காதி - காந்தி - மோடி
காதி கிராம தொழில்
கழகம் ஒவ்வொரு வருடமும் காலண்டர் மற்றும் டைரி வெளியிட்டு வருகிறது. 2017 வருடம் வெளியிட்ட காலண்டரில் மோடி சர்க்காவில் நூல் நூற்கும்
படம் வெளியிடப்பட்டது. இது மஹாத்மாவைப் புறக்கணித்து,
மோடி தமது போட்டாவைப் போட்டு, தவறு இழைத்து விட்டார்
என்று காங்கிரஸ் - திருமாமுல் காங்கிரஸ் - ஆம் ஆத்மி ஆகிய கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. காதி
பம்பாய் தலைமையகத்தின் வில்லி பார்லேயில்
வேலை செய்யும் சில தொழிலாளர்கள் தங்கள் வாயைக் கருப்புத் துணியால்
கட்டிக் கொண்டு சாப்பாட்டு இடைவேளையின் போது மவுன எதிரிப்புக் காட்டினார்கள்.
மஹாத்மா காந்தியின் கொள்ளுப் பேரன் துஷார் காந்தியும், “பாபுவின் சர்க்கா என்பது ஏழைகளுக்கு பணம் சம்பாதித்துக் கொடுக்கும் ஒரு சின்னமாகும்.
ஆனால், அது இப்போது போட்டோ எடுத்து புகழ்பெறும்
ஒரு பொருளாக மதிப்பிழந்து விட்டது” என்று தமது எதிர்ப்பைப் பதிவு
செய்துள்ளார்.
பல வருடங்களாக
காதி காலண்டர்களும், டைரிகளும் மஹாத்மா காந்தியின்
படம் வெளியிடப்பட்டு வெளிவந்தாலும், கடந்த ஏழு ஆண்டுகள்
- 1996, 2002, 2005, 2011, 2012, 2013 & 2016 - மஹாத்மா காந்தியின்
படம் அவைகளில் அச்சிடப்படவில்லை.
காதி கமிஷன் தலைவர்
வினாய் குமார் செக்ஸேனா இந்த எதிர்ப்புகளுக்கு கீழ்க்கண்ட விளக்கம் அளிக்கிறார்: “மஹாத்மா காந்தி படம் இன்றி காலண்டர் - டைரி வெளிவருவது புதிதல்ல. சென்ற வருடமும் மோடியின் படம்
காலண்டரின் வெளியிட்டுள்ளோம். மோடி காதி விற்பனைக்கு ஒரு சிறந்த
பிராண்ட் அம்பாசிடர். அவரது தொலைநோக்குக் கொள்கை காதியின் கொள்கையுடன்
ஒத்துப்போகிறது. மேலும், மேக்-இன்-இந்தியா, காதி மூலம் கிராமங்களை
தன்னிறைவு கொண்டவைகளாக உருவாக்கும் திட்டமாகும். மேலும்,
மோடி இளய சமூதாயத்தினருக்கு வழிகாட்டும் தலைவராகப் போற்றபடுகிறார்.”
மோடியின் சர்க்காவில்
நூல் நூற்கும் போட்டோ சென்ற அக்டோபர் மாதத்தில் லூடியானாவில் 500 சர்க்காவை பெண்களுக்கு அளிக்கும் ஒரு சரித்திர முக்கியத்துவம்
வாய்ந்த விழாவில் எடுத்ததாகும். அதை நினைவு கூறும் விதமாகவே இப்
படம் காலண்டரில் பிரசுரிக்கப்பட்டது. “எவரும் மஹாத்மாவை புறக்கணிக்க
நினைக்கக் கூட மாட்டார்கள். அதுவும் காதி நிருவனம் காந்திஜியின்
கொள்கையின் அடிப்படையில் உருவாகி, அவருடன் நுண்ணியமாக தொடர்புடையதாகும்”
என்ற விளக்கத்தையும் காதி முன் வைக்கிறது.
பல மாநில அரசியல்
கட்சிகள் அரசின் செலவில் பலவிதமான விலையில்லா பொருட்களை மக்களுக்கு விழாமூலம் அளிக்கும்
போது, அதில் அந்தந்த மாநில முதல் மந்திரிகளின் போட்டோக்கள்
பதிக்கப்படுவதை அனைவரும் அறிவோம். ஆனால், இங்கு அப்படி ஒன்றும் போட்டோக்கள் சர்க்காக்களில் பொறிக்கப்படவில்லை.
நலிவடைந்த காதியை அதன் தரத்தை உயர்த்தி, அதன் விற்பனையையும்
ஹிமாலய அளவு உயர்த்தியவர் மோடி என்பதை ஒருவரும் மறுக்க முடியாது. தமது வெளிநாட்டு மக்களிடம் பேசும் போதும், தமது முதன்
முதல் ஆற்றிய ரேடியோ உரையின் போதும், ‘காதியை ஆதரியுங்கள்,
காதியை அணியுங்கள்’ என்று மக்களைக் கேட்டுக் கொண்டுளார்
மோடி. இதன் நிமித்தமாக 2-7% என்ற அளவில்
கடந்த 50 வருடங்களுக்கு மேலாக விற்பனையாக இருந்த காதியானது,
2016 ஆண்டு 34% அளவில் அதன் விற்பனை அதிகரித்துள்ளது.
அதை அங்கீகரித்துப்
பாராட்டும் விதமாக காதி மோடியை தனது காலண்டரில் பிரசுரித்ததைத் தவறு என்று கூறுவது
காதி நிருவனத்திற்கும், அதில் உழைக்கும் தொழிலாளர்களுக்கும்
செய்யும் துரோகமாகும். மாஹாத்வாவே - தம்
வாழ்நாளில் சத்யசோதனையைக் கடைப்பிடித்த அந்த மாஹானே - காதியின்
இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமான மோடியைப் பாராட்டுவார் என்பதில் ஐயமேதும் இல்லை.
காதியின் மோடி போட்டோவைப் போட்ட செயலையும் ஆதரிப்பார் என்பது சர்வ நிச்சயம்.
Comments