மாலேகான் குண்டுவெடிப்பும், காங்கிரசின் ‘ஹிந்து தீவிரவாதப்’ பிரசாரமும்
சத்வி பிரக்யா சிங் தாகுர் என்ற பெண் சன்யாசி 2008 டிசம்பர் மாதம் நடந்த மாலேகான் குண்டு
வெடிப்பில் சம்பந்தப்பட்டவராக இப்போதும் ஜெயிலில் இருங்கிறார். இதைச் சுட்டிக் காட்டி, ஹிந்துக்களிலும் ‘ஹிந்து தீவிரவாதம்’ ஊடுருவி உள்ளது என்று முன்னால்
காங்கிரஸ் உள்துறை அமைச்சராகப் பதவி வகித்த ப. சிதம்பரம் குற்றம் சாட்டி உள்ளதை யாரும் மறந்திருக்க
மாட்டார்கள். பிரக்யாவுடன் சந்தீப் டாங்கே & ராம்ஜி கால்சாங்ரா என்ற இருவரும் கைது செய்யப்பட்டனர். கால்சாங்ரா, பிரயாக் தாகுரின் மோட்டார் சைக்கிளை வைந்திருந்ததற்கும்,
டாங்கே அவருக்கு உடைந்தையாக இருந்ததற்கும் கைது செய்யப்பட்டனர்.
(இன்னொருவரும் இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டிருப்பினும்,
அவர் போலீஸ் விடுவித்ததாகத் தெரிகிறது.)
இப்போது
இதைப் பற்றி ஏன் குறிப்பிடவேண்டும்?
- என்ற கேள்வி எழலாம். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தை
பம்பாய் போலீஸின் தீவிரவாத எதிர்ப்புக் குழுதான் விசாரித்து வருகிறது. அந்த விசாரிப்புக் குழுவில் இடம்பெற்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் மெஹ்பூப் முஜாவர்
தற்போது ஒரு பிராமாண பத்திரம் சோலாபூர் கோர்ட்டில் தாக்கல் செய்துள்ளார். அதில் அவர் கீழ்க்கண்ட திடுக்கிடும் தகவல்களைத் தெரிவித்துள்ளார்:”போலீஸ் பிரியாக் தாக்கூருடன் சந்தீப் டாங்கே, ராம்ஜி
கல்சங்கரா இன்னும் ஒருவரை ஒரே நாளில் கைதி செய்தனர். அதில் பெயர்
வெளியிடப்படாத அந்த நபர் போலீஸால் விடுவிக்கப்பட்டார். சந்தீப்
டாங்கே & ராம்ஜி கல்சங்க்ரா இருவரையும் போலீஸ் நாசிக் கூட்டிக்
கொண்டு போய், பிறகு பம்பாய் அழைத்துக் கொண்டு சென்று அங்கு அந்த
இருவரையும் போலீஸ் சுட்டுக் கொன்றுவிட்டது. அந்த இருவரின் உடல்களும்
26/11 அன்று நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர் இழந்த ‘அடையாளம் தெரியாத நபர்கள்’ என்ற பட்டியலில் சேர்க்கப்பட்டனர்.
ஆனால் அவர்கள் இருவரும் போலீஸ் காவலிலிருந்து தப்பி ஓடியவர்கள் என்று
போலீஸ் தரப்பில் இன்னும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சென்ற
வருடம் கூட, போலீஸ் அவர்களை நேபாலில் பூகம்பம் நிவாரணப்பணியில்
ஈடுபட்டிருந்தனர் என்றும் சொல்லி இருக்கிறார்கள். ஆனால்,
அவர்கள் போலீசால் சுட்டுக் கொல்லப்பட்டவர்கள் என்று நான் சத்தியப்பிரமாணம்
செய்கிறேன். போலீஸ் தரப்பில் அவர்கள் தப்பியோடியவர்கள் என்றும்,
அவர்களைக் கண்டுபிடிக்க எந்த துப்பும் கிடைக்க வில்லை என்று சொல்வது
முழுப்பொய்.
இது குறித்து
பாரபட்சமற்ற விசாரணை நடத்த மத்திய பிரதேசத்தைச் சார்ந்த அவர்கள் குடும்பத்தினர் பத்திரிகையாளரைச்
சந்தித்து கோரிக்கை வைத்துள்ளனர்.
இது ஒரு
பெரும் அதிரடி குற்றச் சாட்டு.
மேலும், பம்பாய் போலீசுக்கு இது பெரும் தலைகுனிவாகும்.
‘சத்யமேவ ஜெயதே!’ என்பதை நிலைநிறுத்தும் கடமையை
தற்போதைய பம்பாய் அரசும், போலீசும் நிறைவேற்ற தகுந்த துரித நடவடிக்கை
எடுக்க வேண்டும்.
Comments