17-வது பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மா நாடு
மோடி பங்கேற்ற 6 -7 ஜூலை மாதம் 2025 நடந்த 17-வது பிரேசிலில் நடந்த பிரிக்ஸ் உச்சி மா நாடு & ஐந்து நாடுகளுக்கு 8 நாட்கள் அரசுப் பயணம்
மோடி பிரிக்ஸ் உச்சி மாநாடு பிரேசிலில் பங்கேற்பதற்காக அவர் பிரேசில் செல்லும் போது, அந்த பிரேசிலில் அரசுப் பயணம் மேற்கொண்டதுடன் இன்னும் 4 தேசங்களில் அரசுப் பயணம், 7 நாட்கள் ஆகாய விமானப் பயணம், 6 அயல் தேச நகரங்கள், 4 அந்தந்த நாட்டுகளின் உயர் விருதுகள், 3 பொது மேடைகளில் பேச்சுக்கள், 2 இராத்தூக்கமில்லாத விமானப் பயணம் - ஆமாம் இது தான் பாரதப் பிரதமர் மோடியாகும்.
1. கானா
ஆப்பிரிக்கா கண்டத்தில் 54 நாடுகள் உள்ளன. இந்தியா அதில் 46 ஆப்பிரிக்க தேசங்களில் தனது வெளியுறவு அலுவலகங்களை நிறுவி உள்ளது. இது ஆப்பிரிக்காவுடனான இந்தியாவின் அதிகரித்து வரும் உறவுகளுக்கு ஒரு சான்றாகும்.
மோடியை கானா நாட்டின் ஜனாதிபதி ஜான் டிரமானி மஹமா ஆக்ரா விமான நிலையத்திற்கு நேரில் சென்று வரவேற்றார். இது ஒரு இந்தியப் பிரதமரின் 30 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் ஒரு நிகழ்வாகும்.
அது மட்டுமல்ல. கானா நாட்டின் ஆக்ராவில் குடியிருக்கும் பல இந்திய மக்கள் ஆர்வமாக மோடியை வரவேற்றார்கள்.
மோடிக்கு அந்த நாட்டின் ஜனாதிபதி
‘Officer of the Order of the Star of Ghana’.
அந்த நாட்டின் மிக உயர்ந்த விருதை அளித்து கெளரவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களும் இரு நாடுகளின் வர்த்தகம்,
வங்கி வர்த்தகத்தில் தொழில் நுட்பம், ஆரோக்கிய வாழ்விற்கு அவசியமானவைகள், தொழில் திறன் மேம்பாடு,
கனிவளம் பெருக்குதல், பாதுகாப்பு, மக்கள் தொடர்பை அதிகரித்தல் ஆகியவைகளைப் பற்றி
விவாதித்துள்ளனர்.
கானாவின் அரசுப் பயணத்தில் மோடி அவர்கள் கானா நாட்டு பார்லிமெண்டில் உரை ஆற்றினார். அப்போது சம்கிரதத்திலிருந்து பல ஸ்லோகங்களை மேற்கோள் காட்டிப் பேசி உள்ளார். அவர் தம் உரையில் குறிப்பிட்ட சம்கிரத ஸ்லோகங்களில் சில உங்கள் பார்வைக்கு:
1.
எங்களுக்கு ஜனநாயகம் என்றால் அது வெறும் ஒர் கட்டமைப்பு இல்லை. அது எங்களது அடிப்படை கொள்கைகளின் அங்கமாகும். வைசாலி போன்ற சபைகள் இதற்கு உதாரணங்களாக இருக்கின்றன.
ரிக் வேதம் மிகவும் பழைமையானது. அதில் வரும் ஸ்லோகம் இது தான்:
आनो भद्राः क्रतवो यन्तु विश्वतः
இதன் பொருள்: நல்ல கருத்துக்கள் எங்கிருந்தாலும் எங்களை வந்து சேரட்டும்.
