ஆபரேஷன் சிந்தூரம்



ஆபரேஷன் சிந்தூரம் என்றால் இந்துப் பெண்கள் தங்கள் நெற்றியில் இடும் குங்குமத்தைக் காக்க எடுக்கப்பட்ட எதிர்தாக்குதலாகும். 

பஹல்காமில் முஸ்லீம் மத தீவிரவாதிகள் ஐவரால் 26 அப்பாவி சுற்றுலாப்பயணிகள் அவர்களின் மதம் ஹிந்து மதம் என்பதை உறுதி செய்ய குரானின் கலிமாவை ஓதச் சொல்லியும், அவர்களின் ஆடைகளை அவிழ்த்து 'அவர்கள் சுன்னத் செய்யாதவர்கள்' என்பதை அறிந்து - அவர்கள் ஹிந்துக்கள் என்பதை இந்த தீவிரவாதிகள் ஊர்ஜிதம் செய்த பிறகே துப்பாக்கியால்  சுடப்பட்டு  உயிரிழந்தார்கள். 

'எங்களையும் சுடுங்கள்' என்று சொன்ன அவர்களின் மனைவிகளிடம் 'உங்களை உயிரோடு விடுகிறோம். போய் உங்கள் மோடியிடம் சொல்லுங்கள்' என்று அந்த முஸ்லீம் மத தீவிரவாதிகள் மிகவும் கீழ்த்தரமாகச் சொல்லியிருக்கிறார்கள்

இந்த தீவிரவாதிகள் The Resistance Front (TRF) என்ற பாகிஸ்தான் பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள். இந்தக் குழு பாகிஸ்தானில் செயல்படும் Lakshar-e-Taiba (LET) என்ற மிகவும் பகங்கரமான தீவிரவாத அமைப்பாகும். 

இந்தக் கொடூரச் சம்பவம் 22-ம் தேதி ஏப்ரல் பிற்பகல் சுமார் 2:15 மணிக்கு நடந்துள்ளது. அப்போது பாரதப் பிரதமர் சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் அரசுப் பயணத்தில் இருந்தார். இந்தக் கொடூரச் சம்பவத்தை அறிந்ததும் தமது பயணத்தை பாதியிலேயே ரத்து செய்து பாரதம் விரைந்து உடனேயே பல எதிர் நடவடிக்கைகளை எடுத்தார்

இந்த முஸ்லீம் மத தீவிரவாத தாக்குதலுக்கு பாரதம் தகுந்த பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்களுக்கும், உலக மக்களுக்கும் தமது உரையில் மிகவும் ஆணித்தரமாக உறுதி பூண்டதைத் தெரிவித்தார்

தீவிரவாதத்தை அடியோடு ஒழிக்க முழங்கிய மோடியின் உரை

'பஹல்காம் தீவிரவாதிகள் அனைவரும் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் தண்டனை பெறுவார்கள். அது மட்டுமல்ல; அவர்களை வளர்த்தவர்கள், அவர்களுக்கு பணம் - துப்பாக்கிகள் - பயிற்சிகள் அளித்தவர்கள் யாராக இருப்பினும், எங்கு பதுங்கி இருப்பினும், அவர்களை வேட்டையாடி தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் பூமியில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் தப்பிக்க முடியாது. தீவிரவாதத்தால் இந்தியாவின் உறுதியான சிந்தனையை ஒரு போதும் உடைக்க முடியாது

இந்தியா தற்போது கொடுக்கும் பதிலடி ஒருவரும் எதிர்பார்க்காத அளவில் அவர்களின் கற்பனைக்கும் எட்டாத அளவில் அதி பயங்கரமானதாக இருக்கும். 

தீவிரவாதிகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிப்பவர்களும்  தீவிரவாதிகளே. தீவிரவாதிகளுக்கு பயிற்சி முகாம் நிறுவ அனுமதிக்கும் நாடும் தீவிரவாதிகளாகவே கருத வேண்டும். அந்த நாட்டைத் தனிமைப் படுத்தி தீவிரவாதத்தை  அழிக்க போரும் அந்த நாட்டுடன் செய்ய வேண்டும்

தீவிரவாதமும் பேச்சு வார்த்தையும் ஒன்றாகச் செயல்பட முடியாது.

