துளசிச் செடியின் மகிமையைப் பறை சாற்றும் நாசா விஞ்ஞானிகள்
சூடான செய்தி:
துளசிச் செடியின் மகிமையைப் பற்றி இந்துக்கள் நன்றாகவே தெரிந்து
வைத்துள்ளனர். ஆனால் அது வெறும்
பக்தியின் வெளிப்பாடு என்றும், வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த அபிப்பிராயம் என்றும்
இந்துக்களை எள்ளி நகையாடுபவர்களும், நாத்திகர்களும் உண்டு. ஆனால், அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள், நிலாவில் தண்ணீர் இருப்பதால் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பதை
சோதிக்க, பூமியிலிருந்து
ஒரு செடியை சந்திரமண்டலத்திற்கு அனுப்பி, வளர்க்க இருக்கிறார்கள். அந்தச் செடி, துளசி!
இதற்கு அவர்கள் கூறும் காரணங்கள் என்ன?
எந்தச் செடிக்கும் இல்லாத அற்புதத் தன்மை துளசிக்கு உண்டு
என்று கண்டறிந்து சொன்ன உண்மை இது தான்: ‘உலகத்திலேயே 24
மணி நேரமும் சுவாசிக்கும் ஒரே தாவரம் துளசி மட்டும் தான். அது மட்டும்
தான் 24 மணி நேரமும்
தூய்மையான ஆக்சிஜனை நமக்குத் தரும். கரிமிலவாயுவை எடுத்துக்கொண்டு தூய்மையான பிராணவாயுவை எப்போதும்
எந்த சூழ்நிலையிலும் தரும் சக்தி துளசிக்கு மட்டுமே உண்டு.’
சந்திரமண்டலத்தில் ஆக்சிஜன் உருவாக வேண்டும், அதன் மூலம்
மனிதர்கள் அங்கே வாழ வழிவகுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நாசா விஞ்ஞானிகள் துளசியை
நிலாவிற்கு அனுப்பி சோதிக்க உள்ளார்கள்.
சுவையான விவாதம்:
முன்பு துளசி இல்லாத வீடுகளில் இந்துக்கள் வசிக்க மாட்டார்கள். துளசி மாடம்
பூஜை அறை ஆகியவைகள் வீட்டிலே மிகவும் பக்தியுடன் தொழப்பட்ட வழிமுறை இந்தக் காலத்தில்
கொஞ்சம் கொஞ்சமாக மறைந்து விட்டன. துளசி மாடங்களும் மறைந்தும், பூஜை அறைகள் சுருங்கியும் அல்லது மறைந்தும் போய்விடும் நிலையே
காணப்படுகிறது.
எதற்கும் காரணம் தெரியாமல் நாங்கள் அதை அங்கீகரிக்க மாட்டோம்
என்பது இந்த விஞ்ஞான உலகத்தில் அதிலும் இந்துக்களிடம் மிகவும் மூர்க்கமாக இருக்கிறது. இது ஒரு கோணத்தில்
சரியாக இருப்பினும், காரண காரியங்களைப் புரிவதற்கு முன் அதற்குரிய பக்குவம் அடைய
அறிவும், அனுபவமும் இரண்டும்
வேண்டும் என்பதையும் அவர்கள் மறக்கக் கூடாது. தாய் - தந்தையர், ஆசிரியர், மத குரு ஆகியவர்களின் வார்த்தையில் சிறிது நம்பிக்கை வைத்து
நடப்பதும் அவர்கள் வாழ்க்கைக்கு உதவுமே அல்லாது அவர்களை ஆபத்தில் தள்ளாது என்ற நிலையில்
செயல்படுவது நலம். உணர்ச்சி மற்றும் வெறும் அறிவு பூர்வமானவைகள் பிறகு தீர்க்கமான
ஆய்விற்குப் பின் மாறும் நிலையை நாம் பலவற்றில் பார்க்கும் போது, சிறிது நம்பிக்கையைக்
கொண்டு வாழ்வை நடத்திச் செல்வது நலம் அளிக்கும் என்பதையும் சிந்திக்க வேண்டும் என்பது
தான் நம் விண்ணப்பம்.
துளசியை பெருமாள் கோயில் பிரசாதமாக ஏற்காவிட்டாலும், அதன் இருமல், ஜலதோஷம் போக்கும்
குணத்திற்கும், சுற்றுச் சூழலைப்
பாதுகாக்கும் தன்மைக்கும் அதை ஏற்க வேண்டும் என்பது தான் நமது வாதம்.
