பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அஷ்வினி உபாத்யாயா, உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொது நல வழக்கைத் தாக்கல் செய்தார். அந்த மனுவின் சாராம்சம்: 2011-ல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜம்மு-காஷ்மீர், மிசோரம், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சல பிரதேசம், மணிப்பூர், பஞ்சாப், யூனியன் பிரதேசம் லட்சத்தீவு – ஆகிய இடங்களில் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசிக்கின்றனர். இது வரை, ஹிந்து மாநிலங்களில், ஹிந்துக்களை சிறுபான்மையினராக பதிவு செய்ய வில்லை. எனவே ஏழு மாநிலங்கள் மற்றும் லட்சத்தீவு ஆகிய இடங்களில் வசிக்கும் ஹிந்துக்களை, சிறுபான்மையினராக அறிவிக்க மத்திய அரசுக்கு உத்திரவிட வேண்டும். அப்போது தான், அவர்களால் சிறுபான்மையினருக்குரிய சலுகைகளை பெற முடியும், இந்த 8 இடங்களிலும், ஹிந்துக்களின் சிறுபான்மை உரிமைகள் அளிக்கப்படாமல், அரசியல் சாசனம் ஆர்டிகிள் 25 லிருந்து 30 வரை உள்ள அடிப்படை உரிமைகள் பறிக்கப்படுகின்றன. ஆகையால் தேசிய சிறுபான்மை கமிஷன் சட்டம் பகுதி 2 ( C ) – ன் கீழ் ஹிந்துக்களையும் ‘சிறுபான்மையினர்’ என்று அறிவிக்க உத்தி...