திண்ணைக் கச்சேரி
பொதுஜனம்:
மோடி இந்தியாவின் வளர்ச்சிக்குப் பாடுபட்டாலும், மோடியை வருகிற 2019 லோக் சபா தேர்தலில்
மீண்டும் வெற்றி அடையாமல் இருக்க எதிர்க்கட்சிகள் ஒன்றாகச் சேர்ந்து தேர்தலில் போட்டி
போட வியூகம் வகுத்துள்ளார்கள். இது ஒரு பக்கம் இருக்க, நகர மாவோயிஸ்டுகள் – நக்சலைட்டுகள்
ஒன்றாகத் திட்டம் போட்டது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
பீமா
கோரேகாவுங் என்ற இடம் மஹாராஷ்ரா பூனாவில் உள்ளது. அந்த இடத்தில் வெற்றித் தூண் ஒன்றை
ஆங்கிலேயரின் கிழக்கு இந்திய கம்பனி மாஹர் என்ற தலித் இனத்தவர்கள் பங்கேற்று பேஷ்வா
பைஜிராவ் II என்ற பிராமண இனத்துக் குறுநிலமன்னரை 1818 ஆண்டு வெற்றி பெற்றதற்கு அடையாளமாக
நிறுவி உள்ளனர். அம்பேத்கர் அந்த வெற்றித் தூணை முதல் முதலாக 01-01-1927 அன்று பார்வை
இட்டு, உரையாற்றிச் சொன்னார்:”மாஹார் என்ற தீண்டத்தகாதவர்களாக தலித்துக்கள்தான் ஆங்கிலப்
படையில் சேர்ந்து பெஷாவர் உயர் குடிப்பிரமண
இனத்தவர்களை வென்றுள்ளனர்’”
இதன்
மூலம் அம்மேத்கர் இந்த வெற்றித் தூண் தலித் இனத்தவர்களின் உயர் ஜாதியினரின் தீண்டாமைக்
கொள்கைக்கு எதிராக போராடி வென்ற ஒரு வெற்றிச் சின்னம் என்பதாகத் தெரிவித்த காரணத்தால்,
ஒவ்வொரு வருடமும் ஜனவரி முதல் தேதியில் தலித் இனத்தவர்கள் ஒன்று கூடி பேரணி கூட்டங்கள்
போராட்டங்கள் நடத்துவது வழக்கமான ஒன்றாகி விட்டது. அதற்கு ஆள் பலம், பண பலம் ஆகியவைகளை
பீமா – கோரேகாவுங் ரான்ஸ்தாம் சேவா சங்கம் அமைப்பும், எட்கார் பாரிஷிதத் என்ற தீவிர
மாவோயிஸ்டுகள் அமைப்பும் ஒன்று சேர்ந்து
இப்போது முன்பை விட அதிகமாக தலித்துக்களை ஒன்று திரட்டி வன்முறையில் போராட ஊக்கிவிக்கிறார்கள்.
அதன் காரணமாகத் தான் இந்த வருடம் ஜனவரி முதல் தேதியில் பீமா – கோரேகாவுங்கில் உள்ள
வெற்றித் தூணை வணங்கும் விதமாக – அதுவும் இந்த ஆண்டு 200 வருடங்கள் பூர்த்தியாகியதால்
– அதிக அளவில் கூட்டம் சேர்ந்து, கலவரமும் வெடித்து, பொது சொத்துக்களும் சேதம் அடைந்துள்ளன.
அதன் தாக்கம் இந்தியாவில் தொடர்ந்து அதிகம் நிகழவில்லை
என்பது அந்த நகர மாவோயிட்டுகளின் மதிப்பீடாக இருப்பதால், இந்தியா முழுவதும் போராடவும்,
மோடியை ரோட் ஷோவின் போது ராஜிவ் காந்தியை ஒழித்துக் கட்டியது போல் தீர்த்துக் கட்டவும்
திட்டம் தீட்டியது இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
விமரிசகர்: ‘தலித்
போராட்டங்கள் நடத்தினாலும், பா.ஜ.கட்சி 15 மாநிலங்களுக்கும் மேலாக வெற்றி பெற்றுள்ளது.
