Posts

Showing posts from March, 2018

சத்யமேவ ஜெயதே - நெஞ்சு பொறுக்குதில்லையே!

Image
ஒரத்த நாட்டில் எஸ்.பி.ஐ. வங்கி மேலாளரின் பூணூல் அறுப்பு பாலிமெர் செய்தி கீழே உள்ளது. இது தான் தமிழ்ப் பண்பாடா? தமிழ்க் கலாச்சாரமா? திராவிடக் கொள்கையா? என்று கேள்விகள் எழுப்புவதுடன், அனைத்து ஜனசமூகமும் ஒன்று திரண்டு மனிதாபத்துடன் இந்த அநியாத்தை ஒரே குரலில் எதிர்க்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சிகளுடன் பல உதிரிக் கட்சிகள் இந்த காண்டிமிராண்டித் தனத்தைக் கண்டித்து செய்தி வெளியிடவில்லை என்பது மிகவும் வருத்தம் தரும் செய்தியாகும்.  எஸ். சங்கரன் ஆசிரியர் - வாய்மை  தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டில் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி மேலாளரின் சட்டையை கழற்றி பூணூலை அறுத்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஒரத்தநாட்டில் செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா கிளையில் பிரபாகரன் என்பவர் மேலாளராக பணியாற்றி வருகிறார். பிராமணர் சமுகத்தை சேர்ந்த இவர் இன்று காலை வங்கியில் இருந்து வெளியே வந்த போது, அவரை வழி மறித்துத் தாக்கிய மர்ம நபர்கள் 3 பேர், அவரது சட்டையைச் கழற்றி அவர் அணிந்திருந்த பூணூலை அறுத்து விட்டு தப்பி ஓடியதாக கூறப்படுகிறது.  இது குறித்த...

தமிழ் நாட்டு புதிய அரசியல் கட்சிகளின் நிலைப் பாடு

Image
திண்ணைக் கச்சேரி பங்குபெறுவோர்: வாசகர், விமரிசகர், நிருபர், பொதுஜனம் பொதுஜனம் : தமிழ் நாட்டில் இருக்கும் சுமார் 50 கட்சிகள் – இவைகளில் பல லெட்டர் பேடு கட்சிகள் - போறாதென்று, கமல் –  தினகரன் ஆகியவர்கள் புதிதாக கட்சிகள் ஆரம்பித்து விட்டார்கள். கமல் – மக்கள் நீதி மய்யம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டி கொடியையும் அறிமுகம் செய்து, களத்தில் இறங்கி விட்டார். தினகரன் – அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்று தனது கட்சிக்குப் பெயர் சூட்டி, கொடியையும் அறிமுகம் செய்து களத்தில் இறங்கி விட்டார். கமல் – தினகரன் இருவரும் மதுரை – மதுரைக்கு மிக அருகில் உள்ள மேலூர் ஆகிய இடங்களில் கூட்டம் கூட்டி தங்கள் அரசியல் பயணங்களைத் தொடங்கி விட்டார்கள். சூப்பர் ஸ்டார் ரஜினியும் ஆன்மீக அரசியல் என்னுடையது என்று அறிவித்து, தனது கட்சி – கொடி – கொள்கை ஆகியவைகளை மக்கள் மன்றத்தில் தெரிவிக்க உள்ளார். நிருபர்: ‘அம்மா ஆட்சியை அளிப்போம். போலி அம்மா விஸ்வாசிகளை வேரோடு அழிப்போம்’. – என்பது தான் தினகரன் ...

24 / 7 – மணி நேர மோடி எதிர்ப்பாளர்கள்

Image
24/7 மணி நேர மோடி எதிர்ப்பாளர்களின் மனம் கொஞ்சம் சந்தோஷப்பட வைத்துள்ளது தற்போது உ.பி. மற்றும் பீஹார் மாநிலங்களில் நடந்த தேர்தல் முடிவுகள். இதில் உ.பி.யில் இரண்டு எம்.பி. தொகுதிகளான கோரக்பூர் – புல்பூர் ஆகிவற்றுடன், பிஹார் ஆராரியா எம்.பி. தொகுதி என மூன்று தொகுதிகளிலும், ஜெகனாபாட் என்ற பீஹார் மாநில எம்.எல்.ஏ. தொகுதிகளிலும் பி.ஜே.பி படு தோல்வியைச் சந்தித்துள்ளது. பி.ஜே.பி. பிஹார் எம்.எல்.ஏ. தொகுதியான பாபுவாவில் மட்டும் தான் வென்றுள்ளது. ஐந்தில் ஒன்று என்ற அளவில் பி.ஜே.பி.யின் நான்கு தொகுதிகளின் தோல்வி பி.ஜே.பி.க்கு பின்னடைவு தான் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம். இதில் உ.பி. கோரக்பூர் எம்.பி. தொகுதி யோகி ஆதித்யநாத் 1998-லிருந்து 2017-வரை தொடர்ந்து ஐந்து முறை வெற்றி பெற்று தக்க வைத்துள்ள தொகுதியாகும். புல்பூர் தொகுதியில் தற்போதைய ஆதித்யநாத் மந்திரி சபையில் அங்கம் வகிக்கும் துணை முதல் மந்திரி கேசவ் பிரசாத் மவுர்யா முன்பு அந்தத் தொகுதியில் ஜெயித்துள்ளார். அந்த இரண்டு தொகுதியிலும் சமஜ்வாதி கட்சி அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.  கோரக்பூ...

