Posts

Showing posts from November, 2013

ரஜனி ஸ்டைல் டயலாக்

Image
    நான் லேட்டா வந்தாலும் – லேட்டஸ்டாகத் தான் வருவேன்.   பணம் பத்தும் செய்யும்                                                                                 இந்த பாபா பதினொன்னும் செய்வான். பாம் போட்டாத்தான் வெடிக்கும்          பாபா சொன்னாலே வெடிக்கும். பகவானைக் கும்பிடு         இந்தப் பாவாவை நம்மிடு. அசந்தா அடிக்கறது மத்தவங்க பாலிசி         அசராம அடிக்கறதுதான் என் பாலிசி. நான் சொல்லிட்டு யோசிக்கறதில்லை         யோசிச்சிட்டு சொல்றவன். நான் சாய்பாபா இல்லை         எந்தப்பக்கவும் சாயாத பாபா. பாபா ஒரு கண்டக்டர் தான்         உங்க வழி வந்த கண்டக்டர்.     ...

தர்பையும், தர்மமும்

Image
பல வருடங்களுக்கு முன் நடந்தது. திராவிடக் கழகத்தின் பிராமணத்துவேஷம் உச்ச கட்டத்தில் இருந்த நேரம். சென்னை திருவல்லிக்கேணியில் இந்து உயர்நிலைப்பள்ளியில் படிக்கும் நாங்கள் நான்கு நண்பர்களும் இணைபிரியாது இருந்தோம். அதில் எனது நண்பன் ஒருவன் தான் கட்டுக்குடுமியுடன் இருந்தான். அவனுக்கே தன் குடுமியின் பேரில் ஒரு வெறுப்பு. ஆனால் அவன் அப்பா ரொம்பவும் வைதிகம். குடுமியை எடுக்க அவர் ஒரு போதும் சம்மதிக்க மாட்டார் என்பது எங்கள் எல்லோருக்கும் தெரியும். ஒரு நாள் நாங்கள் பைக்கிராப்ஸ் ரோடில் நடந்து போய்க்கொண்டிருந்தோம். அப்போது கருப்புச் சட்டை போட்ட தி.க. கட்சியினர் இருவர், 'ஏய்! குடுமி! இங்க வாடா!' என்று என் நண்பனைக் கூப்பிட்டார்கள். நாங்கள் அனைவரும் பயந்து போய் நின்று விட்டோம். ஒருவன் என் நண்பனின் கட்டுக்குடுமியை கத்தரித்தான். மற்றவன் அவனது பூணூலை வெட்டினான். வெட்டிய பூணூலால் வெட்டிய குடுமியை ஒரு கட்டுப்போட்டு என் நண்பனின் கையில் திணித்தான். 'பாப்பாரப் பயல்களே! போங்கடா!' என்று விரட்டினான். அங்கிருந்து நாங்கள் நால்வரும் ஒடி என் நண்பனின் வீட்டில்தான் நின்றோம். நடந்ததை அற...

திய்வதேசத்திற்கு இணையான பெருமாள் - ஆக்கியோர்: திருமதி. வத்ஸலா சங்கரன்.

Image
எனது தாயார் உயிரோடு இருந்த போது , நாங்கள் குடியிருந்த வீட்டிற்கு வலது பக்கத்தில் இருந்தது ஒரு பெருமாள் கோயில். எனது அம்மா தினமும் வழிபடும் தெய்வம் அது. அந்தக் கோயில் பிரசித்து பெற்றது என்பது சமீபத்தில் தான் ஒரு பத்திரிகைவாயிலாக அறிந்தேன். அதை ' வாய்மை ' பத்திரிகை மூலம் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். சற்றேறைக்குறைய 200 ஆண்டுகளுக்கு முன்பாக சிறிய மூலவருடன் இருந்த போது பெருமாளை இடைவிடாது தரிசனம் செய்து வந்த ஒரு பெரியவரின் கனவில் ஆஜானுபாகுவாக தோன்றி , “ நீ என்னைப் போல் உருவம் செய்து வழிபட்டு வா!” என்றாராம். அந்த சமயத்தில் ஒரு பெரிய மணி மட்டும் அக்கோலில் கட்டப்பட்டு இருந்ததாம். இதற்குப் பிறகு , பெரிய திருமேனியாக மூலவரையும் , மணியின் அவதார புருஷரான தேசிகனையும் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர். படங்கள்: சென்னை , புரசவாக்கம் வெள்ளாளத்தெருவில் உள்ள கோயிலின் தோற்றமும் , மூலவரின் தோற்றமும். 1896- ல் ஜெகன்னாத செட்டியாரால் கட்டப்பெற்ற இக்கோயில் 1980- ல் பரம்பரை அறங்காவலர் நடராஜனால் புனருத்தாரணம் செய்யப்பட்டது. 100 வருடங்கள் இடைவிடாது திருவாராதனம் நடந்தால் , அக்க...

