உ.பி. காதி மந்திரியின் கொலை மிரட்டல்:
பிலிபிட் என்பது உத்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு நகரம். அந்த நகரத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ. பெயர் ஹாஜி ரியாஸ் அஹமத். அவர் காதித் துறையின் மந்திரியாக உள்ளார். சமீபத்தில்
இரண்டு குழுக்கள் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்தி, அதில் நன்றாகச் செய்தவர்களைத் தேர்வு செய்து பரிசு வழங்க
முடிவானது. அந்த இரண்டு
குழுக் கலைஞர்கள் இரண்டு மதத்தைச் சேர்ந்தவர்கள் - இஸ்லாம் மதம் - இந்து மதம் ஆகிய இரு மதத்தைச் சேர்ந்தவர்கள்.
தேர்வு செய்ய அதே நகரத்தைச் சேர்ந்த இப்போது பம்பாயில் வாழும்
ராஜ் கான் என்ற நடிகர் மற்றும் கலை நிகழ்ச்சிகளை நடத்த உதவும் நிறுவனத்தின் தலைவராக
இருப்பவரை அழைக்க முடிவானது. ராஜ் கானும் தமது பூர்விக நகரத்தை மீண்டும் பார்க்கும் சந்தர்ப்பத்தால்
மிகவும் ஆவலாக அந்த நிகழ்ச்சியில் பங்கு கொண்டார். ஆனால், இந்த அவரது ஒப்புதல், அவரை இக்கட்டில் கொண்டு விடும் என்று சொப்பனத்தில் கூட நினைத்திருக்க
மாட்டார்.
அப்படி என்ன தான் நடந்தது?
ராஜ் கான் அந்த ஊரில் வந்து இறங்கிய உடனேயே நிகழ்ச்சி ஆரம்பமாவதற்கு
முன்பாகவே, முஸ்லீம் கலைக்
குழுவைத் தான் ராஜ் கான் தேர்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டார். ஆனால், இதில் ராஜ்
கானுக்கு சம்மதம் இல்லை. கலை நிகழ்ச்சியைப் பார்த்து விட்டு, தகுதி அடிப்படையில்
இந்துக் கலைக் குழுவைப் பரிசுக்கு தேர்வு செய்து விட்டார். அது மந்திரியை கோபமடைய வைத்து விட்டது.
தான் பம்பாய்க்குப் பயணமாவதற்கு முன், மரியாதை நிமித்தமாக, மந்திரியை அவரது
வீட்டில் சந்தித்து, விடைபெறச் சென்றார். அப்போது மந்திரி மிகவும் கோபமாக ராஜ் கானைத் திட்டி, தான் சொன்னபடி
முஸ்லீம் குழுவிற்குப் பரிசை அறிவிக்காததைச் சுட்டிக் காட்டி, அவருக்கு கொலை
மிரட்டலும் செய்து விட்டதைப் பார்த்த்து, கான் மிகவும் பயந்து போய் விட்டார்.
ராஜ் கான் உடனே போலீசில் இந்த கொலை மிரட்டல் குறித்து புகார்
செய்து விட்டு, பம்பாய் சென்று
விட்டார்.
காந்தி மஹானின் உள்ளம் கவர்ந்த கொள்கை காதியை நாடு முழுவதும்
பரப்பி, கிராமங்களை
தன்னிறைவு செய்வதாகும். ஆனால், இந்த காதித்துறை உ.பி. மந்திரியோ தமது மதத்தவர்களை மட்டுமே எந்த சூழ்நிலையிலும்
பாராட்டி, போட்டியின்
போது அவர்களின் திறமையை மட்டும் கவனிக்காமல் அவர்கள் சார்ந்த முஸ்லீம் மதத்தை நினைத்து
தேர்வு செய்வது முக்கியமாக முஸ்லீம் மக்களின் கடமையாகும் என்பதை வெளிப்படையாகவே மூர்க்கமாக
வெளியிட்டுள்ளார். தேர்வுக் குழுவில் முஸ்லீம் ஒருவரை இதற்காக பம்பாயிலிருந்து
வரவழைத்தும், மந்திரியின்
எண்ணம் நிறைவேறாதது அவரை கோபத்தின் உச்ச கட்ட்த்திற்குத் தள்ளி, இதற்காக முஸ்லீம்
அன்பர் ராஜா கானையே கொலை மிரட்டல் செய்யும் அளவுக்கு மந்திரியை நிலை குலையச் செய்தது
எந்த வகையிலும் செக்குலர் தன்மைக்கு ஏற்புடையது அல்ல. ஆனால், முலாயம் சிங்கின் கட்சி ஆட்சியில் இருக்கும் நிலையில் இதை
எல்லாம் மக்கள் சகித்துக் கொள்ளும் நிலைதான் ஏற்பட்டுள்ளது.
