வைரமுத்துவின் ஆண்டாள் அவதூறு
டாக்டர் பார்த்தசாரதி பட்டர் தமது முகநூலில்
வைரமுத்து தமது ‘தமிழை ஆண்டாள்’ என்ற தினமணி ஆசிரியர் வைத்தியநாதன் பிரசுரித்த கட்டுரையில்
பல விஷயங்கள் தவறானவைகளாக இருப்பினும், முக்கியமாக ஆண்டாள் நாச்சியாரை அவதூறாக – தேவதாசி
குலம் – என்று குறிப்பிட்டுள்ளது அபாண்டம் – அபத்தம் என்பதை வைரமுத்து மேற்கோள் காட்டிய
குறிப்பிலிருந்தே நிரூபித்துள்ளார். அது தான் அதன் சிறப்பு.
இந்தப் பதிவினை வாய்மை ஆரம்பித்த காலத்திலிருந்தே
விஷயதானங்கள் அளித்து அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் திரு. எஸ். பலராமன்
எங்களுடன் பகிர்ந்துள்ளார்.
பார்த்த சாரதி பட்டர் பேசிய பேச்சினை இங்கு
உங்கள் வசதிக்காக குறிப்பிடுகிறோம். அவர் மிகவும் சாந்தமாக – அதே சமயத்தில் மிகவும்
அழுத்தமாக – “வைரமுத்து மேற்கோள் ஹிமாலயத் தவறு” என்பதை அவர்து கட்டுரையில் குறிப்பிடப்பட்ட
ஆதாரங்களை வைத்தே வாதிடுகிறார் என்பது இதன் சிறப்பாகும்.
அவர் மேற்கோள் காட்டும் கட்டுரையின் தலைப்பு – Bhakti Moment
in South India by MGS Narayanan and Veluthat Kesavan என்பதாகும். அது வைரமுத்து குறிப்பிட்டுள்ளது
போல் இந்தியானா என்ற யு.எஸ். பிரசுரம் இல்லை. இந்தியாவில் உள்ள சிம்லாவில் Indian
Institute of Advanced Study என்பவர்களால் பிரசுரம் ஆனது. இந்தக் கட்டுரை பல கட்டுரைகளைக்
கொண்ட – Indian Movements: Some Aspects of Dissent Protest and Reform – என்ற புத்தகத்தில்
இதுவும் ஒரு கட்டுரை. அவ்வளவே.
வைரமுத்து மேற்கோள்
காட்டிய குறிப்பு – ஏதோ ஒரு மேற்கத்திய ஆய்வாளர் தீவிரமான ஆய்வின் நீண்ட அறிக்கையின்
ஒரு பகுதி என்ற மாயையை வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்தியது அவரது வக்கிர புத்தியையே
படம் பிடித்துக் காட்டுகிறது.
சரி. வைரமுத்து
மேதாவி சுட்டிக் காட்டிய கட்டுரை ஆசிரியர்களாவது நேரிடையான ஆய்வு செய்து ஆண்டாளை அடையாளம்
காட்டி உள்ளார்களா என்றால் அதுவும் இல்லை. அந்த கட்டுரை ஆசிரியர்கள் தங்களின் கருத்துக்கு
வேறொருவரின் கட்டுரையை மேற்கோள் காட்டி உள்ளார்கள்.
அதாவது ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பக்கம்
5-ல் TA Gopinath Rao என்பவர் தமது The History of Sri Vaishnavas என்ற கட்டுரையில்
குறிப்பிட்டு இருப்பதைத் தான் மேற்கோள் காட்டி உள்ளோம் என்கின்றனர்.
இந்தக் கட்டுரை
கோபிநாத் ராய் சர் சுப்பிரமண்ய அய்யர் பேருரைகள் என்ற புத்தகத்தில் பிரசுரமான பல கட்டுரைகளில்
இதுவும் ஒன்று. ஆனால், கோபிநாத் ராவ் அவர்கள் அவர்கள் குறிப்பிட்ட பக்கத்தில் ஆண்டாளை
அவதூறாக – தேவதாசி – என்று சொல்லவே இல்லை.