தீவிரவாதமும் வர்த்தகமும் ஒன்றாகச் செயல்பட முடியாது.

நீரும் ரத்தமும் ஒன்றாக ஒரு போதும் பாய முடியாது.

பாகிஸ்தானின் அணு ஆயிதம் என்ற மிரட்டல் இனி இந்தியாவிடம் எடுபடாது

பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை இரு நாடுகளுக்குமிடையே தான் - வேறு எந்த நாடும் இதில் தலையிட அனுமதியோம்

இனி பேச்சு வார்த்தை பாகிஸ்தானுடன் நடந்தால், அது தீவிரவாதம் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் - என்ற இரண்டைப் பற்றி மட்டும் தான் நிகழும்.' 

இந்த யுத்த முழக்கத்திற்கு நிகரான பல நடவடிக்கைகளை மோடி உடனேயே எடுத்துள்ளார்

மோடி அரசு எடுத்த முக்கிய நடவடிக்கைகள்: 

  1. 1960 ஆம் ஆண்டு இந்து நதி நீர்ப் பங்கீடு ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு. 
  1. பாகிஸ்தான் குடிமக்களுக்கு விசா சேவைகள் நிறுத்தம். இதில் மருத்துவ விசாக்களும் அடங்கும். 
  1. அட்டாரி-வாகா எல்லை மூடல்: 
  1. இரு நாடுகளின் இராணுவ ஆலோசகர்கள் வெளியேற்றம்: 
  1. பாகிஸ்தான் கலாச்சாரத் தொடர்புகளின் முடக்கம்: 

இந்த ஐந்து நடவடிக்கைகளுக்குப் பிறகு இந்திய ராணுவம் மூன்றும் ஒன்றாக பாகிஸ்தான் - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஆகியவைகளில் செயல்படும் ஒன்பது தீவிரவாத முகாம்களை வான் வெளி ஆயுதங்களால் அழித்துள்ளது. (பாகிஸ்தானில் 4 தீவிர வாத முகாம்கள்; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5 தீவிர வாத முகாம்கள்). 

இது மே மாதம் 7-8 ல் இரவு நேரத்தில் ஒரு அரை மணி நேரத்திலே வெற்றிகரமாக நிகழ்த்தி பாகிஸ்தானை நிலை குலைய வைத்துள்ளது. இதைத் தான் ஆபரேஷன் சிந்தூர் என்று நாமகரணம் சூட்டிச் செயல்பட்டுள்ளனர் நமது இந்திய ராணுவம்



இந்தத் தாக்குதலில்  ஜெய்ஷ்-இ-முகம்மது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா போன்ற அமைப்புகளின் தலைமையகங்கள் உட்பட 9 பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன .     இந்த தாக்குதலில் சுமார் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்



புகைப்பட தகவல்: இந்திய தாக்குதலில் கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின் இறுதிச் சடங்கில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பங்கேற்பு. இதன் மூலம் பாகிஸ்தான் அரசு பயங்கரவாத அரசாக உலக அரங்கில் வெளிப்படையாக தெரிவந்துள்ளது. 

பாகிஸ்தானின் லாகூரில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள முரிட்கேயில் உள்ள ஜமாத் உத்-தாவா பயங்கரவாத அமைப்பின் தலைமையகம் இந்திய ராணுவத்தால் தரைமட்டமாக்கப்பட்ட போது,  பல பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதில்,  அப்துல் மாலிக், காலித், முதாசிர் என்ற முக்கிய தீவிரவாதிகளும் அடங்கும். அவரகளின்  இறுதிச் சடங்குகள், முரிட்கேயில் நடந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் ஜெனரல் ஃபயாஸ் ஹுசைன், மேஜர் ஜெனரல் ராவ் இம்ரான், பிரிகேடியர் முகமது ஃபர்கான், பாகிஸ்தான் பஞ்சாப் எம்எல்ஏ உஸ்மான் அன்வர் ஆகியோர் பங்கேற்றதாக அந்த பயங்கரவாத அமைப்பின் அரசியல் பிரிவான பாகிஸ்தான் மார்கஜி முஸ்லிம் லீக்கின் செய்தித் தொடர்பாளர் தபிஸ் கய்யூம் தெரிவித்தார்.  இதன் மூலம் தீவிரவாதம் பாகிஸ்தான் அரசின் ஒரு அங்கம் என்பது உலகத்திற்கு தெரிவருகிறது

இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் மே 8-ம் தேதி காலை நேரத்திலேயே இந்தியாவின் ராணுவ தளங்கள் சுமார் 12 இடங்களில் ஏவு கணைகளைக் கொண்டு தாக்க முயன்ற அத்தனையையும் நமது இந்திய ராணுவம் பிரம்மோ மற்றும் மேக்-இன்-இந்தியாவின் மூலம் உருவாக்கிய தளவாடங்களைப் பயன்படுத்தி ஒன்று கூட இந்திய மண்ணைத் தொடாமல் வெற்றிகரமாக செயல்பட்டது. புனித கோயில் அமிர்தசரசையும் தாக்க பாகிஸ்தான் முயன்றதும் முறியடிக்கப்பட்டது. 

இதற்கு இந்திய ராணுவம் பயங்கரமாகப் பதிலடி கொடுத்துள்ளது. 

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களான ராணுவ தளவாடங்கள் உள்ள  லாகூர், இஸ்லாமாபாத், சியால்கோட் மற்றும் கராச்சி ஆகியவைகள் இந்திய ராணுவத்தால் தாக்கப்பட்டு பல இழப்புகள் உண்டாகி உள்ளன. இந்தியாவின் தாக்குதலால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK) முழுவதும் முழுமையான மின் தடை ஏற்படும் நிலை உருவாகி உள்ளது 

நூர் கான் விமானப்படை தளத்தின் மீதான தாக்குதல்  குறிப்பிடத் தக்கதாக உள்ளது.  இந்த தளம் பாகிஸ்தான் இராணுவத்தின் தலைமையகத்திற்கு அருகிலும், பாகிஸ்தானின் அணுசக்தி கிடங்கிற்கு  அருகிலும் அமைந்துள்ளது என்பதால் இது இந்திய ராணுவத்திற்கு ஒரு மிகப் பெரிய வெற்றியாகும்.   

இந்த துல்லியமான தாக்குதலால் தான் மோடி ஜி அவர்கள் 'பகிஸ்தானின் அணுசக்திப் பூச்சாண்டி இனி பலிக்காது' என்று உலகத்திற்கே சொல்லி விட்டார். இது பாகிஸ்தானில் அமைந்துள்ள அமெரிக்காவின் அணுக் கிடங்கு என்று சொல்லப்படுகிறது. இந்தியாவின் தாக்குதலால் அணுசக்தி கசி ஏற்பட்டு அதைத் தணிக்கும் நடவடிக்கையில் பாகிஸ்தானும், அமெரிக்காவும் ஈடுபடுவதாக இன்னும் ஊர்ஜிதம் ஆகாத செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன

அத்துடன் ரஹீம் யார் கான் மற்றும் சர்கோதா தளங்களில் உள்ள ஓடுபாதை பிரிவுகள் உட்பட பல பாகிஸ்தான் விமானநிலையங்கள் மீதும் இந்தியா தாக்குதல்களை நடத்தியது. மே 10 அன்று, ரஹீம் யார் கான் ஓடுபாதை செயல்படவில்லை என்பதை ஒப்புக்கொண்டு பாகிஸ்தான் ஒரு அறிவிப்பை வெளியிட்டது. 