எழுதுகோல் ஆக்கியோன்: கரன்சங்க்

1. வான்புகழ் வள்ளுவன் நீதிக்கோல் , பண்புகழ் சிலம்பின் கற்புக்கோல், நாண்புகழ் கம்பராமன் வீரக்கோல், மண்புகழ் மணிமேகலை துறவுக்கோல், எங்கே, எங்கே , எங்கே ? 2. எழுத்திலே எழிச்சி எங்கே ? எண்ணத்தின் ஏற்றம் எங்கே? தர்மத்தின் தன்மை எங்கே? தர்க்கத்தின் வெண்மை எங்கே? 3. எழுதுவதெல்லாம் எழுத்துமில்லை , எண்ணுவதெல்லாம் எழுதுவதற்கில்லை! எழுதுகோலே எழுந்து கொள்ளாயோ? ஏற்றமிகு புதினம் படைத்துத் தள்ளாயோ? 4. கன்னத்தின் களையிழந்து , காதணியின் ஒளியிழந்து , கண்களிலே கண்ணீரோ, தமிழ்த்தாயே! கலியுகத்தில் காசுக்குப் பலியான எழுதுகோலை, கருத்துமிக்க காவியத்தால் தகர்ப்பேன் தாயே!

இலக்கியம் - ஆக்கியோன்: ஜயந்திநாதன்

' சிருஷ்டிக்கப் பட்டதெல்லாம் அழியும். ' ' சிருஷ்டிக்கப் பட்ட பல அழிகின்றதினால் , எல்லாமே அழியும் என்பது அறிவாகாது , உண்மையுமன்று. ' ' பின் , சிருஷ்டிக்கப்பட்டதில் அழியாத ஒன்றையாவது சொல் , பார்க்கலாம்! ' ' இலக்கியம்! ' ' மனிதனுக்கே அழிவிருக்கும் பொழுது , அவனால்-அவனது அழியும் கைகளினால் படைக்கப் பட்ட இலக்கியமும் அழியாமல் எப்படி நிலைத்திருக்க முடியும் ?' ' இலக்கியம் மனிதனுடைய கைகளினால் படைக்கப்பட்டதல்ல , என்னருமை நண்பனே! அது அவர்களின் அழியாத ஊற்றாகிய உள்ளத்திலிருந்து பிறந்த அழியாக் கருவூலங்கள்! ' ' தானே அழியப்போகிறவன் , அழியாப் பொருளைப் படைக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை! ' ' சரி. உனக்குப் புரிவதாற்காக ஒரு உதாரணம் காட்டுகிறேன். ஒரு பெரும் தோட்டம். ஒருவன் களைத்து வருகிறான். சிறிது தூரத்திலே ஒரு மாமரம் தெரிகிறது. மிகுந்த ஏக்கத்துடனும் , ஆர்வத்துடனும் அதை நாடி ஓடிச் செல்கிறான். மரம் அவனுக்கு தஞ்சமளிக்கிறது. மரத்தின் நிழல் அவனைத் தழுவிக்கொள்கிறது. தென்றல் காற்று குளுமையை அள்ளி வீசுகிறது. அவன் மரத்தை...