அரசியல் சாதனச் சட்டம் இத்தகைய மந்திரிகளிடம் எடுபாடாது என்ற
இழி நிலைதான் தற்போது இந்தியாவில் நிகழ்கிறது. அதற்கு விடிவுகாலம் மக்கள் கைகளில் தான் உள்ளது.
v சீனாவில் பள்ளிகளிலும், அரசு அலுவலகங்களிலும் நமாஸ் பிரார்த்தனைகளுக்கு தடா:
முன்பு ரஷ்ய அதிபர் புட்டின் மிகவும் தெளிவாகவும் ரத்தினச்
சுருக்கமாகவும் இஸ்லாமியரின் கோரிக்கையான தனிச் சலுகை - தனியான பர்த்தா உடை அணிதல் ஆகியவைகளைக் குறித்து வெளியிட்ட
பேச்சின் சாராம்சம்: ‘ரஷ்யாவில் ரஷ்ய சட்டம் தான் அமலில் இருக்கும். அதைத் தான்
அனைவரும் முஸ்லீம்கள் உள்பட ரஷ்யாவில் கடைப்பிடிக்க வேண்டும். இது பிடிக்காவிட்டால், அப்படிப்பட்ட
முஸ்லீம்கள் ரஷ்யாவை விட்டு, அவர்களுக்குப் பிடித்த நாட்டிற்குத் தாராளமாக வெளியேறிச்
சென்று விடலாம்.’
தீவிரவாத நடவடிக்கைகளை மும்முறமாக இஸ்லாமிய நாடுகள் எதிர்ப்பதில்லை. சில நாடுகள்
அந்த நடவடிக்கைகளுக்கு துணை போகின்றன. தொழுகைகளின் போது, யு.கே., யு.எஸ்.ஏ., இந்தியா போன்ற நாடுகளின் மசூதிகளில் மதவாதப் பேச்சுக்களும், அரசியல் பேச்சுக்களும், ஃபட்வாக்களும்
அனுமதிக்கப்படுகின்றன. ஆகையால் தான் சீனா பள்ளிகளிலும், அரசாங்க அலுவலகங்களிலும் இஸ்லாமிய பிரார்த்தனைகளுக்குத் தடை
விதித்துள்ளனர். இது ஒரு செக்குலர் நடவடிக்கை என்றாலும், இத்தகைய நடவடிக்கைகளை
இந்தியாவில் செயல்படுத்த முடியாது என்று தான் நினக்கிறேன். ஏனென்றால், இது சிறுபான்மையினரின் மதச் சுதந்திரத்தில் தலையிடும் செயல்
என்று இந்திய ‘சிக்குலர்’ மேதாவிகள் குரல்
எழுப்பி ஆர்ப்பார்டம் செய்து, கூட்டம் கூடி போராட்டம் நடத்துவதற்கு ஏதுவாக அமைந்து விடும்.
இந்திய முஸ்லீம்களே முன் வந்து இதற்கு ஒரு தீர்வு கண்டால்
தான் நலம். அந்த நாள் வரும்
என்று தான் நம்புகிறேன்.
ராஜ்மோஹன் காந்தியின் பேட்டி: ‘மோடி
அரசுக் குதிரைபின்னால் ஓடும் கழுதைக் குண அமைச்சர்கள்’
ராஜ்மோஹன் காந்தி ஆம் ஆத்மி கட்சியில் 21-02-2014 சேர்ந்த போது, ஆம்
ஆத்மி தொப்பியை மிகவும் சந்தோஷமாக அணிந்து, ‘கேஜ்ரிவால் காந்திக்கு
நிகர். அவரின் போராட்டத்தை உப்பு சத்தியாக்கிரகத்துடன் ஒப்பிடலாம்’
என்று போற்றியவர். காந்தியின் பேரர். ராஜாஜியின் உறவினர். மெத்த படித்தவர். தமது சிறந்த ஆய்வு அறிவாற்றலை, வெறும் ஆரவார அரசியலுக்கு
அடிமையாக்கி, அவர் கேஜ்ரிவாலைப் புகழ்துவிட்டார் என்று தான் இப்போது
கணிக்க முடிகிறது. ‘யானைக்கும் அடி சருக்கும்’ என்பார்கள். ராஜ்மோஹன் காந்தி யானையோ இல்லையோ ஆனால் அவரது
சருக்கல் மிகவும் கேவலமான சருக்கல். உண்மையில் அந்தச் சருக்கல்,
அவரின் ஆய்வுத் திறனையும், மதிப்பீட்டு அளவுகோள்களையும்
தவறு என்பதாகத் தான் கணித்து, அவரது கண்ணியத்தையும் சந்தேகிக்கும்
நிலைக்கு அவர் தன்னை ஆளாக்கி விட்டார் என்று தான் சொல்லத் தோன்றுகிறது.
ராஜ்மோஹன் காந்தி இன்னும் ஆம் ஆத்மி கட்சியில் இருக்கிறாரா
என்று தெரியவில்லை. அவரது ப்ளாக்கில் இது பற்றிய தகவல்
இல்லை. ஆனால் அவரது சமீபத்திய பேட்டி தரம் தாழ்ந்து விட்டதாகவே
படுகிறது. விமரிசிப்பதில் தவறு இல்லை. ஆனால்,
மேதாவியாக மக்களால் மதிக்கப்படும், போற்றப்படும்
ஒரு நபர் தமது கருத்துக்களை வெளியிடும் போது அதில் ஒரு தெளிவும், முடிந்தால் வழிகாட்டுதலும் இருந்தால் அது அவருக்குத் தான் பெருமை. மக்களுக்கும் அதனால் நன்மை பிறக்கும். ஆனால்,
அந்த அளவில் அவரது பேட்டி அமையவில்லையே என்ற ஆதங்கம் தான் எனக்கு ஏற்பட்டது.
