கமாகப் பகிர்ந்து கொள்வது தான் இந்த மாத தலையங்கத்தின் நோக்கம். 
  1.   இந்திய விண்வெளி ஆராட்சி நிலையம் ANTRIX என்ற தனது கிளை நிறுவனத்தின் மூலம் 2014-லிருந்து நான்கு ஆண்டுகளில் 200 அயல் தேசத்துச் செயற்கைக் கோள்கைகளை விண்ணில் செலுத்தி ரூபாய் 700+ கோடி லாபம் ஈட்டியது பற்றிய தகவல்.
  2. இந்திய விண்வெளி ஆராட்சி நிலையத்தின் கிளையான விக்ரம் சராபாய் விண்வெளி நிலையம் உருவாக்கிய லித்தியம் அயனி மின்கலம் (lithium-ion) என்ற பாட்டரி செல் டெக்னாலஜியை மேக்-இன்-இந்தியாவின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்கூடங்களுக்கு அவைகளை மேம்படுத்தவும், சந்தைப் படுத்தவும் விற்று லாபம் சம்பாதிப்பதுடன் மாசற்ற சூழ்நிலைக்கு உதவும் செய்தி பற்றிய விளக்கம்.
  3. பம்பை குர்லா ரயில்வே கூடத்தில் மழைகாலத்தில் 12 அங்குலம் தண்ணீரிலும் செல்லும் சக்தி கொண்ட Water Proof Engine-யை உருவாக்கி வெற்றி கண்ட மத்திய ரயில்வே நிர்வாகம் பற்றிய விபரம்.
  4. நயா ரய்பூர் என்ற ஸ்மார்ட் சிட்டியை 10-வது சிட்டியாக மோடி தற்போது நாட்டிற்கு அர்ப்பணித்த விபரம்.  


   1.   இஸ்ரோ சாட்டலைட்: இந்திய விண்வெளி நிலையம் இதுவரை விண்ணில் செலுத்திய சாட்டலைட் 237 – முதல் முதலில் இஸ்ரோ 26 மே 1999 ஆண்டு தான் விண்ணில் சாட்டலைட்டைச் செலுத்த ஆரம்பித்தது. முதல் சாட்டலைட் 1999 ஆண்டு செலுத்தியதிலிருந்து 2013 ஆண்டு வரை – 14 ஆண்டுகளில் 35 சாட்டலைட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. ஆனால், மோடி அரசு பதவி ஏற்ற பிறகு கடந்த 4  ஆண்டுகளில் 202 சாட்டலைட்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளன. 28 அந்நிய நாட்டு சாட்டலைட்கள் நமது இஸ்ரோ மூலம் செலுத்தப்பட்டுள்ளன.

2015-ம் வருடத்திலிருந்து 2017 வருடம் வரை – இரண்டு வருடத்தில் இஸ்ரோ ஈட்டிய லாபம் 700+ கோடியைத் தாண்டி உள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால், இஸ்ரோவின் முக்கிய வாடிக்கையாளர் யு.எஸ்.

ஜுன் மதம் 2017 விண்ணில் செலுத்திய 200 செயற்கைக் கோள்களில் 101 நானோ சாட்டலைட் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த வெற்றியின் காரணமாக இனி ஒவ்வொரு வருடமும் அந்நிய நாட்டு 12 சாட்டலைட்களை விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவெடுத்து, இந்தியாவிற்கு லாபம் ஈட்டும் ஒரு பெரிய நவரத்தினா நிருவனமாக உருவாகி உள்ளது.

