நெஞ்சு பொறுக்குதில்லையே!

யாராலேயும் 15-ம் தேதி ஆகஸ்ட் மாதம் 1947 நாளை மறக்க முடியுமா? இந்தியா சுதந்திரம் பெற்று நமது தேசியக்கொடி செங்கோட்டையில் ஏற்றப்பட்டு, நாடு முழுதும் அந்தக் கொடி பறக்க விடப்பட்டு, நாடு சுதந்திரம் அடைந்த நன்நாள் அன்றோ!

கல்கத்தாதான் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் முதல் தலைநகரம் என்பது சரித்திரம் சொல்லும் ண்மை. ஆனால், இப்பொழுது வேறு ஒரு ண்மையையும் சொல்லப் போகிறேன்.

அது தான் இது: கொல்கத்தாவில் மெட்டியாபிரஸ் இமாம்பரா என்ற புகழ் பெற்ற கட்டிடத்தில் யூனியன் ஜாக் என்ற ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகும் பறந்தது. அந்த ஆங்கிலேயரின் கொடி இந்தியா சுதங்திரம் பெற்றும் 27 வருடங்கள் பறந்த பிறகு, 26 ஜனவரி 1975 அன்று தான் அகற்றப்பட்டு, அந்தக் கட்டிடத்தில் நமது மூவர்ணக்கொடி ஏற்றப்பட்டு பறக்க விடப்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன சாட்சி என்று நீங்கள் கேட்கலாம்? காங்கிரஸ் ஆட்சிதானே - அதுவும் காங்கிரசில் மிகவும் செல்வாக்குள்ளவர்களான திருவாளர்கள் பி.சி. ராய், பி.சி.சென், அஜாய் முகர்ஜி, பி.சி.கோஷ் போன்றோர்கள் தானே அங்கு முதல் மந்திரி பதவியில் இருந்திருக்கின்றனர். அவர்களின் கல்கத்தா தலைநகரத்திலேயே இப்படிப்பட்ட அநியாயத்தைப் பார்த்தும் வாய்மூடி மெளனிகளாக இருந்த நமது தலைவர்களின் தேசபக்தியைப் பற்றி என்ன சொல்ல முடியும். பதவி சுகம் தேசபக்தியைக் காற்றில் பறக்க விடும் ஒரு சரித்திர ண்மையைத் தான் இவர்களின் செய்கைகள் காட்டுகின்றன.

அது போகட்டும். இதற்குக் சாட்சி ஒரு கல் வெட்டு. அதுவும் அதே கட்டிடத்தில் இன்றும் காட்சி தருகிறது. அந்தக் கல்வெட்டின் வாசகம்: பிரிட்டிஷ் கொடியான யூனியன் ஜாக் கொடிக்குப் பதிலாக தேசியக் கொடியை இந்த நினவு மண்டபத்தில் சுதந்திரம் அடைந்து 27 வருடங்களுக்குப் பிறகு 26-01-1975 அன்று கார்டன் ரீட்ச் முனிசிபாலிட்டியின் சேர்மன் திரு.எஸ்.எம்.அப்துல்லா அவர்களால் ஊட்ச் அரசின் அறக்கட்டளையின் முதன் முதலாக நியமிக்கப் பட்ட அறங்காவலர் திரு. நாயெர் குதர் என்ற இளவரசர் ஏற்பாடு செய்ததினால் ஏற்றுகிறோம்.

அந்தக் கல்வெட்டில் சிறிய எழுத்தில் காணப்படும் வாசகங்கள்: பிரிட்டிஷாரின் நம்பிக்கைக்குப் பாத்திரமான வாஜிட் அலி ஷா என்ற வெளியேற்றப் பட்ட முந்தைய அறங்காவலரும், றவினருமானவர்களின் பெரிய எதிர்ப்புக்கிடையில் நடைபெறும் நிகழ்ச்சி.

ஒரு அயல் நாட்டுக் கொடியை அதுவும் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகும் ஒரு கட்டிடத்திலிருந்து இறக்க 27 வருடம் தவம் கிடக்க வேண்டி இருக்கும் இந்த அவல நிலை வேறு எந்த நாட்டிலும் இருக்குமா?’ என்பதை ஒவ்வொரு இந்தியனும் சிந்த்தித்துப் பார்க்க வேண்டும்.

'நெஞ்சு பொறுக்கு தில்லை. பொங்கி எழவும் தெம்பில்லை' என்ற நிலை நீடித்தால், இந்தியாவின்ற்குப் பெருமை சேர்க்காது.

இதை இன்றைய நிலையோடு ஒப்பிட்டுப் பார்ப்போம்.  

பேச்சுத் சுதந்திரம் என்ற பேரில், இந்திய இறையாண்மைக்கும், இந்திய ஒற்றுமைக்கும் முஸ்லீம்களின் தூண்டுதலாலும், இடது சாரிக் கட்சிகளின் ஆதரிவினாலும், ஒரு சில தலித் மற்றும் இதர பிற்பட்ட சமூகத்தின் கல்லூரி - சர்வகலாசாலை மாணவ-மாணவிகள் இந்தியாவிற்கு எதிரான செயல் - கோஷம் ஆகியவைகளில் ஈடுபடுவதால், அந்த தீவிரவாத சக்திகளை ஒடுக்க வேண்டிய ஒரு கால கட்டத்தில் இருக்கிறோம். ஹிந்து என்றாலே அவனை ஒழி - அழி - கொல் என்ற அவர்களின் செய்கைகளும், கோஷங்களும், பேச்சுக்களும் இந்திய அரசியல் சட்ட்த்திற்கே புறம்பானதாகும். மேலும், படிப்பை மறந்து அரசியல் வாதிகள் போல் செயல்படுவதை ஒரு போதும் சகித்துக் கொண்டிருக்க வேண்டாம். அரசியல் தான் அப்படிப்பட்ட மாணவ-மாணவிகளுக்கு அவசியம் என்றால், அவர்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடவேண்டும். கல்லூரி வளாகத்தை தங்கள் களமாகச் செய்வதை அரசாங்கம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டியது காலத்தின் கட்டாயம். இதில் மதம், ஜாதி, அரசியல் என்ற பாரபட்டம் காட்ட வேண்டிய அவசியமில்லை.

'விழிமின்; எழுமின்' என்ற விவேகானந்தரின் மொழிகள் அனைத்து மாணவர்களின் கண்களைத் திறந்து, நமது இந்திய ஒற்றுமைக்கு எந்தவிதமான குந்தகமும் வராமல் நாட்டையும், நாட்டின் மூவர்ணக் கொடியையும், தேசிய கீதத்தையும்  காப்போமாக.


ஜெய் ஹிந்த். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017