பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல்


பூமித்தாயின் பசுமைப் புரட்சிக் குரல்

ஆக்கம் - எஸ். சங்கரன்.

பூமியின் பசுமை
மரங்கள் காடுகள் மலைகள் !
கோடரி - கொலைவெறி வெடிகள்
பூமிப் பாஞ்சாலையின்
துகிலுரியும் துச்சானக் கூட்டங்கள் !
கைகளை உயர்த்தி
பூமிப் பாஞ்சாலி
கதறுகிறாள் !

கலியுகக் கண்ணன்கள்
நாம் -
கை கொடுப்போமோ ?
காவு கொடுப்போமோ ?

காலம் காத்திருக்காது -
கடந்து விட்டால் -
பூமி பொங்கி எழும் -
பொசிங்கிப்போவோம்!

கலியுகக் கண்ணன்கள்
கை கொடுப்பார்கள் -
பசுமைப் புடவையில்
பூமித்தாய் பூரிப்பாள். 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017