அதை முறியடிக்க வன்முறைப் போராட்டங்கள் நடத்த, 8 கோடி அளவில் செலவு செய்து எம்-4 துப்பாக்கிகள்,
4 லட்சம் குண்டுகள் சேமிக்க வேண்டும்’ என்ற பகிரங்கக் கடிதம் கிடைத்துள்ளது. அதன் பின்னணியில்
எல்கார் பாரிஷத் செயல்படுகிறது. ஜிக்னேஷ் மேவானி – அம்பேத்கரின் மகன் பாரிப் மஹுஜன்
மஹா சங்கின் தலவரான பிரகாஷ் அம்பேத்கர், மற்றும் காங்கிரஸ் ஆகியவைகளுக்கும் இந்த வன்முறைப்
போராட்டத்தைத் தூண்டியதான குற்றச் சாட்டும் உள்ளது. ஆனால், அவைகளை எல்லாம் பா.ஜ.கட்சியின்
வருகிற லோக்சபா தேர்தலில் வெற்றி பெருவதற்காகப் போடும் பிராசார தந்திரம் என்று குற்றம்
சாட்டுகின்றனர். ஒரு நாட்டின் பிரதமரைக் கொல்ல சதி செய்வதாக – ஒரு விரிவான கடிதம் கிடைத்த
பிறகும், அதைக் கண்டனம் செய்யாமல் எதிர்க்கட்சிகள் மவுனம் சாதிப்பது மிகவும் கீழ்த்தரமான
அரசியலாகும் என்பதை இந்திய மக்கள் உணர்ந்தாலே போதும்.
நிருபர்:மோடியை தேர்தலில்
தோற்கடிப்பது தான் தங்கள் கொள்கை என்பதைச் சொல்லும் எதிர்க்கட்சிகள், அவர்கள் நாட்டின்
முன் எந்தவிதமான கொள்கைத் திட்டமும் இது வரை வைக்க வில்லை. ஜி.டி.பி. அதல பாதாலத்திற்குச்
செல்லும் என்று பாராளுமன்றத்தில் சொன்ன மன்மோஹன் சிங் இப்போது ஜி.டி.பி. 7.2% அளவிற்கு
உயர்ந்து, இது இன்னும் அதிக அளவில் உயரும் என்றும் கணிக்கப்படுகிறது. பொருளாதார நிபுணர்
என்று போற்றப்படும் மன்மோஹன் சிங் தன் கணிப்பு தவறிவிட்டதைப் பற்றி வாயே திறக்க வில்லை.
இந்தியாவின் வளர்ச்சியைத் தடுக்கும் செய்கைகளாகவே எதிர்க்கட்சிகள் ‘மோடி வெறுப்பு விதையையே’
இந்திய மண்ணில் விதைத்து, இந்தியாவை ஒரு கலவர பூமியாக உருவாக்க முனைகிறார்கள்.
விமரிசகர்: பீமா –
கோரேகாவுங்கில் உள்ள வெற்றித் தூண் நம்மை அடிமைப் படுத்திய ஆங்கில வியாபாரிகளால் நிறுவப்பட்டது.
அந்தத் தூணில் 49 வீரர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அதில் 22 பேர்கள் நாக் என்ற
சொல்லால் குறிப்பிட்டிருப்பதால், அவர்கள் மாஹர் என்ற தலித் இனத்தவர்கள் என்று கருதப்படுகின்றது.
ஆனால், அவர்கள் எதிர்த்த எதிரணியான பெஷாவர் அணியிலும் பல மாஹர் தலித் வீரர்கள் இருந்ததையும்
இங்கு குறிப்பிட வேண்டும்.
பெஷாவர் அணியில் பல முஸ்லீம் வீரர்கள் பங்கேற்றுள்ளார்கள்.
அவர்களும் மாஹர் வீரர்களால் கொல்லப்பட்டதும் உண்மையே. மேலும் இந்த வெற்றி விழா இந்திய
சுதந்திரத்திற்கு எதிரான ஒன்று என்பதையும் விஷயம் அறிந்த தலித் மக்கள் உணரவேண்டும்.
ஏதோ பிராமணத் துவேஷம் - தீண்டாமை ஒழிப்பு என்பதற்காக, அந்நிய ஆங்கிலேயரின் - அதுவும்
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பனியின் வெற்றியை தலித் மக்களின் தீண்டாமையை எதிர்த்த வெற்றி
என்று கருதிக் கொண்டாடுவது, இந்திய இறையாண்மைக்குக் குந்தகம் என்பதை அவர்கள் உணரவேண்டும்.