இந்த அற்புதமான கருத்துத் தான் ஜனநாயகத்தின் முக்கிய அம்சமாகும். இந்தியாவில் இப்போது 2500 அரசியல் கட்சிகள் இருக்கின்றன - நான் திரும்பவும் சொல்கிறேன் - 2500 அரசியல் கட்சிகள்! அது மட்டுமல்ல. 20 வேறு பட்ட அரசியல் கட்சிகள் பல மா நிலங்களை அரசாளுகின்றன. 22 அங்கீகரிக்கப்பட்ட மொழிகள் இந்தியாவில் இருக்கின்றன. 1000 கணக்கான பேச்சு மொழிகள் உள்ளன.
இருப்பினும் இந்திய ஜனநாயகம் வலிவோடு தான் இருக்கிறது.
2.
நாங்கள் நம்புவது இதைத் தான்:
सर्वे भवन्तु सुखिनः ,
सर्वे सन्तु निरामयाः।
सर्वे भद्राणि पश्यन्तु ,
मा किश्चत दुःखभाग्भवेत्॥
இதன் பொருள்:
"நாம் அனைவரும் சந்தோஷமாக இருப்போமாக.
நாம் அனைவரும் நோய் இல்லாமல் இருப்போபாக.
நாம் அனைவரும் அனைத்திலும் மங்களகரமானதை நோக்குவோமாக.
எந்தவிதத்திலும் நம்மில் ஒருவரும் துன்பப்படாமல் இருப்போமாக.
இந்த பரந்த தத்துவத்தைத்தான் தான் இந்தியா கடைப்பிடிக்கிறது. அதனால் தான் கோவிட் கொடூரத்தின் போது இந்தியா 150 தேசங்களுக்கும் மேல் தடுப்பூசிகள், மருத்துகள் - அதில் கானாவும் அடங்கும் - அளித்து உதவி உள்ளோம்.
மோடி மேலும் தமது உரையில் குறிப்பிட்ட சில:
v கானாவைப் போல் இந்தியாவும் காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற நாடு தான். ஆனால் நம் இரு நாட்டு மக்களிடமும் சுதந்திர தாகம் என்று அணையாமல் எரிந்து கொண்டு நம்மை வழி நடத்தி வருகிறது.
v உங்கள் பார்லிமெண்டில் உரையாற்றும் முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை நான் பெறச் செய்த உங்களுக்கு நன்றி.
v
மோடி தனது உரையை டாக்டர் டாக்டர் என்.குரூமா கூறிய மேற்கோளுடன் முடித்தார்:
"நான் ஆப்பிரிக்காவில் பிறந்ததால் ஆப்பிரிக்கன் அல்ல. மாறாக ஆப்பிரிக்கா
என்னுள் பிறந்ததால் நான் ஆப்பிரிக்கன்."
தனது பயணத்தில் மறக்காமல் கானாவின் முதல் பிரதம மந்திரியாகவும், மிகவும் கானா மக்களால் மதிக்கப்படுபவரான டாக்டர் என். குரூமா அவர்களின் நினைவு இட த்தில் மோடி அஞ்சலி செலுத்தி நிறைவு செய்தார்.
அதன் போட்டோக்கள் கீழே பிரசுரமாகி உள்ளன.
2.டிரினிடாட்
மற்றும் டொபாகோ குடியரசு
திரினிடாட் - டொபாகோ நாட்டின் முதல் பெண் பிரதமராகப் பதவி ஏற்ற ( 2010–2015).கம்லா பெர்ஸாட்-பிஸ்ஸெஸார் மோடியை போர்ட் அப் ஸ்பெயின் என்ற அதன் தலை நகரத்தில் உள்ள விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். அந்த நாட்டின் பிரதமர் மோடியுடன் கூடவே இருந்து நல்ல வரவேற்பினைக் கொடுத்ததை போட்டோக்கள் உறுதி செய்கிறது.