பேட்டியின் முழு விவரமும் பிரசுரமாக வில்லை. அந்தப்
பேட்டியின் முக்கிய அம்சங்களை இதோ உங்கள் பார்வைக்கு வைக்கிறேன்.
‘நரேந்திர மோடியின் அரசாங்கம் ஒரு தனிநபர்
நாடகம். அவர் ஒருவர் தான் குதிரை. மற்ற
மந்திரிகள் - அவர்கள் அனைவரும் கழுதைத் தோல்கள் கொண்ட குதிரைகளாக
- அவர் பின்னே செல்பவர்கள். மோடியின் மந்திரி சபையில்
பல திறமைசாலிகள் இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எல்லாம் உயர்ந்த குதிரைகளாக - ஆனால் கழுதைகளின்
தோல்களைக் கொண்டவர்களாக மோடிக் குதிரையின் பின்னால் ஓடுபவர்களாக இருக்கிறார்கள்.
அந்த மந்திரிகள் கழுதைத் தனத்தை விட்டு, குதிரைகளாக
வலம் வரவேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
மோடியும் மஹாத்மா காந்தி போல் மக்களுடன் பேசி சக்தி
வாய்ந்த தொடர்பை ஏற்படுத்துவதில் வல்லவர் தான். ஆனால், காந்தி அந்த சக்தியை தமது கொள்கைக்குப் பயன்படுத்தினார்.
தன்னை முன்னிலைப் படுத்த பயன்படுத்தவில்லை. உப்பு
சத்தியாக்கிரஹ யாத்திரையின் போது காந்திஜியின் கவனம் எல்லாம் ‘உப்பு வரியை நீக்குவதில்’ தான் இருந்தது. அவர் தமது கொள்கைக்கான யாத்திரைப் போராட்டத்தில் தான் எப்படி நடந்து செல்ல
வேண்டும் என்ற எண்ணம் இருந்ததில்லை.
காங்கிரஸ் தோல்விக்கு அவர்கள் பதவியில் இருந்த போது
அரசாங்கத்தை சரிவர நிர்வகிக்க வில்லை என்பது மட்டும் காரணமில்லை. பலவித வதந்திகளைச் சரிவர விளக்காததும் காங்கிரசின்
தோல்விக்குக் காரணமாகும்.
காங்கிரஸ் காந்தி பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதாக
நாடுமுழுவதும் அவதூறு பரப்பப்பட்டன. நான் இந்தியாவில் எங்கு சென்றாலும், இந்த அவதூறைக் கேட்க
நேரிட்டது. இந்திரா காந்தியின் கணவர் ஒரு முஸ்லீமாக இருந்தாலும்,
அவரது பெயருக்கு முன்னால் காந்தி பெயரை காந்தியின் வம்சம் என்பதைக் காட்டுவதற்குப்
பயன்படுத்தினர். மோதிலால் நேருவின் முன்னோர்களும் முஸ்லிம்களாக
இருப்பினும், அவர்களும் தங்கள் பெயருக்கு முன்னால் காந்தியின்
பெயரை வைத்துள்ளனர். முஸ்லீம்களாக இருப்பினும் தங்களை இந்துக்களாக
காட்டுவதற்கு காந்தி பெயரை தங்கள் பெயருக்கு முன்னால் போட்டுள்ளனர். இத்தகைய வதந்திகளை காங்கிரஸ் சரியாக விளக்கத் தவறி விட்டது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை
என்பதை மக்களுக்கு ஆணித்தரமாக அடித்துச் சொல்ல காங்கிரஸ் தவறி விட்டது.’
1989-ம் ஆண்டு அமேதி தொகுதியில் ராஜிவ்
காந்திக்கு எதிராகத் தேர்தலில் நின்றும் தோற்றவர் தான் இந்த ராஜ்மோஹன் காந்தி.
அதன் பிறகு, 1990-ஆம் ஆண்டு ராஜ்யசபா மெம்பராக
காங்கிரசின் ஆதரவில் அவர் பதவி வகித்தவர். இப்போது, ஆம் ஆத்மி கட்சியின் மாயையில் மூழ்கியுள்ள ராஜ்மோஹன் காந்தியிடம் அவரது பேட்டியில்
இதற்கு மேல் எதிர்பார்ப்பது தவறு தான்.