மோடி அரசு இட ஒதிக்கீட்டை வேலை கிடைப்பதற்கு மட்டும் இல்லாமல், பதவி உயர்விலும் இப்போது
நீடித்துள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவை மாற்றும் நிலையாகும். இது தலித் சமூகத்தினரை ஓட்டு
வங்கிக்காக பி.ஜே.பி. செயல்படுவதாகத் தான் சொல்ல வேண்டும். இதை எல்லாம் செய்தாலும்
தலித் மக்கள் திருப்தி அடைந்து பி.ஜே.பி.யை ஆதரிப்பார்களா? என்பது தேர்தல் சமயத்தில்
தான் தெரியவரும்.
வாசகர்: மோடி எதிர்ப்பு
அணியில் யார் பிரதம மந்திரியாக நிறுத்தப்படுவார்? என்பதில் ஒரு தெளிவு இல்லை. லோக்
சபா தேர்தல் குழப்பத்தில் முடிந்தால், அதைத் தான் அவர்கள் எதிர்பார்ப்பதாகத் தெரிகிறது.
பிரதமராக ராஹுல், மம்தா, சரத்பவார், சந்திரசேகர ராவ், சந்திரபாபு நாயுடு, மாயாவதி,
அகிலேஷ், அர்விந் கெஜ்ரிவால் ஆகியவர்கள் போட்டியில் இருப்பதாகப் படுகிறது. ஆனால், அவர்கள்
வெகு ஜன மதிப்பில் அதிகமாக ஏற்கப்படுவதாக இல்லை என்பது தான் இன்றைய யதார்த்த நிலை.
ஆகையால், யார் வேண்டுமானாலும் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படலாம் என்றாலும், அவர்களின்
தகுதி மிகவும் முக்கியம். அதில் மோடிக்குச் சமமாக ஒரு தலைவர் எதிர்கட்சியில் இல்லை
என்பதை அவர்களே ஒப்புக்கொள்கிறார்கள். இருப்பினும் இந்திய மக்களின் தேர்வில் தான் இந்தியாவின்
எதிர்காலமே இருக்கிறது.
குராப்பானா பால்யா என்ற தொகுதியில் உள்ள முஸ்லீம்கள்
90% பேர்கள் ஒட்டு மொத்தமாக காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டுள்ளனர். ஆனால் இந்துக்களின்
ஓட்டுக்கள் எப்போதுமே பிரிந்து விடுகின்றன.
நல்ல வேளையாக சித்தராமையாவின் சித்து வேலையான
– தனிக்கொடி, இந்தி எதிர்ப்பு, லிங்காயத்திற்கு சிறுபான்மை அந்தஸ்து – என்ற பிரித்தாளும்
கொள்கை காங்கிரசுக்குக் கை கொடுக்காவிடினும், அது பி.ஜே.பி.க்கும் ஓரளவு பாதகமாக இருந்து
விட்டது.
ஆனால் குமாரசாமியின் அப்பா தேவகெளடா பி.ஜே.பி.க்கு எதிரான ஒரு வலுவான எதிரணியினை
உருவாக்கும் முயற்சியில் ஓரளவு வென்றுள்ளது வருகிற லோக் சபா தேர்தலில் பி.ஜே.பி.க்கு
ஒரு மிகப் பெரிய சவாலாகத்தான் இருக்கப்போகிறது. ஆகையால், அதை எதிர்கொள்ளும் பலமான யுத்தியை
பி.ஜே.பி. உபயோகிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றனர்.
விமரிசகர்:
ராஹுல் தன்னை பிரதம மந்திரிக்குத் தகுதி உள்ளவராகவே கருதுகிறார். மோடியைச் சாடுவதும்,
அதற்கு எந்தப் பொய்யையும் எங்கு வேண்டுமானாலும் சொல்லத் தயங்குவதில்லை. சமீபத்தில்
நடந்த பிற பிற்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் பம்பையில் நடந்த காங்கிரஸ் கூட்டத்தில்
மூன்று கருத்துக்களை உதிர்த்துள்ளார். மோடி சாதாரண மக்களுக்கு உதவுவதில்லை என்பதால்
இந்தியாவில் கோ-கோ கோலா, மெக்டணால்ட், ஃபோர்ட், மெர்சடீஸ், ஹோண்டா போன்ற தொழில்கள்
வருவதில்லை. மோடியின் கவனம் 10-15 பெரிய கம்பனிகளை ஊக்குவிப்பதில் தான் இருக்கிறது
என்று ராஹுல் குற்றம் சாட்டுகிறார். ஆனால், அவர் குறிப்பிட்ட அத்தனை கம்பனிகளும் மெஹா
கம்பனிகள் என்பதை மறந்து சொல்கிறார்.