போர்ட் அப் ஸ்பெயினின் நடந்த கலாச்சார நிகழ்ச்சி
மோடி டி - டி தேசத்தின் தலைநகர் போர்ட் ஆப் ஸ்பெயினில் அயல் நாட்டில் தங்கியுள்ள இந்திய வம்சாவளியரிடம் உரையாற்றினார். அவரது உரைக்கு அங்கு திரளாக வந்திருந்த இந்திய வம்சாவளியினர் பெருத்த கரகோஷத்துடன் கைகளைத் தட்டி உற்சாகமாக கேட்டனர்.
v டிரிடிடாட் - டோபாகோ தீவுகளில் குடியேறிய
இந்தியாவின் வம்சாவளியினர் வீரம் நிறைந்தவர்கள். உங்களது மூதாதையர்கள்
கஷ்டங்களையும், தடைகளையும் நம்பிக்கையுடன் எதிர்கொண்டு வெற்றி கொண்டுள்ளனர்.
v உங்கள் மூதாதையர்கள் புன்னிய கங்கை - யமுனா
நதிகளை விட்டுச் சென்றனர். ஆனால் அதற்குப் பதிலாக ராமாயணத்தை தங்கள் இருதய
கமலத்தில் சுமந்து கொண்டு விட்டார்கள். இந்திய மண்ணை விட்டுச் சென்றாலும்,
இந்தியாவின் ஆத்மாவை அவர்கள் விட்டுச் செல்ல வில்லை. ஆகையால் அவர்கள் குடிபுக வந்த
இந்த தீவுகளை தங்கள் காலத்தால் வென்ற கலாச்சாரத்தால் இந்தியாவின் கலாச்சார
தூதுவர்களாக மாறி இந்த தீவை ஒரு உன்னதமானதாகச் செய்து விட்டார்கள்.
v இந்திய வம்சாவளியினர் வெளிநாடுகளில் உலகமெங்கும் 35 மில்லியன் மக்களுக்கும் மேலாக இந்தியாவிலிருந்து குடிபெயர்ந்து வசித்து வருகிறார்கள். அந்த ஒவ்வொரு அயல் நாட்டில் குடி பெயர்ந்த ஒவ்வொரு இந்தியனும் ராஷ்ரா தூதுவன் - அதாவது அவர்கள் இந்தியாவின் உயர்ந்த கொள்கைகள், கலாச்சாரம் & பாராம்பரியம் ஆகியவைகளின் தூதுவர்கள்.
v இந்த நாட்டின் பிரதம மந்திரியின்
மூதாதையர்கள் இந்தியாவின் பீஹார் மாநிலத்தின் பூர்விகவாசிகள். இப்போதைய பிரதம மந்திரி இந்தியாவிற்கு விஜயம்
செய்த போது அவருக்கு உரிய மரியாதை அளித்தோம். அதே போல் உங்கள் மதிப்பிற்குரிய
ஜனாதிபதி கிருஷ்டின் கார்லா காங்கலூ ஓடிசா புவனேஸ்வரில் நடந்த ப்ரவாசி பாரதிய
திவாஸில் முதன்மை விருந்தினராக வரவேற்கப்பட்டார்.
v இந்தியாவில் வெற்றிகரமாக நடக்கும் UPI
டிஜிடல் பண பரிவர்த்தனம் உங்கள் நாட்டிலும்
இந்தியாவால் மேற்கொள்ளப்பட இருக்கிறது. மேற்கு இந்திய தீவின் கிரிக்கெட் பந்தின்
வீச்சை விட உங்கள் பணப் பட்டுவாட டிஜிடல் முறையில் மிக வேகமாக இருக்கும் என்று
நான் நம்புகிறேன்.
'இந்தியாவை அறிவோம்' என்ற கிவிஸ் போட்டி டிரினிடாட்
- டோபோகோவின் நடந்துள்ளது. அதில் வெற்றி பெற்ற ஷங்கர் ராம்ஜடன்,
நிகோலோஸ் மராஜ், வின்ஸ் மஹடோ
ஆகியவர்களுடன் மோடி.
