ராகுலின் கிழிந்த குர்த்தா



16-01-2017 அன்று உத்திரகாண்ட் மாநிலத்தின் ரிஷிகேஷில் நடைபெற்ற காங்கிரஸ் தொண்டர்களின்விஜய் சங்கல்பம்கூட்டத்தில், தன் பேச்சின் நடுவில் மேடையைத் தாண்டி வந்து, தன் குர்த்தா பையில் கைவிட்டு, ‘பாருங்கள், குர்த்தா கிழிந்துள்ளது. ஆனால், மோடி மிக விலை உயர்ந்த ஆடையையே உடுத்துவார். மோடி ஏழைகளைப் பற்றிப் பேசுவார். ஆனால், அவர் பெரிய பணக்காரர்களைச் சூழ்ந்துதான் இருப்பார். 15 லட்சம் சூட் - கைராட்டை இவைகள் எவ்வளவு எதிர்மறையானவைகள்? கை ராட்டை ஏழைகளைச் சார்ந்தது. ஒரு புறம் மோடி சர்க்காவைச் சுழற்றிப் போட்டோ எடுத்துக் கொள்வார். ஆனால், அவர் பெரிய 50 பணக்கார முதலாளிகளுக்காக வேலை செய்வார்என்று அந்தக் கூட்டத்தில் பேசினார்

இந்த கிழிந்த குர்த்தா அணிந்துள்ள ராகுல் தான் டிசம்பர் இறுதி வாரத்திலிருந்து இந்த வருடம் ஜனவரி மாதம் இரண்டு வாரங்கள் வரை லண்டனில் ஓய்வில் இருந்துள்ளார். வசிப்பதோ பெரிய பணக்காரர்கள் வசிக்கும் பங்களா. அவர் பயணிப்பதோ விலை உயர்ந்த கார். அவரது பாதுகாப்பிற்கு பல மெய்க்காப்பாளர்கள். ஆனால், காங்கிரஸ் தொண்டர்களிடம் தமது கிழிந்த குர்தாவைக் காட்டி, அனுதாபத்தைச் சம்பாதிக்க முயலும் இந்த ராகுல் நடிப்பு, காங்கிரஸையே அழிப்பதாக முடிவெடுத்து விட்டாரோ? - என்றே சந்தேகிக்கத்தையே தூண்டுகிறது

சமீபத்தில் காங்கிரிசில் சேர்ந்த கிரிக்கெட் வீர்ர் நவ்ஜோத் சிங் சித்து அலங்காரமாக உடை அணியும் ஆசாமி. ‘இனி நான் எனது சட்டையைக் கொஞ்சம் கிழித்துக் கொண்டுதான் பிரசாரம் செய்ய வேண்டுமோ?’ என்ற சந்தேகம் சித்துவுக்கு வராமல் இருந்தால் சரி.


ராகுலின் கோமாளித்தனத்திற்கு ஒரு எல்லையே இல்லையோ? என்று தான் மக்கள் தங்கள் தலையில் அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017