யுகத்தின் பிறப்பு யுகாதியின் சிறப்பு – 18-03-2018

Image
தெலுங்கு, கன்னடம் மற்றும் மராட்டிய மக்கள் சந்திரனை வைத்துதான் பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். அவர்களுடைய மாதம் சந்திரனின் முதல் பிறையிலிருந்தே துவங்குகிறது. அதாவது அமாவாசைக்கு அடுத்த நாளான பிரதமையிலிருந்தே துவங்குகிறது. அதனாலேயே யுகாதியும் பிரதமையன்றே வருகிறது. ஆனால், தமிழகம் மற்றும் கேரளாவில் புது வருடம் சூர்யனை முன்னிருத்தியே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. இந்த வருடம் யுகாதி 18-03-2018 அன்று கொண்டாடப்படுகிறது. யுகாதி என்றால் யுகத்தின் ஆரம்பம் என்று பொருள்படும். அதாவது அன்று தான் பிரம்ம தேவன் உலகத்தை படைத்ததாக பிரம்ம புராணம் கூறுகிறது. இது தெலுங்கு மற்றும் கன்னட மக்களின் புத்தாண்டு தினமாகும். இதே நாளை ‘குடிபாட்வா’ என்று மகாராஷ்டிர மக்களும், ‘சேதி சந்த்’ என்று சிந்தி மக்களும் புத்தாண்டாகக் கொண்டாடுகிறார்கள். யுகாதிப் பண்டிகையின் விசேஷம் என்றால் , அது பச்சைப் பச்சடிதான் . வாழ்க்கையென்றால் இன்பம் , துன்பம் , ஏமாற்றம் , தோல்வி , வெறுமை , விரக்தி எல்லாமே சேர்ந்ததுதான் என்பதை உணர்ந்த மக்கள் , இந்த யுகாதி நாளில் இனிப்பு , காரம் , உப்பு , கசப்பு , துவர்ப்பு , புளிப...

மாங்கல்யம் காக்கும் காரடையான் நோன்பு! 14.3.2018

Image
மாசி மாதமும் பங்குனி மாதமும் கூடும் நாளில் அதாவது மாசி மாத கடைசி நாள் நிறைவடைந்து, பங்குனி மாதத்தின் முதல் நாள் தொடக்கத்திற்கு இடைப்பட்ட நேரத்தில் வரும் நோன்பு தான் காரடையான் நோன்பு. சாவித்திரி தேவியை வழிபடும் நோன்பு – சுமங்கலிகள் தீர்க்கசுமங்கலியாக இருக்க காரடை – அதாவது காராம்பருப்பினால் செய்த அடையை நிவேதனம் செய்து, நோன்புச் சரடை காமாட்சி அம்பாளைப் பூஜித்து தங்கள் கழுத்தில் கணவர் கட்ட கட்டிக் கொள்வார்கள். சாவித்திரி தன் கணவனை எமதர்ம ராஜனிடமிருந்து மீட்டது இந்த நாளில் தான். கார்காலத்தில் விளையும் நெல்லைக் குத்தி , பச்சரிசி மாவுடன் , காராமணிப் பயறும் இனிப்பும் கலந்து தயாரிக்கும் காரடையை இறைவனுக்குப் படைத்து விரதம் மேற்கொள்வது சிறப்பு ! வாய்மை வாசகர்கள் அனைவருக்கும் இந்த நன் நாளில் நோயற்ற வாழ்வு - குறைவற்ற செல்வம் – நீண்ட ஆயுள் – கவலை அற்ற வாழ்வு – குதூகலமான குடும்பம் ஆகியவைகள் கிட்ட எல்லாம் வல்ல இறைவியை வேண்டி வணங்கிப் பிரார்த்திக்கிறோம். எங்கும் மங்களம் பொங்கட்டும்.

மோடியின் 4 தேசம் – 4 நாட்கள் வெளிநாட்டு அரசாங்கப் பயணம்

Image
ஐக்கிய அரபு அமீரகம் தலைமையின் அழைப்பை ஏற்று துபாயில் நடைக்கும் 6- வது உலக அரசு உச்சிமாநாட்டில் உரையாற்றச் சென்ற மோடி , ஐக்கிய அரபு அமீரகத்தின் நகரங்களான துபாய் மற்றும் அபுதாபியுடன் , ஜோர்டன் , பாலிஸ்தீனம் , ஓமன் நாட்டிற்கும் சென்று பல வர்த்தக – கலாச்சார ஒப்பந்தங்களுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் அபுதாபி – துபாய் ஹைவேயில் சுவாமிநாராயணன் கோயில் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டி உள்ளார் . அபுதாபி மன்னர் தானமாக அளித்த பூமியில் முதன் முதலாக அங்கு ஒரு ஹிந்து கோயில் – அதுவும் கற்களால் 2020 ஆண்டுக்குள் உருவாக உள்ளது . அந்த நாட்டின் முஸ்லீம்களின் எதிர்ப்புக்களையும் மீறி ஹிந்து கோயில் கட்ட இடம் ஒதுக்கீடு செய்துள்ளதை இங்கு குறிப்பிட வேண்டும் . ஆகையால் , இந்த அடிக்கல் நாட்டு விழா நடப்பது என்பது ஒரு சரித்திர முக்கியத் துவ ம் வாய்ந்ததாகும் . ஐக்கிய அரபு அமீரகத்தின் பல கட்டுமானப்பணிகளுக்கு நமது இந்தியர்கள் – அதிலும் முக்கியமாக இந்துக்கள் பணியாற்றியதை அந்த அரசாங்கம் மனதாரப் பாராட்டி உள்ளது . அதன் காரணமாகவே இந்த...