மோடி டி - டி தலைவர்களுடன் பல வர்த்த உடன்படிக்கைகள், சுற்றுலா துறை, பாதுகாப்பு துறை ஆகியவைகளின் மேம்பாடு என்ற பலவகையானவற்றில் பேச்சுவார்த்தை நடந்தது.
ஜனநாயக நாடான டி & டி -யின் ஜனாதிபதி மதிபிக்குறிய கிரிஷ்டின் கார்லா கங்காலூ அவர்கள் மோடிக்கு அந்த நாட்டின் மிக உயர விருதான ‘The Order of the Republic of Trinidad and Tobago’ அளித்துக் கெளரவித்தார்.
அந்த நாட்டின் கூட்டுச் சபையில் மோடி உரை ஆற்றினார். அந்த உரையினை அந்த நாட்டுப் பிரதிநிதிகள் மிகவும் ஆர்வமாகக் கேட்டு கரகோஷங்கள் செய்தது அவரது உரையை ஆமோதிக்கும் விதமாக அமைந்தது.
மோடி நிகழ்த்திய உரையின் மிக முக்கிய அம்சங்கள்:
v சபாநாயகர் இருக்கையில் "FROM THE PEOPLE OF INDIA TO THE PEOPLE OF TRINIDAD AND TOBAGO" என்ற வாசகம் என்னை மிகவும் உணர்ச்சி வசப்பட வைத்தது. இரு நாட்டின் நல் இணக்கத்தை இதை விட சிறப்பாக உணர்த்த முடியாது.
v இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்திய பாராளுமன்றத்தில் ஒரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவை எடுத்தோம். அதாவது பாராளுமன்றத்தில் 33 விழுக்காடு மெம்பர்கள் பெண்களுக்கு ஒதிக்கிடூ செய்துவிட்டோம். இனி நாட்டின் தலைவிதியை நிர்ணயிப்பதில் பெண்கள் பெரும் பங்கு வகிப்பார்கள்.
பிரதம மந்திரி காம்லா பெர்சாத்-பிசெசார் அவரகளுக்கு அயோத்தியா ராம மந்திரின் மாதிரி, புனித சரயு நதி தீர்த்தம், மஹா கும்ப மேளா புனித நீர் அன்பளிப்பாக மோடி அளித்தார்.
போர்ட் ஆப் ஸ்பெயினில் போஜ்பூரி செளடாலா என்ற இசை மோடிக்காக இசைக்கப்பட்டது. அந்த இசையைக் கேட்ட மோடி 'இவை போன்ற கலாச்சாரங்கள் தான் இரண்டு நாட்டினையும் நீண்ட நெடுங்காலம் இணைக்கும் பாலங்களாக இருக்கின்றன'
என்று நினைவு கூர்ந்தார்.
அர்ஜெண்டைனாவின் தலைநகர விமான நிலையம் பியூனஸ் ஐரஸில் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மோடி பிரதமரின் அஞ்சலி:
பிரதமர் பிளாசா சான்
மார்ட்டினுக்குச் சென்று, அங்குள்ள அர்ஜென்டினாவின் மாவீரன் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை
செலுத்தினார். அர்ஜென்டினா மற்றும் தென் அமெரிக்க நாடுகளின் விடுதலைக்காகப்
போராடிய மாவீரர் ஜெனரல் ஜோஸ் டி சான் மார்ட்டினாவார்.
புது டெல்லியில் உள்ள ஒரு
சாலைக்கு இந்த அர்ஜென்டினாவின் மாவீரரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இது இரு
நாடுகளுக்கும் இடையிலான அன்பான மற்றும் நட்புறவுக்கு ஒரு பிரகாசமான அடையாளமாகத்
திகழ்கிறது.
பிரதமர் திரு. நரேந்திர மோடிக்கு, பியூனஸ் ஐரஸ்
நகர அரசின் தலைவர் திரு. ஜோர்ஜ் மாக்ரி, அந்நகரின் "நகர சாவியை" (Key to the
City of Buenos Aires) இன்று வழங்கினார்.