அந்தக்
கம்பனிகள் எல்லாம் ஆரம்பத்தில் மிகவும் சாதாரணமானவைகள் என்பதைச் சுட்டிக் காட்டச் சொல்லும்
விவரம் தான் கேலிக்கூத்தாகவும், தப்பான தகவலாகவும் போய்விட்டன.
ஒன்று:
கோக்கோ கோலா எலுமிஞ்சம் பழச் சாரில் சக்கரையைப் போட்டு பானமாக விற்ற கம்பனி. இது தவறு:
போரில் பட்ட காயத்தின் வலியிலிருந்து தப்புவதற்கு ஒபியம் இல்லாத ஒரு பானத்தை தயார்
செய்யும் போது கண்டுபிடிக்கப்பட்ட பானம் கோக்கோ கோலா.
இரண்டு:
மெக்டொணால்டு ஒரு தாபா வாலா. இதுவும் தவறு: ஹாட் டாக் என்ற பிரட் கடையை ஆரம்பித்தவர்.
மூன்று:
ஃபோர்ட், மெர்சடீஸ், ஹோண்டா ஆகியவைகள் சாதாரண மெக்கானிக்குகளால் ஆரம்பிக்கப்பட்ட கம்பனிகள்.
சரியான தகவல்: ஹோண்டா அதிபர் மட்டும் மெக்கானிக்காக இருந்தவர். மற்றவர்கள் எஞ்சினியர்கள்.
தன்னை
ஒரு பிரதம மந்திரிக்குத் தகுதியான நபர் என்று மக்களிடையே வெளிப்படையாகச் சொல்லும் ராஹுல்
இப்படிப் பேசுவது மக்களின் கேலிக்கு ஆளாகும் நிலையை அவரே உண்டாக்குகிறார்.
நிபுணர்:
ராஹுலின் சில நடவடிக்கைகள் குழந்தைத் தனமாகவும் இருக்கிறது. சமீபத்தில் வாஜ்பாய் டெல்லி
மருத்துவ மனைக்கு சிகிக்கைக்காக அனுமதிக்கப்பட்டவுடன் ராஹுல் முதல் ஆளாக வாஜ்பாயைப்
போய்ப் பார்த்திருக்கிறார்.
ராஹுலை ‘வாஜ்பாய்க்கு சிகிக்கை நடந்து கொண்டிருக்கிறது.
ஆகையால் இப்போது வரவேண்டாம்’ என்ற மருத்துவ மனையின் ஆலோசனையையும் பொறுட்டாக்காமல் மருத்துவ
மனைக்குச் சென்று உடனேயே திரும்பி வந்து விட்டார். ஆனால், தனது மருத்துவமனை விசிட்டை
‘மோடி அவர்கள் தனது குருவான வாஜ்பாயை உடனே மருத்துவமனைக்குச் சென்று பார்க்க வில்லை.
ஆனால், நானோ வாஜ்பாய் எங்கள் கட்சியின் எதிரணித் தலைவராக இருந்தாலும், முதலில் சென்று
பார்த்தேன். அதே போல் தான் மோடி மூத்த தலைவர் அத்வானியையும் மதிப்பதில்லை’ என்று டிவிட்டரில்
எழுதி, மோடி – அத்வானி வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளார்.
மோடிக்கு அத்வானியிடம்
உள்ள அன்பு, மரியாதையை ராஹுலிடம் சர்டிபிகேட் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும்
இப்படி சிறுபிள்ளைத் தனமாக நடப்பது காங்கிரஸின் தலைமைப் பொறுப்பில் உள்ள ஒருவருக்கு
அழகல்ல என்பதை இந்திய மக்கள் உணர்ந்துள்ளனர். ஆகையால் தான் மீடியாவில் ‘ராஹுல் பிரதமராவதை
நீங்கள் ஆதரிக்கிறீர்களா?’ என்ற நேரடிக்கேள்விக்குப் பலர் ‘நிச்சமாக இல்லை’ என்று பதில்
சொல்லி இருக்கிறார்கள்.
பொதுஜனம்:
மக்களை அவ்வளவு எளிதில் ஏமாற்ற முடியாது. இந்தியா விழித்துக் கொண்டு விட்டது. எந்தவிதமான
குழப்பத்திற்கு இடம் கொடுக்காதவாறு தங்கள் ஜனநாயகக் கடமையை அவர்கள் கட்டாயம் ஆற்றுவார்கள்
என்று நிச்சயமாக நம்பலாம். சத்யமேவ ஜெயதே!
Comments