உலகத் தலைவர்கள் மோடியின் அரசியல் பார்வை, நோக்கம், வேகம், விவேகம் ஆகியவைகளைப் புகழ்ந்து போற்றும் போது, இங்குள்ள
அரசியல் தலைவர்கள் மோடியின் செயல்கள் - செய்கைகள் தவறானவைகள்
என்று பொதுவாகத் தான் சொல்கிறார்கள். ஒபாமா சமீபத்தில்,
மோடியை ‘அரசாங்க அதிகாரிகளைத் திறம்பட வேலை வாங்குகிறார்’
என்றே புகழ்ந்துள்ளார். ‘குதிரை’ ‘கழுதை’ என்று மோடி மற்றும் மந்திரிகளைத் தூற்றுவதும்,
காங்கிரஸ் காந்தி லேபிலைச் சரியாக விளக்காததும் தான் அவர்களின் படு தோல்விக்குக்
காரணம் என்று கணிப்பது ராஜ்மோஹன் காந்தியின் தவறான கண்ணோட்டத்தையே காட்டுகிறது.
சோனியாவும் தம்மை சோனியா காந்தி என்றே அழைக்க விரும்புகிறார்.
ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி என்று தான் அவர்கள் தங்களை அடையாளம் காண விழைகிறார்களே அன்றி
நேரு பெயரை இவர்களோ - ஏன், நேருவின் மகள்
இந்திராவே தம்மை இந்திரா நேரு என்று குறிப்பிடாமல் இந்திரா காந்தி என்று தான் அழைக்கச்
சொன்னார். காந்தி சுதந்திரம் அடைந்த உடன் காங்கிரசைக் கலைத்து
அந்த கட்சியை சுதந்திரம் வாங்கிக் கொடுத்த ஒரு தேசிய அமைப்பாக உருவாக்க முயன்றார்.
காங்கிரஸ் என்ற பெயரில் அந்த கட்சியை அரசியல் களத்தில் இறங்காமல் இருக்கும்
படிச் சொன்னார். ஆனால், அதை அப்போதைய காங்கிரஸ்காரர்கள்
ஏற்க வில்லை என்ற சரித்திர உண்மை ராஜ்மோஹன் காந்திக்குத் தெரிந்திருந்தும்,
காங்கிரஸ் கட்சியின் பெயருடன், காந்தியின் பெயரையும்
நேரு குடும்பத்தினர் உறவு கொண்டாடுவதைத் தவறு
என்று கருதாமல் இருப்பதற்கான காரணங்களையும் அவர் தெளிவு படுத்தவில்லை.
காங்கிரஸ் காந்தியின் பெயரைக் காப்பாற்றாதது இருக்கட்டும். அவரது உண்மையான வாரிசான ராஜ்மோஹன் காந்தியே காந்தியின்
பெயரைக் காப்பாற்ற முடியாமல் குழப்பத்தில் இருப்பதாகவே படுகிறது.
சுதந்திரப் போராட்டத்தின் உச்ச கட்டத்திலும், பல தலைவர்கள்
காங்கிரசின் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். லோக மான்ய திலக், சுபாஷ் சந்திர
போஸ், பகத் சிங், வீர சாவர்க்கர்
போன்றவர்கள் ‘சுதந்திரம்
நமது பிறப்புரிமை’ என்பதில் ஒத்துப் போனாலும், அதைப் பெரும் வழிமுறைகளில் வேறுபட்டு செயல்பட்டனர். ஆனால், காங்கிரசின்
முக்கிய தலைவர்களான காந்திஜி, நேருஜி, பட்டேல் ஆகியவர்களை மிகவும் மதித்து நடந்தனர்.
அதன் பிறகு காங்கிரசின் பல தலைவர்களான ராஜாஜி, மொரார்ஜி தேசாய், ஜெ.பி.கிருபாலினி, ஜெயபிராகஷ்
நாராயணன், காமராஜ் ஆகியவர்கள்
காங்கிரசிடமிருந்து பிரிந்து தனியாகக் கட்சி அமைக்கும் நிலைக்குக் கூடத் தள்ளப்பட்டுள்ளார்கள். சிண்டிகேட் தலைவர்கள் என்று அவர்களை இழிவாகப் பழித்துள்ளனர்
காங்கிரஸ்காரர்கள். இருப்பினும் இந்த அனைத்துத் தலைவர்களும் காங்கிரசின் மும்மூர்த்திகளான - காந்தி, நேரு, பட்டேல் - ஆகியவர்களை
மிகவும் மதித்துப் போற்றி வந்துள்ளனர். அரசியல் கருத்துகளினால் ஏற்பட்ட வேறுபாட்டில் காரசாரமாக மேடைகளில்
விமர்சித்தாலும், அரசியல் நாகரீகத்தை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறியதில்லை. ஆகையால், இந்த மும் மூர்த்திகளும்
இந்தியாவின் தேசியத் தலைவர்களாகவே மதிக்கப்பட வேண்டும். இவர்களை காங்கிரஸ் என்ற கட்சிக் கூண்டில் அடைக்க முயலக் கூடாது.
ஆனால், இந்த உயர்ந்த தத்துவம் தற்போதைய காங்கிரஸ் தலைமை வகிக்கும்
சோனியா-ராகுல் குழுவினருக்குப்
புரியாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. ஏனென்றால், அவர்களுக்கு இந்தியாவை ஆளும் தகுதி தங்களுக்கு மட்டும் தான்
உண்டு என்ற கருத்து ஆழப்பதிந்து விட்டது.