மோடி பியூனஸ் ஐரஸில் நிறுவப்பட்ட காந்தி மஹாத்மா, குருதேவ் ரவீந்தரநாத் டாகூர் ஆகியவர்களுக்கு மோடி அஞ்சலி செலுத்துதல்.
"Global South" - "உலகளாவிய தெற்கு" நாடுகள் பல இன்னும் உலக கொள்கைகள் உருவாக்கும் உலக நிருவனங்களான ஐ.நா. பாதுகாப்புக் கவுன்சில் (UN Security Council), உலக வர்த்தக அமைப்பு (WTO), பலதரப்பு மேம்பாட்டு வங்கிகள் (Multilateral Development Banks - MDBs), இன்னும் அங்கம் வகிக்க வில்லை. இதை கூடிய சீக்கிரத்தில் நேர் செய்ய வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
(குறிப்பு: குளோபல் சவுத் என்றால் இது புவியியல் ரீதியாக தெற்கில் அமைந்துள்ள
நாடுகளை மட்டும் குறிக்காமல், பெரும்பாலும் வளரும் நாடுகளையும், வரலாற்று
ரீதியாக காலனித்துவ சுரண்டலுக்கு ஆளான நாடுகளையும் குறிக்கிறது. ஆசியா, ஆப்பிரிக்கா,
லத்தீன்
அமெரிக்கா மற்றும் ஓசியானியா போன்ற கண்டங்களில் உள்ள பொருளாதார ரீதியாக வளர்ந்து
வரும் நாடுகள் இந்த"' உலகளாவிய தெற்கு" என்ற சொல்லின்
கீழ் வருகின்றன. இந்த நாடுகள் பொதுவாக காலநிலை மாற்றம்,
கடன் சுமை,
டிஜிட்டல்
பிளவு, சுகாதார அணுகல் போன்ற பல பொதுவான சவால்களை எதிர்கொள்கின்றன.)
தீவிர வாதம் கொள்கை ரீதியாக அனைவரும் எதிர்த்துப் போராட வேண்டும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடம் இல்லை.
தீவிரவாதிகளைத் தடை செய்வதில் எந்த தயக்கமும் காட்டக் கூடாது. மேலும் தீவிர வாதத்தால் பாதிக்கப்பட்டவர்களையும், தீவிர வாதத்தை ஆதரிப்பவர்களையும் சரி சமமாக நடத்தக் கூடாது. அப்பொழுது தான் தீவிர வாதங்களை எதிர்த்துப் போராடுவது உண்மையிலே அர்த்தமுள்ளதாக ஆகும்.
முடிவாக, அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மா நாடு இந்தியாவின் தலைமையில் நடக்க உள்ளது. அதில் கலந்து கொள்ள அனைவரையும் அன்போடு அழைக்கிறேன்." என்று மோடி உரையாற்றினார்.
மோடியின் தலையீட்டால் இந்த பிரிக்ஸ் மா நாட்டில் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் எடுக்க வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் இந்தியாவில் ஜம்மு காஷ்மீரில் 22-ம் தேதி நடந்த தீவிர வாததாக்குதலையும் குறிப்பிடப்பட்டுள்ளதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
அந்த தீர்மானத்தின் முக்கிய பகுதி:
"ஜம்மு காஷ்மீரில் 22-ம் ஏப்ரல் 2025 அன்று நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இதை இந்த மா நாடு வன்மையாகக் கண்டிக்கிறது இது மாதிரியான தீவிர வாதங்களை எதிர்த்து எதிர் நடவடிக்கைகள் எடுப்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தீவிரவாதம் எந்த ஒரு மதத்துடனும் தொடர்பு கொள்ளக் கூடாது. அவர்கள் அனைவரும் உலக சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை அளிக்க வேண்டும். தீவிரவாதத்தை முற்றிலும் அழிக்க அனைத்து நடவடிக்கைகளையும் பிரிக்ஸ் எடுக்கும். "
இந்த பிரிக்ஸின் உருப்பு நாடுகள் 11 - பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா என்ற ஐந்து மூல நாடுகளுடன் புதிதாக 2024 - 2025-ல் இணைந்த நாடுகள் ஆறாகும் - அவைகள்: எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம்.
