கருப்புப் பண பூதத்தின் விஸ்வரூபம்

(இந்த கட்டுரை 2011 ஆண்டு மார்ச் மாதம் எழுதியது என்பதை வாசகர்கள் மனத்தில் கொண்டு படிக்க வேண்டுகிறேன். தற்போதையை மோடி அரசு இந்தக் கருப்புப் பணத்தை வெளிக்கொண்டு வர பகீரதப் பிரயத்தனம் செய்கிறது. அதில் வெற்றி அடைந்தால் இந்தியாவில் இருக்கும் கருப்பு முதலைகளுக்குப் பாடமாகவும், இனியும் கருப்புப் பணம் பதுக்குபவர்களுக்கு அச்சமாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கலாம். காலம் தான் இதற்குப் பதில் சொல்ல வேண்டும். - ஆசிரியர்) சுவிட்சர்லாந்து வங்கிகள், லிக்டென்ஸ்டெயின் நாட்டு வங்கிகள், அண்டோரா நாட்டு வங்கிகள், மோனோக்கோ நாட்டு வங்கிகள் தான் நமது இந்தியாவின் கருப்புப் பணம் வைக்கப்பட்டிருக்கும் முக்கிய வங்கிகளாகும். மொரிசியஸ் மற்றும் சில ஆசியத் தீவிகளில் உள்ள மற்ற சில வங்கிகளும் உண்டு. இதில் சுவிட்ட்ர்லாந்து வங்கியில் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணம் மட்டும் 1500 பில்லியன் டாலர். அப்படி வைத்திருப்பவர்களின் பெயர் பட்டியலை அந்த வங்கி இந்திய அரசாங்கம் முறையாகக் கேட்டால், கொடுக்கத் தயார் என்று சொல்லியும் நமது மத்திய அரசாங்கம் மெளனம் சாதிக்கிறது. 1500 பில்லியன் டாலர் என்றால் அதன் பரிணாமத்தைப் புர...