இந்திய வளர்ச்சியில் வேகமும் விவேகமும் உள்ள தலைவரால் தான் இது சாத்தியம். 14 ஆண்டுகளில் செலுத்திய 35 சாட்டலைட்கள் எங்கே, 4 ஆண்டுகளில் செலுத்தப்பட்ட 202 சாட்டலைட்கள் எங்கே? மேலும், ‘மோடி முதன் முதலில் ராக்கெட்டை ஸ்ரீஹரி கோட்டாவிலிருந்து இஸ்ரோ ஏவும் போது, அதை எதிர்க்கட்சிகள் ‘இதுவா முக்கியம்? இது வீண் செலவு’ என்று விமரித்தவர்கள், இப்போது இஸ்ரோ லாபம் ஈட்டும் ஒரு நிருவனமாக, பலரும் பயன்படும் வகையில் அமைந்து விட்டதைப் பற்றி ஒருவரும் வாய் திறக்காமல் மவுனமாகி விட்டனர். மேலும், இஸ்ரோ மூலம் வானிநிலை, பருவமழை, மின்வளி தொடர்புத் துறை, விவசாயத் துறை ஆகியவைகளும் இதனால் பயன் அடைவது ஒரு பெரும் வரப்பிரசாதமாகும். 


    2.   விக்ரம் சராபாய் நிருவனம் உருவாக்கிய லித்தியம் அயனி மின்கலம்:

சுற்றுச் சூழல் பாதுகாக்க – சுத்தமான சக்தி – என்ற கொள்கையை இந்தியா ஏற்றுக் கொண்டுள்ளது. அதன் காரணமாக சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் பெட்ரோல் – டீசல் போன்றவைகளை உபயோகப்படுத்தும் வாகனங்களை எலெக்ட்ரிக் பாட்டரிகள் மூலம் செயல்படுத்தி, ஸீரோ எமிஷன் கொள்கைக்கு ஆக்க பூர்வமான நடவடிக்கையாக லித்தியம் அயனி மின்கலம் பயன்படும்.

தற்போது லித்தியம் அயனி மின்கலம் இந்தியாவில் தயாரிக்கப் படுவதில்லை. ஆகையால், அதற்கு ஜப்பான், சீனா போன்ற நாட்டிலிருந்து இறக்குமதி செய்யும் நிலைதான் உள்ளது. ஆகையால், அதைத் தவிர்க்க லித்தியம் அயனி மின் கல டெக்னாலஜியை மேக்-இன்-இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவில் அதை உற்பத்தி செய்யும் திறனுள்ள கம்பனிகளுக்கு குறைந்த பட்ச விலையான ரூபாய் ஒரு கோடி என்று விக்ரம் சராபாய் நிருவனம் விற்கத் தயாராக உள்ளது.

இதன் மூலம் மிகப் பெரிய லித்தியம் அயனம் பேட்டரிகளை உற்பத்தி செய்யும் பல தொழிற்சாலைகள் உருவாகி, எலக்ரிக் வண்டிகளுக்கு அதைப் பொருத்தி, விற்கும் நிலை இந்தியாவில் உருவாகும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். மேலும் இறக்குமதியால் உண்டாகும் அயல்நாட்டு நாணய இருப்பும் பாதிக்காது. சுற்றுச் சூழல் பாதுகாப்புடன், ரூபாய் 7 டிரிலினியன் அளவில் வருடத்திற்கு குரூட் ஆயில் இறக்குமதியும் தடுக்கப்படும். அத்துடன் போன் செல்களுக்கும் இந்தவகை பாட்டரிகளைப் பயன்படுத்தி, இந்தியாவில் உற்பத்தியாகும் செல்களின் விலையும் கணிசமான அளவில் குறையும். 


   3.     வாட்டர் ப்ரூஃப் ரயில் என்ஜின்:

பம்பாயில் மழைகாலங்களில் ரயில் தண்டவாளங்களில் தண்ணீர் தேங்குவதால், அந்த தேங்கும் தண்ணீர் 4 அங்குலம் அளவு வரை இருக்கும் அளவில் தான் இப்போதுள்ள என்ஜின்களினால் தண்டவாளங்களில் ஓட்ட முடியும். இதற்கு ஒரு முடிவு கட்ட பம்பாய் குர்லாவின் மத்திய ரயில்வே நிருவாகம் தனது ஆய்வுக் கூடத்தில் வாட்டர் புரூஃப் என்ஜினை உருவாக்கி உள்ளது. 