2024 ஆம் ஆண்டில் கசான் உச்சி மாநாட்டில் "BRICS கூட்டாளர் நாடு" (BRICS Partner Country) என்ற புதிய வகை உருவாக்கப்பட்டது. இந்த வகையின் கீழ் பின்வரும் நாடுகள் சேர்க்கப்பட்டுள்ளன: பெலாரஸ், பொலிவியா, கியூபா, கஜகஸ்தான், மலேசியா, நைஜீரியா, தாய்லாந்து, உகாண்டா, உஸ்பெகிஸ்தான், வியட்நாம் - என்ற 10 நாடுகள். ஆகையால் இந்த பிரிக்ஸ் மாநாட்டில் கலந்து கொண்ட மொத்த நாடுகள்: 21.
இந்த மாநாட்டின் கருப்பொருள் "அதிக உள்ளடக்கிய மற்றும் நிலையான ஆளுகைக்கான உலகளாவிய தெற்கு ஒத்துழைப்பை வலுப்படுத்துதல்" (Strengthening Global South Cooperation for a More Inclusive and Sustainable Governance) என்பதாகும்.
உலகளாவிய நிர்வாக சீர்திருத்தம், உலகளாவிய தெற்கின் குரலை மேம்படுத்துதல், அமைதி மற்றும் பாதுகாப்பு, பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல், வளர்ச்சிப் பிரச்சினைகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் ஆக்கபூர்வமான விவாதங்களை நடத்தினர்.
இதில் முக்கிய அம்சம் என்ன வென்றால் மோடி அங்கு பங்கு பெற்ற அனேகமாக அனைத்து நாட்டின் தலைவர்களையும் மா நாட்டிற்குப் பிறகு தனித்தனியாக சந்தித்து இந்தியாவின் முன்னேற்றம்,
வர்த்தகம்,
பாதுகாப்புத் திறன் ஆகியவைகளை எடுத்துரைத்து நல்லுறைவை ஏற்படுத்தி உள்ளார்.
மோடி பிரேசில் தலைநகரமான பிரேசிலியாவிற்கு அரசுப் பயணம்:
வாத்தியங்களை, குறிப்பாக சால்வடார் டா
பாஹியாவின் சாம்பா-ரெங்கேவை மேம்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியில் அவர்கள்
ஈடுபட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து பிரேசிலியா வாழ் இந்திய வம்சாவளியினர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
5. மோடியின் ஆப்பிரிக்காவில் உள்ள நமீபியா நாட்டு அரசுப் பயணம்
நமீபியா இந்திய வம்சாவளியினர் மோடிக்கு அளித்த உற்சாக வரவேற்பு.
(குறிப்பு: நெடும்போ நாண்டி-என்டைட்வா (Netumbo
Nandi-Ndaitwah) என்பவர் நமீபியா நாட்டின் ஐந்தாவது மற்றும் தற்போதைய அதிபர் ஆவார். இவர் 2025 ஆம் ஆண்டு
மார்ச் 21 அன்று இந்தப் பதவியை ஏற்றார். இவர் நமீபியாவின் முதல்
பெண் அதிபர் என்ற பெருமையைப் பெற்றவர்.)
நமீபியா - இந்திய அரசுகள் மேலே குறிப்பிட்ட ஒப்பந்தங்களில் கை
எழுத்திட்டுள்ளன. இதில் குறிப்பாக இந்தியா உருவாக்கிய யு.பி.ஐ. என்ற டிஜிடல் பண பட்டுவாடுகள் முதன் முறையாக நமீபியா நாடு அதை நடைமுறைப்படுத்த இருப்பது இந்தியாவிற்குக் கிடைத்த ஒரு பெருமையாகும்.