சித்திர எழுத்துக்கள்

Image

யாக்யவல்கியரின் விளக்கங்கள்

யாக்யவல்கியரின் விளக்கங்கள் எழுத்து: ஜயந்திநாதன் மஹா பாரத்தில் பகவத்கீதைக்குப் பிறகு வாழ்க்கைக்கு உபயோகமான எந்தக் காலத்திற்கும் ஏற்ற மிகவும் உயர்ந்த தத்துவங்கள், கருத்துக்கள், நீதிகள் ஆகியவைகளைக் குறள்போல் மிகவும் தெளிவாகவும் சுருக்கமாகும் சொன்ன சருக்கம் 'யக்ஷனின் கேள்விகளுக்கு யுதிஷ்டிரர் சொல்லிய பதில்களைச்' சொல்ல வேண்டும். தனது நான்கு சகோதரர்களும் ஒரு தடாகக் கரையிலே இறந்து கிடப்பதைப் பார்த்தும் மனம் தளராமல் தர்மத்தை யக்ஷனின் கேள்விகளுக்குப் பதில்களாகத் தெரிவித்தார் தருமர். யக்ஷனே தர்மதேவதையாக வந்தாகச் சொல்லப் படுகிறது. பாண்டவர்கள் வனவாசம் செய்யும் பொழுது, ஒரு பிராமணனின் ஆச்ரமத்திலிருந்த ஹோமம் செய்ய அக்னி மூட்டுவதற்கான ஆரணிக் கட்டைகளை ஒரு கலைமான் தன் கொம்புகளில் மாட்டிக் கொண்டு, காற்றைப் போல் ஓடியது. இதைப் பார்த்த அந்த பிராமண சந்நியாசி பாண்டவர்களிடம் அந்த ஆரணிக்கட்டைகளை மீட்டுக் கொடுக்க வேண்டினான். ஆனால், அந்த மான் மாயமாய் மறைந்து விட்டது. மானைப் பிடிக்க கானகத்தில் ஓடி அலைந்த பாண்டவர்களுக்குக் களைப்பும் தாகமாகவும் இருந்தது. தண்ணீர் தடாகத்தைத் ...

ஜென் தத்துவம்

Image

ப்ரித்விராஜன் ஒரு வீரன் - அரசனல்ல

Image

நான் ஏன் ஒரு நாஸ்திகவாதி? ஆக்கம்: பகத் சிங்

Image
குறிப்பு : இந்தக் கட்டுரை 5-6, அக்டோபர் 1930 வாக்கில் எழுதப்பட்டது .  தழுவலான மொழிபெயர்ப்பு : எஸ் . சங்கரன் .   எங்கும் நிறைந்துள்ள , சர்வ வல்லமை பொருந்தியதாகச் சொல்லப்படும்  கடவுளைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லாத நிலைக்குக் காரணம் எனது திமிரான கர்வமும் (pride), வீண் பகட்டு தற்பெருமையும் (vanity) என்று நினைத்தால் , அது ஒரு விவாதப் பொருளாகும் . இது மாதிரியான ஒரு விவாதத்தில் நான் ஒரு நாள் வருங்காலத்தில் மாட்டிக் கொள்வேன் என்று ஒரு போதும் என் மனதில் பட்டதில்லை .   எனது நண்பர்களுடன் நிகழ்த்திய விவாதங்களின் மூலம் அவர்களில் சிலர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டு விட்டார்கள் என்றே நினைக்கிறேன் . ‘ என்னுடைய நாஸ்திகக் கொள்கை ஒரு முட்டாள் தனமானது . அது என்னுடைய பகட்டு தற்பெருமையின் மூலம் எழுந்த ஒன்றாகும் ’ என்று ஒரு வகையான அவசர முடிவிற்கு அவர்கள் வந்து விட்டனர் . இருப்பினும் , அது மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு குற்றச் சாட்டாகும் . மேற்குறிப்பிட்ட மனித குறைபாடுகளுக்கெல்லாம் அப்பாற்பட்டவன் என்று நான் ஒரு போதும் பெருமை கொள்ள மாட்டேன் . நானு...