ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூர் வெற்றி விழா சோக விழாவானது

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு (( RCB) ஜூன் 3- ல் அமாதாமாத் ஸ்டேடியத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டில் பஞ்சாப் கிங்க்ஸ் அணியை வென்றது. இது பெங்களூர் அணிக்கு பல வருடங்களாக கிடைக்காத வெற்றிக் கோப்பை என்பதால் ஜூன் 3- ல் இருந்தே பெங்களூர் கிரிக்கெட் ரசிகர்கள் பங்களூர் தெருக்களில் வெடி வெடித்தும் , இரு சக்கர வாகனங்களில் பலர் வேகமாக வலம் வந்தும் , ஆர்சிபியின் கொடிகளை எந்தியும் அந்த வெற்றியை வெறித்தனமாகக் கொண்டாடினார்கள். ஆர்சிபியும் அந்த வெற்றிக் களிப்பில் அமாதாபாத்திலேயே ஜூன் 3- ல் ' ஜூன் 4- ல் பங்களூரில் வெற்றி விழா நடக்கும் ' என்று ட்வீட் செய்துள்ளது. இந்தச் செய்தியும் பங்களூரில் தொடர்ந்து இடைவிடாமல் தெருக்களில் கொண்டாட்டமாடி குதூகலிக்கச் செய்துள்ளது கிரிக்கெட் ரசிகர்களை. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் , அவரது துணை முதல்வர் டி.கே. சிவகுமார் ஆகிய இருவர்களும் அந்த வெற்றி பெற்ற கிரிகெட் வீரர்களுக்கு சிறப்பான முறையில் வெற்றி பெற்றதற்கு பாராட்டு விழா விதன் செளதா வளாகத்தில் ஜூன் 3- ல் நடக்கும் என்று அறிவித்து , கிரிக்கட் விளையாட்டு ரசிகர்களுக்கு ட்வீட் மூலம் க...