நிஜம் தானா ?
நிஜம் தானா ?
ஆக்கம் - ஜயந்திநாதன்
1.
சிட்டுக் குருவி
பச்சைக் கிளி
நீலவானப் பருந்து -
புத்தகத்தில்
மட்டும் தானா
அப்பா ?
2.
கேட்ட மகனை
கணினியின் கூகுல்
மஹா குருவின்
ஆசிரமத்தில்
சிஷ்யனாக
நுழைய விட்டேன்.
3.
அகமகிழ்வான்
என மகிழ்ந்தேன்.
ஆனால்.....
என் மகனே
மீண்டும் கேட்டான்
ஒரு கேள்வி -
மீண்டும் நிழல் தானா ?
நிஜம் இல்லையா ?
4.
பூமியின் வெப்பம்
மனிதனையும்
நிழலாக்கும்
என்பதும்
நிஜம் தானா ?
Comments