இந்த எண்ணம் முன்பை விட இப்போது - தேர்தலில் படு தோல்வியைத் தழுவிய நிலையிலும் - நிலவி இருப்பது
காங்கிரசிற்கு நல்லதல்ல.
கடந்த 60 ஆண்டுகளாக, நேரு, இந்திரா காந்தி, ராஜிவ் காந்தி ஆகியவர்களின் பெயர்களிலேயே அனைத்து மக்கள்
திட்டங்களும், கட்டிடங்களும்
பெயரிடப்பட்டுள்ளன. காந்தி - படேல் மற்றும் பல தேசியத் தலைவர்கள் ஓரம் கட்டப்பட்டனர் என்பது
ஒரு சரித்திர உண்மை. அக்டோபர் 31-ம் தேதியை மோடி அரசு தேசிய ஒற்றுமை தினமாக அறிவித்து, அந்த நாளில்
உறுதிமொழியை மக்கள் அனைவரும் எடுக்கும் படி அரசு ஆணை பிறப்பித்து, செயல்படுத்தியது. ‘ஏற்கெனவே இந்திரா
காந்தியின் பிறந்த நாளான நவம்பர் 17-தேதியை தேசிய ஒருங்கிணைப்பு தினமாகக் கொண்டாட முந்தைய மத்திய
அரசு உத்தரவு இருக்கும் போது, பட்டேலின் பிறந்த தினத்தை அதே காரணத்திற்காக ஒற்றுமை தினமாக
அனுசரிப்பது சரியா?’ என்ற கேள்வியை செக்குலர் மேதாவிகள் உரக்க குரல் எழுப்பினாலும், காங்கிரஸ்காரர்கள்
இதை ஒரு பிரச்சனையாக எழுப்ப முடியாத சூழ்நிலையில் இந்திய மக்களால் தள்ளபட்டிருப்பது
நிதர்சனமான உண்மை.
‘இந்தியா என்றால்
இந்திரா - இந்திரா என்றால்
இந்தியா’ என்று கோஷம்
எழுப்பிய அந்நாளைய காங்கிரஸ் காரர்கள் ‘காங்கிரஸ் கட்சி தான் இந்தியாவை நிரந்தரமாக ஆளும்’ என்று நினைத்த
ஆரூடம் பலிக்க வில்லை. ‘காங்கிரசிலிருந்து இந்தியா விடுதலை. இந்தியாதான்
முதல் மற்றதெல்லாம் பிறகு’ என்று மோடி தேசிய உணர்வினை இந்திய மக்களிடம் ஊட்டும் இந்த
வேளையிலும், பட்டேலை இந்திரா
காந்தியுடன் ஒப்பிட்டு, ‘இந்தியாவின் இரும்புத் தலைவர்கள் - காங்கிரசின்
இரும்புத் தலைவர்கள்’ என்ற வரிகளை முன் வைத்து பட்டேல் - இந்திரா படங்களைப்
போட்டுள்ளனர். அதன் மூலம் ‘இரும்பு மனிதர்கள்
பட்டேல் மற்றும் அல்ல - பலர் உண்டு. அவர்கள் அனைவரும் காங்கிரசின் இரும்பு மனிதர்கள்’ என்று ஓட்டு
வங்கி வாசகமாக பட்டேலையும் - இந்திராவையும் குறுகிய அரசியல் கூண்டுக்குள் அடைத்து, அவர்களின் தேசிய
அந்தஸ்தை தவிடு பொடு ஆக்கிவிட்டனர்.
இந்திய ஒற்றுமைக்கு பட்டேலின் இடைவிடா உழைப்பும், தீவிரமான தீர்க்கப்
பார்வையும் கொள்கையும் மிகவும் உன்னதமான இடத்தைப் பிடித்துள்ளது என்பதற்கு எந்த பட்டி
மன்றமும் நடத்தத் தேவை இல்லை. இதில் இந்திரா காந்தியை பட்டேலுடன் ஒப்பிட்டுப் பார்ப்பதே
தவறு என்பது தான் பெரும்பாலான மக்கள் கருத்தாக இருக்கும். ஆகையால், பட்டேல் பிறந்த தினத்தைத் தான் காங்கிரஸ் ஒற்றுமை அல்லது
ஒருங்கிணைந்த தினமாக முன்பே தேர்வு செய்திருக்க வேண்டும். இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால், இந்திரா காந்தியே
தாம் பதவியில் இருக்கும் போதே, இதைச் செய்திருக்க வேண்டும். ஆனால், இந்திரா காந்தியே பட்டேலை நேருவுக்கு எதிர் என்ற நிலையில்
தான் கணித்துள்ளார் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன.
ஆனால், மோடி அரசோ காந்தி - நேரு - படேல் என்ற
மும் மூர்த்திகளுக்கும் தகுந்த மரியாதை கொடுக்க முன் வந்தால், அதில் அரசியல்
சாயம் பூசி, காங்கிரஸ்
தங்களையே தரம் தாழ்த்திக் கொள்கிறார்கள். இந்த அவல நிலையைத் தான் மேலே
உள்ள ஹிந்து தினசரி நாளிதழில் வெளியான கார்ட்டூன் வெளிப்படுத்துகிறது.