நமீபியாவின் தேசத் தந்தை மற்றும் முதல் அதிபர்
டாக்டர். சாம் நுஜோமாவின் ஹீரோஸ் அக்ரே நினைவுச் சின்னம் (Heroes’ Acre memorial). அங்கு மோடி அஞ்சலி செலுத்துதல்.
நமீபியா இரு அவைகளின் கூட்டு அமர்வில் மோடி உரை ஆற்றினார். அவரது உரையை பல இடங்களில் கைகளைத்தட்டி உற்சாகமாக கேட்டு மகிழ்ந்ததைக் காண முடிந்தது.
மோடி உரையின் சுருக்கம்:
இந்த மதிப்பிற்குரிய இந்த கூட்டுச் சபையில் நிற்கும்போது, இந்த ஆண்டு தொடக்கத்தில் காலமான நமீபியாவின் முதல் அதிபரும் தேசத்தின் தந்தையுமான அதிபர் சாம் நுஜோமாவுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
அவர் ஒருமுறை கூறியது: "நாம் சுதந்திரம் அடைந்தது நமக்கு ஒரு பெரிய பொறுப்பை சுமத்துகிறது. நாம் கடுமையாகப் போராடிப் பெற்ற சுதந்திரத்தைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், இனம், மதம் அல்லது நிறம் ஆகியவற்றைப் பொருட்படுத்தாமல் அனைவருக்கும் சமத்துவம், நீதி மற்றும் வாய்ப்புக்கான உயர் தரங்களை அமைத்துக்கொள்ள வேண்டும்."
ஒரு நியாயமான மற்றும் சுதந்திரமான தேசம் பற்றிய அவரது தொலைநோக்கு பார்வை நம் அனைவரையும் தொடர்ந்து ஊக்குவிக்கிறது. உங்கள் சுதந்திரப் போராட்டத்தின் கதாநாயகர்களான ஹோசியா குடக்கோ, ஹென்ட்ரிக் விட்பூய், மண்டுமே யா ண்டெமுபாயோ மற்றும் பலரின் நினைவுகளையும் நாம் போற்றுகிறோம்.
முடிவுரை:
இது மோடியின் அசாதாரண சாதனை என்றால் மிகையாகாது. உலகத்தின் எந்த ஒரு பிரதம மந்திரியும் இப்படி 24 மணி நேரமும் உழைத்து இந்தியாவின் குரலை உலக அரங்கில் கேட்கச் செய்த பெருமை மோடி ஜிக்கே சாரும்.
இது வெறும் புகழ்ச்சி இல்லை. சத்தியமான வாக்கு. அவருக்கு தெய்வ அருள்
பரிபூரணமாக இருக்கிறது. அப்படி இல்லாவிடில், நடக்க முடியாது என்று சோர்ந்து போன
பிஜேபி தலைவர்கள், தொண்டர்கள், மற்றும் பல இந்துக்கள் நினைத்த அயோத்திய ராமர்
கோயில் நிறுவியது, காஷ்மீரில் கலவரம் நின்று அமைதி நிலவியது, ஆர்டிக்கிள் 370
ரத்தாகி காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்த அரசியல் ஆச்சரியம், முத்தலாக் நீக்கம்,
தீவிரவாதத்தை தன் மண்ணில் ஆதரிக்கும் பாகிஸ்தானை போரில் வென்ற தீரம், உள்ளாட்டு நக்ஸலைட்டுகள் - மாவோயிஸ்டிகள், உள்ளாட்டில் உலாவரும் முஸ்லீம் தீவிரவாதிகள் என்ற பல நடவடிக்கைகள் மோடியால் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டதை நினைத்து நினைத்து பெருமையும், ஆனந்தமும், மன அமைதியும், நிம்மதியும் பெறுகின்றோம்.
வாய்மை இதற்கு 'ஜெய் ஹோ மோடிஜி' என்று மனம் திறந்து பாராட்டுகிறது.
அதன் வெளிப்பாடாக அவருக்கு ஒரு பூச்செண்டு கொடுத்து இந்திய மக்களின் சார்பாக வாழ்த்தி போற்றுகிறது.
Comments