இப்போதையை யு.எஸ்.பிரசிடண்ட் ஒபாமா எப்போதும் தம்முடைய சாட்டைப்பையில் ஒரு
சிறிய ஹனுமான் சிலையை வைத்திருப்பார் என்ற செய்தியை நாம் படித்திருப்போம். இதை மூட நம்பிக்கை
என்று சொல்லாமல், இந்த அவரது செயல் அவரது மனத்திற்கு சக்தி அளிக்குமானால், அதை அவர் செய்வதைப்
பிறர் கேள்வி செய்வதில் அர்த்தமே இல்லை.
ஞானம் விஞ்ஞானத்தை விட உயர்ந்தது என்று பல விஞ்ஞானிகளே வெளிப்படையாகவே
ஒப்புக் கொண்டுள்ளனர். ஆகையால், ஞானம் - விஞ்ஞானம் இரண்டையும்
நமது இரு கண்களாகவே மதித்து, வாழ்வில் உயர்ந்து உய்வோம்.
தமிழ் நாட்டில் காமராஜ் ஆட்சி அமைக்கும் கோஷ்டிகள்:
இரண்டு திராவிட கட்சிகள் தமிழ் நாட்டில் வேரூண்றி காங்கிரசை
இரண்டாம் தர அரசியல் கட்சியாக கடந்த பல ஆண்டுகளாக தமிழ் நாட்டு மக்கள் தள்ளி வைத்துள்ளனர். கோஷ்டி அரசியல்
பல கட்சிகளில் இருப்பினும், காங்கிரஸ் கட்சியைப் போல் வெளிப்படையாக எந்த கோஷ்டிக்கு எந்த
தலைவர் - தொண்டர்கள்
என்ற நிலை வேறு எந்த மாநில - அகில இந்திய கட்சிகளில் பார்க்க முடியாது. அதற்கு காங்கிரஸ்
மேலிடம் தான் முக்கிய காரண கர்த்தா. இதற்கு பிள்ளையார் சுழி இட்டவர் இந்திரா காந்தி. அதைத் தொடர்ந்து
இப்போதும் காங்கிரஸ் செயல்படுத்துகிறது. மோடி அலை தமிழ் நாட்டிலும் வீசி, தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தற்போது புதிய தலைவலியாக மூப்பனார் மகன் ஜி.கே. வாசன் தனியாக
தமிழ் மாநில காங்கிரஸ் (மூப்பனார்) கட்சி என்ற பெயரில் காங்கிரசிலிருந்து பிரிந்து தொடங்கி விட்டார். மூவர்ணக் கொடியின்
மத்தியில் காமராஜ் - மூப்பனார் படங்களைப் போட்டு, வளமான தமிழகம் - வலிமையான இந்தியா என்ற கொள்கையை கோஷமாகச் சொல்லி களத்தில்
இறங்கி உள்ளார். அவரது கட்சியில்
பல காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்கள் சேர்ந்துள்ளார்கள் என்று ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், தமது கட்சிப்
பெயரில் காமராஜரை விடுத்து, மூப்பனார் பெயர்
மட்டும் இடம் பெற்றதன் ரகஸ்யம் என்ன என்பது இன்னும் பிரச்சனையாக எழுப்பப் படவில்லை.
சமீபத்தில் எம்.ஜி. தேவசஹாயம் ஹிந்துவில் ‘காமராஜர் மரபுவழிக் காவலர்கள்’ என்ற தலைப்பில் இந்த காமராஜாரின் திடீர் அபிமானிகளைப் பற்றி
தனது கருத்தினை மிகவும் தெளிவாக விவரித்துள்ளார். அந்த கட்டுரையின் மூலக் கருத்தினை இங்கே தருகிறோம். அவரது ஆங்கிலக்
கட்டுரைமூலம்: இணைப்பு
காங்கிரசின் ‘காமராஜர் ஆட்சி’ என்ற கொள்கையும், கோஷமும் ஒரு ஏமாற்று வித்தை. காமராஜர் 2-10-1975
அன்று காலமானார். அது காங்கிரஸ் கட்சி மத்தியில் இந்திரா அம்மையாரின் ஆட்சி
செய்த எமர்ஜன்சி காலமாகும். நான் அப்போது சண்டிகாரில் கலக்டராகப் பணியில் இருந்தேன். அப்போது இந்திரா
காந்தியின் முக்கிய எதிரியான ஜெயபிரகாஷ் நாராயணன் என்னுடைய பொறுப்பில் ஒரு கைதியாக
இருந்தார். ஜெயபிரகாஷ்
அவர்களின் உயர்ந்த தன்மையால் ஈர்க்கப்பட்ட நான், அவரைத் தினமும் சென்று பார்ப்பேன். அப்போது பல
வகையான முக்கிய சரித்திர-அரசியல் விஷயங்களை அவர் எனக்குத் தெரிவித்துள்ளார். அதில் ஒன்று
தான் அவர் காமராஜரைப் பற்றி என்னிடம் சொன்னது. அந்த சமயத்தில், இந்திரா காந்தி காங்கிரசை உடைத்து, அவர் சர்வாதிகாரிணியாக 1969 வருடம் செயல்பட்டதையும்
என்னுடன் ஜெயபிரகாஷ் பகிர்ந்து கொண்டார்.