அந்த நீண்ட கட்டுரையின் மிக முக்கிய அம்சங்களை மட்டும் இங்கே
எடுத்துக் காட்டி உள்ளோம்:
28-ம் தேதி பிப்ரவரி 2012 அன்று ரூபாய் 5 கோடிக்கு மடிக்கணிகள் வாங்கியதாகக் கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில்
ஒரு மடிக்கணியின் விலை ரூபாய் 40,000 என்று கணிக்கிட்டால், 1250 மடிக்கணிகள் வாங்கப் பட்டிருக்கப்பட வேண்டும். ஆனால், சிங்வியின்
ஆபீஸில் வேலை செய்யும் வக்கீல்களின் எண்ணிக்கை வெறும் 14 ஆகும். இந்தச் செலவினங்களுக்கு ஆதாரமான ஆவணங்கள் இல்லை. கரையான் மேல்
பழி சுமத்தப்படுகிறது!
சோலார் பானல்
வாங்குவதற்கு ரூபாய் 35.98 கோடி செலவிட்டதாக சிங்வியின் கம்பனியான ரிஷாப் எண்டர்பிரைசஸில்
கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. அந்த சோலார் பானல் விற்ற கம்பனி 21.39 கோடி ரூபாய்க்குத் தான் தாங்கள் விற்றதாகவும், விற்ற தொகை
அதிகமாக எழுதி அளித்ததாகவும், மேலும் ரூபாய் 10
கோடி அளவில் சிங்வியின் மகன்களுக்கு கடனாகத் திருப்பிக் கொடுத்ததாகவும்
ஒப்புக் கொண்டுள்ளனர். ஆனால், சிங்வியின் கம்பனி ருபாய் 25.16 கோடிக்கு செலவு செய்ததாக (ரூபாய் 21.39 கோடிக்குப் பதில்) காட்டப்பட்டுள்ளது.
ருபாய் 10.97 கோடிக்கு செக்குகள்
மூலம் பட்டுவாடா செய்யப்பட்டது போலியானது என்பது தெரிய வருகிறது. ஏனென்றால், அந்த செக்குகளில்
கொடுக்கப்பட்ட 91 நபர்களுக்குக்
கடிதம் எழுதியதில், 37 பேர்களின் கடிதங்கள் திரும்பி வந்துள்ளன.
பல செலவின ரசீதுகள்
எந்தவிதமான பில்கள் இல்லாமல் சிங்வியால் கையொப்பமிட்டு கணக்கில் காட்டப்பட்டுள்ளன. 15 ஜனவரி 2011-லிருந்து 31 மார்ச் 2011 வரையிலுள்ள
கால கட்டத்தில்- அதாவது 2 ½ மாதங்களில் - 18199 ரசீதுகள் கம்பனியில் வேலை செய்யும் வக்கீல்களுக்கு பணம் அளித்ததாகக்
கணக்குக் காட்டப்பட்டுள்ளது. வருடாந்திர கணக்கு முடிக்கும் கடைசி நாளான 31-03-2011 அன்று
ஒரு நாள் மட்டும் சிங்வி கையெழுத்திட்ட ரசீதுகள் சுமார் 1207.
இந்தப் பின்னணியில் கோபால கிருஷ்ணகாந்தியின் ‘பட்டேலை காங்கிரஸ்
மதிக்காமல் மறந்தது தவறு. இந்த மகத்தான தவறை தற்போதைய மோடி அரசு சரிசெய்துள்ளது’ என்ற கருத்தை
அழுத்தமாகப் பதிவு செய்துள்ளார்.
அந்த ஆங்கிலக் கட்டுரை கொல்கத்தாவிலிருந்து வெளியிடப்படும்
தி டெலகிராஃப் பத்திரிகையில் பட்டேல் பிறந்த
நாளான 31-11-2014 தேதியில்
எழுதி வெளி வந்துள்ளது. அதன் இணைப்புக்கு கிளிக் செய்யவும்.
மேற்கு வங்க கவர்னராகப் பதவி வகித்த கோபாலகிருஷ்ண காந்தி, மோடி பிரதமராகப்
பதவி ஏற்றவுடன் கவர்னர் மற்றும் சென்னை கலாக்ஷேத்ராவின் சேர்மன் பதவியிலிருந்து
யாரும் கேட்காமலேயே விலகினவர். இவர் காந்தியின் பேரனாவார்.
|
Ø பட்டேலின் பிறந்த தினமும், இந்திராவின் அகால மரணமும் ஒரே நாளில் நிகழ்ந்துள்ளது. இதை அந்தத்
தலைவர்கள் முடிவு செய்ய வில்லை. ஆனால், இந்திரா காந்தியும், அதற்குப் பின் காங்கிரசும், பட்டேலின் பிறந்த நாளைச் சரியான முறையில் கொண்டாட வில்லை
என்பது மிகவும் வருந்த வேண்டிய விஷயமாகும்.