இந்த என்ஜின் தண்டவாளத்தில் 12 அங்குலம் நீர் தேங்கி இருந்தாலும், ஓடும் திறமை உள்ளது. சென்ற ஆண்டு மழையில் பல என்ஜின்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. மேலும் அந்த என்ஜின்களில் தண்ணீர் புகுந்து, அவைகளைச் சரிசெய்ய பணவிரயம் மற்றும் நேரம் ஆகியவைகளும் வீணாகின்றன. அதற்கு ஒரு விமோசனம் இப்போது கிடைத்துள்ளது. 


அத்துடன் ஸ்லீப்பர் கோச் ஆகியவைகளில் புதிதான வசதிகளும் மேக்-இன்-இந்தியா திட்டம் மூலம் இந்தியாவில் உள்ள ரயில்வே தொழிற்கூடங்களில் உற்பத்தி செய்யப்பட்டு உபயோகத்திற்கு வந்து கொண்டிருக்கின்றன.




   4.   10-வது ஸ்மார்ட் சிட்டி நயா ராய்ப்பூர் 14-ம் தேதி ஜூன் அன்று மோடி நாட்டிற்கு அர்ப்பணித்தார்:

நயா ராய்ப்பூர் ஸ்மார்ட் சிட்டி முதன் முதலாக உருவாகும் பசுமை ஸ்மார்ட் நகரம் என்ற பெருமை பெறுகிறது. ஏற்கனவே ஒன்பது ஸ்மார்ட் நகரங்கள் நான்கு ஆண்டுகளுக்குள் உருவாகி உள்ளன. அமதாபாத், வதோதரா, சூரத், பூனா, நாக்பூர், ராஜ்காட், விசாகப்பட்டிணம், போபால், காக்கிநாடா ஆகிய நகரங்களாகும்.

இந்த ஸ்மார்ட் நகரங்களின் குடிநீர், மின்சாரம், துப்புரவு, போக்குவரத்து, ஒருங்கிணைந்த கட்டட மேனஜ்மெண்ட், இணைய தள வசதிகள் ஆகியவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்து, மக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதான் இதன் நோக்கம்.

மற்றும் மக்களின் பாதுகாப்பும் முதலிடம் வகிக்கிறது இந்த ஸ்மார்ட் நகரங்களில். ஆகையால் அதற்கான கட்டமைப்புகள் அதில் உண்டு.
ஜனதா தர்சனம் என்று மக்களைக் கூட்டி, அவர்களிடம் மனுக்கள் பெற்று, மீடியாவில் போட்டோ எடுத்து, வோட்டுச் சேகரிக்க முயலும் அரசியல் வாதிகளுக்கு இந்த ஸ்மார்ட் சிட்டி வேட்டு வைத்து விடும் என்பதையும் நாம் இந்த சமயத்தில் தெரியப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

‘கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே!’ என்ற பரமாத்மா கிருஷ்ணனின் கீதை வாக்கிற்கு இணங்க மோடி நாட்டிற்காக உழைக்கிறார். மக்கள் அவரது உழைப்பைப் பார்த்து, மற்ற சில குறைகளை மறந்து, இந்தியா செழித்து உயர வேண்டும் என்று எண்ணி அடுத்த வருட தேர்தலில் மோடி மீண்டும் அமோக வெற்றி பெற்று பிரதமராக ஆட்சி செய்ய ஆசி வழங்க வேண்டும் என்று பிரார்த்திப்போமாக. 

எந்தவிதமான முயற்சியும் இன்றி சோனியாவின் சொற்களுக்கு அடிமையாகி சென்ற 10 ஆண்டுகளாக இரு முறை தொடர்ந்து மவுன குரு மன்மோஹன் சிங்கை ஆட்சி செய்ய அனுமதித்த இந்திய மக்கள் மோடிக்கு இன்னும் ஒரு முறை ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய ஓட்டுப் போட்டு ஆதரித்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கு ஒரு பலமான அடித்தளம் அமைக்க உதவிகரமாக இருக்கும்.

ஜெய் பாரத்! ஜெய்1 பாரத்மாதா! வந்தே மாதரம்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017