அந்த பகிர்தலுக்கு மறுநாள் நான் அவரைச் சந்திக்கச் சென்ற
சமயத்தில், ஜெயபிரகாஷ்
நாராயணன் அன்றைய தினசரியில் காமராஜர் இறந்த செய்தி பிரசுரமானதைப் படித்துக் கொண்டிருந்தார். அப்போது அவர்
என்னிடம் மிகவும் மனம் வேதனைப்பட்டுச் சொன்னார்:’இந்த முக்கியமான தருணத்தில் இந்தியா காமராஜரை இழந்துவிட்டது. விதி இந்தியாவை
மிகவும் கொடூரமாக தாக்கி உள்ளது என்று தான் நான் கருதுகிறேன். காமராஜ் மிக
நல்ல மனிதர். எளிமையானவர். மிகவும் நேர்மையானவர். இந்திரா காந்தியை
காங்கிரசின் பிரதம மந்திரியாக்க காமராஜர் முக்கிய பங்காற்றினார். ஆனால், அதற்கு காமராஜரே
மிகவும் மனம் வருந்தினார். காங்கிரசிற்கும், இந்தியாவிற்கும் இதனால் நேர்ந்த கதியை நினைத்து காமராஜர்
வருந்தினார்.’
அந்த சமயத்தில், நான் ஜெயபிரகாஷ் அவர்களிடம், ‘எமர்ஜன்சியை அமல் படுத்திய உடன், காமராஜர் காண்ணீர் மல்க, ‘எல்லாம் போச்சு, என் தப்பு’ என்று வெளிப்படையாகச் சொன்னதாக நான் தெரிவித்தேன்.
ஜெயபிரகாஷ் நாராயணன் ஜெயில் டைரியில் 3-10-1975 அன்று எழுதிய
குறிப்பு: ‘காமராஜர் நேற்று
சென்னையில் மாரடைப்பால் காலமானார். ஒரு பெரிய வீரமான இந்திய அரசியல் தலைவர் ஒருவரை இழந்துள்ளோம். அவரது வாழ்வின்
காரியம் இன்னும் முடியவில்லை. டெல்லியில் என்னை அவர் சந்தித்த போது இப்படிச் சொன்னார்: ஜே.பி.! நீங்கள் செய்யும்
காரியம் ஒன்று தான் இந்தியாவைக் காப்பாற்றும் ஒரே ஒரு நம்பிக்கையாக இருக்கிறது.’
‘இந்திரா காந்தியை
நான் நம்பவில்லை. இந்திரா காந்தியும் என்னை நம்ப வில்லை’ என்று காமராஜர்
ஜெயபிராஷிடம் தெரிவித்துள்ளார்.
‘நான் காமராஜரிடம்
தமிழ் நாட்டு அரசியலைச் சீர்திருத்த வேண்டினேன். ஆனால், அவரது அகால மரணம் இந்த எனது வேண்டுகோளுக்கு முற்றுப் புள்ளி
வைத்து விட்டது. அத்துடன், இந்திரா காந்தி
காமராஜரின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டதனால், அவர் ஆரம்பித்த காங்கிரஸ் (ஓ) காணாமல் போய்விட்டது’ என்று ஜெயபிராஷ் தெரிவித்துள்ளார்.
அதன் பிறகு தான் ஜனதா கட்சி தோன்றி, இந்திராவையும், அவரது காங்கிரஸ்
கட்சியையும் படு தோல்வி அடைய வைத்தது. காமராஜர் அப்போது உயிருடன் இருந்திருந்தால், அவரே பிரதம
மந்திரியாகப் பதவி வகித்திருப்பார். ஆகையால், எந்த விதத்திலும், காங்கிரஸ் கட்சி காமராஜரைச் சொந்தம் கொண்டாடுவது ஏற்புடையதே
இல்லை.
Comments