இதோ அந்தப் பக்கம்
உங்கள் பார்வைக்கு:
மேலே உள்ள பக்கம்
தான் மூல ஆதார ஸ்ருதி. இதில் ஆண்டாளைப் புகழ்ந்துள்ளதே அன்றி அவரைப் பற்றிய எந்தவிதமான
ஆபாசான வார்த்தையான ‘தேவதாசி’ என்ற சொல் இடம் பெறவே இல்லை.
இது தான் வைரமுத்துவின்
ஆய்வின் லட்சணம். இவர்கள் தான் தமிழைக் காப்பாற்றப் போகிறார்களா? உண்மைக்கு உரிய மதிப்பைக்
கொடுக்காமல் தங்களின் தீய வக்கிர புத்தி, நாஸ்திக வாதம், திராவிட மாயை, பக்தியையும்
நம்பிக்கையும் கொச்சைப் படுத்தும் சாக்கடைச் சொற்கள் – காமப் பார்வை – காம சிந்தனை
– இதற்கு ஒரு முடிவு கட்டாவிடில், ஹிந்துக்களாகிய நாம் கடமை தவறியவர்களாக வருங்காலம்
நம்மைச் தூஷிக்கும்.
ஆண்டாளை நான் அவதூறாகப்
பேசவில்லை. மேற்கோள் தான் காட்டினேன் என்று வைரமுத்து தப்பிக்கிறார்.
இந்தியானா ஆய்வாளர்
என்று வைரமுத்து சிம்லாவில் அதாவது இந்தியாவில் – இந்தியானாவில் இல்லை – பிரசுரமான
ஒரு கட்டுரையை ஆய்வராய்ச்சி என்று பொய் சொல்கிறார்.
அவர் மேற்கோள்
காட்டிய அதிமேதாவியும் ஆண்டாளைப் பற்றிய கருத்து கோபிநாத் ராவின் கட்டுரையில் – ஆண்டாளை
தேவதாசி – என்று குறிப்பிட்டிருப்பதைத் தான் சொல்லியிருக்கிறேன் என்று சொல்கிறார்.
ராவின் கட்டுரையில் அப்படியான எந்த ஒரு வாசகமும் இல்லை என்பதை அந்த அதிமேதாவிகளான நாராயணன்
& கேசவன் கவனிக்காமல் மேற்கோள் காட்டியதால், அவர்களின் நம்பகத் தன்மையே கேள்விக்
குறியாகி விட்டது.
அதை ஆய்வு என்று வைரமுத்து மேற்கோள் காட்டியதிலிருந்தே அவரது நாஸ்திக
மனம் தெள்ளத் தெளிவாக வெளிச்சம் போட்டு வெளிப்பட்டுள்ளது.
இதில் அவர்கள்
தங்கள் பெயர்களை – நாராயணன் – கேசவன் – என்று சூட்டிக் கொண்டது எவ்வளவு இழுக்கு என்பதை
வாசகர்கள் அறிந்து கைகொட்டிச் சிரிப்பார்கள் என்பது திண்ணம்.
ஆகையால் அஸ்திவாரமே
ஆட்டம் கண்டு விட்டது. ஆனால், இதனால் பக்தர்களின் மனங்களைத் துன்புறுத்திய வக்கிர புத்தி
வைரமுத்துவின் வருத்தமோ – மன்னிப்போ என்னைப் பொருத்த மட்டில் அவசியமில்லை.
ஆண்டாள் அந்த தமிழை
விற்கும் வியாபாரியான வைரமுத்துவிற்குத் தகுந்த தண்டனையை அளிக்க வேண்டும்.
வாய்மை வைரமுத்துவிற்கு
சாபம் கொடுத்து, மனச் சாந்தி பெறுகிறது.
சூடிக்கொடுத்த
சுடர்கொடி ஆண்டாளின் திருவடிகளே சரணம்.
எஸ். சங்கரன்
ஆசிரியர் – வாய்மை.
18-01-2018
Comments