Ø இந்திரா காந்தி ஆட்சி செய்த கால கட்டத்தில், அவர் சர்வாதிகாரத்
தலைவர் போல் செயல்பட்டதால், 1975-ஆண்டு சர்தார் வல்லபாய் படேலின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவில்லை. அப்போது இந்தியா இந்திரா காந்தியின் எமர்ஜென்சி ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் கட்சி
ஆண்ட மாநிலங்களும் அம்மையாரின் அடிச்சுவட்டைப் பின்பற்றி, விழா எடுக்காமல் பட்டேலைப் புறக்கணித்தனர். இதில் குஜராத்தும்
அப்போதைய காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்ததால், இந்திராவை எதிர்த்து விழா எடுக்கத் துணியவில்லை.
Ø இப்போது 2014 மோடி அரசு காங்கிரசின் இந்த அரசியல் தவறை சரிசெய்ய பட்டேலின்
பிறந்த நாளைச் சிறந்த முறையில் கொண்டாடுகிறது.
Ø இந்த அரசியல் திருத்தம் காங்கிரசைத் தலைகுனிய வைக்கும். பட்டேல் இந்தியாவை
ஒருங்கிணைத்து ஒரு சக்தி வாய்ந்த இந்தியாவை உருவாக்கியவர்.
Ø காங்கிரஸ் விடுதலை பெற்றுத் தந்த தலைவர்களை தங்களின் மனம்
போல் பிரித்துக் கொண்டாடுவது மக்கள் மத்தியில் எடுபடாது.
Ø காங்கிரஸ் ஒரு குடும்பத்திற்குத் தான் சொந்தமானதாகவும், நேரு குடும்பம்
ஒன்று தான் எதையும் தீர்மானிக்கும் அதிகாரமும், தகுதியும் பெற்றது என்ற நிலை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. இந்த மாதிரி
கருத்தை, நேருவே மூர்க்கமாக
நிராகரிப்பார் என்பதையும் இன்றைய காங்கிரஸ் உணரவில்லை.
Ø இந்த மாயையில் முழு நம்பிக்கை கொண்டு சோனியா காந்தி செயல்படுகிறார்.
Ø காங்கிரஸ் பட்டேலைச் சரியானபடி மதிக்க மறந்ததால், தற்போதைய தேசிய
ஜனநாயக கூட்டணி அரசு அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளது.
Ø நேரு - பட்டேல் கருத்து வேற்றுமைகள் வெளிப்படையானவைகள். அவர்கள் பகிர்ந்த
கடிதங்களே இதற்குச் சாட்சி. ஆனால், தேச நலன் குறித்து, அந்த இரு மஹா பெரும் தலைவர்கள் சமாதனமாகி ஒற்றுமையாகச் செயல்பட்டார்கள். அதிலும், காந்திஜியின்
தீடீர் மரணம் பட்டேலை ஒரே அடியாக மாற்றி விட்டது. இந்தூரில்
2-10-1950 அன்று காங்கிரஸ் ஊழியர்களுக்குச் சொன்னார்: ‘என்னை துணைப்
பிரதமர் என்று சொல்கிறீர்கள். ஆனால், நான் அப்படி என்னைக் கருதுவதே இல்லை. நேருவை பாபு
தனது வாரிசாக நியமித்துள்ளார். ஆகையால், நேரு சொல்படி நடவுங்கள். அது தான் நாம் பாபுவுக்குச் செய்யும் நன்றி. யார் மனப்பூர்வமாக
நேருவுக்கு ஆதரவு கொடுக்க வில்லை என்றாலும் அவர்கள் அனைவரும் கடவுள் முன்னால் பாபிகளாகவே
கருதப்படுவார்கள்.’
Ø ராஜாஜியை விடுத்து, ராஜேந்திர பிரசாத் ஜனாதிபதியாக ஆனதற்கும், நேரு பிரதமராக
ஆவதற்கும், பட்டேல் தான்
காரணம். ஆனால், ராஜாஜி பட்டேலிடம்
உள்ள அன்பு பாதிக்கபடவில்லை.
Ø நேருவிடம் பட்டேல், ‘பண்டிட்ஜி! நீங்கள் என்னிடம் நம்பிக்கை இழந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்’ என்று சொன்னதற்கு, ‘பட்டேல்ஜி! என் மேலே இப்பொழுதெல்லாம்
நம்பிக்கை இழந்துள்ளேன்’ என்று நேருவும் தமது நிலையை விளக்கி உள்ளார். தன்னைப் பார்க்க
வந்த என்.வி.காட்கிலிடம்
அவரது கைகளைப் பிடித்துக் கொண்டு பட்டேல் சொன்னார்: ‘நேருவின் கருத்துக்களுடன் உங்களது கருதுக்கள் எவ்வளவு முரண்பட்டாலும், நீங்கள் நேருவை
கைவிடக் கூடாது.’
நேருவும் - பட்டேலும் தங்களது கருத்து
வேற்றுமைகளைக் களைந்து ஒன்றாக அரசை வழி நடத்திச் சென்றார்கள் என்ற சரித்திர நியதியை
பி.ஜே.பி.யும், காங்கிரசும்
நினைவில் கொள்ள வேண்டும்.
125-ம் நேருவின்
பிறந்த நாள் கொண்டாட்டத்தில், காங்கிரஸ் தலைவரை முன்னின்று நடத்திக் கொடுக்கும் படி வேண்டு
கோள் விடுத்து, பட்டேலின் ராஜ
தர்மத்தை மோடி அரசு கடைப்பிடிக்க வேண்டும் என்று கருதுகிறேன்.
அபிஷேக் மனு சிங்வி ஒரு மூத்த வக்கீல். காங்கிரஸ்
கட்சியின் ராஜ்ய சபா அங்கத்தினர். மேலும், அவர் இப்போதைய காங்கிரஸ் கட்சியின்
பிரதம மீடியா பேச்சாளராவார். அவர் மீது வரி ஏய்ப்புக் குற்றத்திற்காக வருமான வரி தீர்வுக்
குழு ரூபாய் 56.75
கோடி அபராதம்
விதித்துள்ளது. அதை எதிர்த்து ஜோத்பூர் நீதிமன்றத்தில் இந்த வருமான வரிக்
குழுவின் தீர்ப்பை நிறுத்தி வைக்க மனு தாக்கல் செய்துள்ளார் அபிஷேக் மனு சிங்வி.
ரூபாய் 91.95 கோடி அளவில்
சென்ற மூன்று ஆண்டுகளில் தனது வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்புச் செய்துள்ளதால், அபராதமாக ரூபாய் 56.67 கோடி கட்டும்
படி வருமானத் துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்த வரி ஏய்ப்பு எப்படிச் செய்யப்பட்டது என்ற விளக்கமும்
வருமானத் துறை கூறி உள்ளது. அது கூறி உள்ள
103 பக்க அறிக்கையின் மிகவும் முக்கியமான சாராம்சம் இதோ:




இதற்கு
சிங்வியின் பதில் என்ன?
“எனது செலவின ரசீதுகள் அனைத்தையும் கரையான அரித்து விட்டதால், நானாகவே வருமான
வரி தீர்ப்பாயத்தை நாடினது தவறாகப் போய் விட்டது. இது பூனை-எலிச் சண்டைபோல் என்னை மாட்டிவிடும் நிலைக்குத் தள்ளி விட்டது. நான் அதிகமாக
வருமான வரி செலுத்தும் நபர். கடந்த 20 ஆண்டுகளாக நான் தான் அதிக வரி கட்டுபவர்களின் பட்டியலில்
முதல் அல்லது இரண்டாவது இடத்தில் இருப்பவன். மடிக்கணினிச் செலவினத்தை சராசரி விலையில் கணக்கிட்டுள்ளது
தவறு. சில மடிக்கணினிகள்
விலை உயர்ந்தவைகள் என்பதையும், பலர் கம்பனியில் மூன்று ஆண்டுகளாக வேலையில் சேர்ந்து, பிறகு வேலையிலிருந்து
சென்று விட்டனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வில்லை. அதே போல் சோலார் பானலின் செலவைப் பற்றிய விசாரணையில் ஒரு
நபரின் அறிக்கையை நம்பி உள்ளனர். என்னை அவரைக் குறுக்கு விசாரணை செய்ய அனுமதிக்க வில்லை. தேய்மானச் செலவான
ரூபாய் 14.39 கோடி அளவில் - அது சட்டம்
அனுமதித்த போதிலும் - வருமான வரித்துறையினர் அதைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை. விலை 13.77 கோடி அளவில்
அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள் ரூபாய் 5.5 கோடிதான் அதிகமாக காண்பிக்கப்பட்டதாகக் கொள்ள வேண்டும். அதன் படி நான்
கட்ட வேண்டிய அபராதத் தொகை 1.5 கோடியாகத்தான் இருக்க வேண்டும்.’
சிங்வியின்
பதிலில் நேர்மை இல்லை. “ரசீதுகளை கறையான் அரித்து விட்டது. ஆகையால் நான்
சொல்வதை ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்பது தான் அவரது வாதம். வாங்காத மடிக்கணிகள், வாங்கிய ஆனால் விலை குறைவாகக் காட்டப்பட்ட சோலார் பேனல் ஆகியவைகளுக்கு
தேய்மானச் செலவை அளிக்கச் சொல்வது தர்மம் இல்லை. அதை எல்லாவற்றையும் விட பல கோடிகளுக்கு தானே ரசீதுகளை உருவாக்கிச்
செலவினமாகக் காட்டி இருப்பது ஒரு பெரும் பண மோசடி என்பதை படித்த மேதாவியான சிங்வி உணராதது
வேடிக்கையாகும்.
வரி
ஏய்ப்பு மட்டும் இன்றி அவர் மோசடியும் செய்திருப்பதால், சிங்வியின் தரப்பில் எந்தவிதமான நேர்மை இல்லை. மோடி அரசு இல்லாமல், சோனியா அரசு
வந்திருக்குமானால், சிங்விக்கு வரி ஏய்ப்பிலிருந்து பரிபூரண விடுதலையுடன், அவர் தான் அதிக
வரி கட்டியதில் முதன்மையானவர் என்ற பட்டமும், பதக்கமும், பாராட்டும் - ஏன், மந்திரிப் பதவியும் கிடைத்திருக்கும்.
சத்யமேவ ஜெயதே!
Comments