இந்த தோல்வியால் துவண்ட பாகிஸ்தான், பஞ்சாபில் உள்ள ஆதம்பூர் விமானப்படை தளத்தைத் தாக்கியதாக பாகிஸ்தானும் கூறியது, ஆனால் அது முற்றிலும் பொய் என்பதை அடுத்த நாளான செவ்வாய்க்கிழமை மே 13 -ல் பிரதமர் நரேந்திர மோடி அந்த விமானப்படை தளத்திற்கு வருகை தந்து, அங்குள்ள ராணுவ வீரர்களுடன் உரையாடி, 'பாரதமாக்கு ஜே' என்ற கோஷத்தை எழுப்பி அவர்களை உற்சாக மூட்டினார். பாகிஸ்தானின் பொய்ப் பிரசாரத்தை மோடி தூள் தூளாக்கி இந்தியாவின் நேர்மையையும், வீரத்தையும், வெற்றியையும் உலகத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளார். 


இந்தியாவின் சண்டை நடந்த நான்காம் நாளே, பாகிஸ்தானில் பல இடங்களில் இந்தியாவின் தாக்குதலால் பெரும் பொருள் - ஆள் சேதங்களால் பாதிக்கப்பட்டதாலும், பாகிஸ்தானின் பதிலடித் தாக்குதல் இந்தியாவால் முழுவதும் தடுக்கப்பட்டதாலும், பாகிஸ்தான் தோல்வியால் துவண்டு சண்டை நிறுத்தம் என்று வெண் கொடியைத் தூக்கிக் காண்பிக்க, இந்தியாவும் அதற்கு ஒத்துக்கொண்டு தற்காலிக சண்டை நிறுத்தம் நிலவுகிறது

பாகிஸ்தானுக்கு உலக வங்கி இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி பண உதவி செய்துள்ளது

பாகிஸ்தானும் அந்தப் பணத்தில் தீவிர வாதக் குழுக்கள் இந்தியாவின் தாக்குதலால் பெரும் இழப்பை அடைந்துள்ளதால்  அவைகளுக்கு கோடிகளில் பணம் கொடுத்துள்ளது. இதையும் உலக வங்கியால் தடுக்க முடியாமல் இருப்பது அதன் நம்பகத் தன்மைக்கு இழுக்காகவே படுகிறது

இந்த ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தான் ஒரு ஆபத்தான தீவிரவாதக் குழுக்களின் கூடாரம் என்பதும், பாகிஸ்தான் ராணுவமும், பாகிஸ்தான் அரசும் இடம், பொருள், பணம் ஆகியவைகளை அளித்து தீவிரவதத்தை முழுமனதுடன் ஆதரிக்கிறது என்பதும் உலகத்திற்கு காட்டி விட்டோம்

இந்தச் செய்திகளை எல்லாம் சர்வதேச அளவில் சொல்ல மோடி அரசு  50 பாராளுமன்ற உறுப்பினர்களை உள்ளடக்கிய 7 குழுக்களை அமைத்து, உலக நாடுகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அனுப்பியுள்ளது. 

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இந்த நடவடிக்கையை இந்தியாவின் பாதுகாப்பு வரலாற்றில் முக்கியமானதாகக் குறிப்பிட்டுள்ளார். 

மாநில அளவில், பாஜக அரசு பாஹல்காம் தாக்குதலில் உயிரிழந்த வர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையிலும், வெற்றிகரமாக இந்திய ராணுவம் செயல்பட்டதைக் கொண்டாடும் முகத்தான் "திரங்கா யாத்திரை" 'தேசியக் கொடி வெற்றி ஊர்வலம்' போன்ற நிகழ்வுகளை இந்தியாவின் பல நகரங்களில் நிகழ்ந்துள்ளது. 

இந்திய முப்படையினருக்கும் இந்திய மக்கள் அனைவரும் எழுந்து நின்று அவர்களுக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும்

அத்துடன் மேக்-இன்- இந்தியா தளவாடங்களைச் செய்யும் அனைத்து விஞ்ஞானிகள், தொழில் வல்லுனர்கள், ISRO, HAL, BEL போன்ற என்னற்ற நிருவனங்கள் ஆகியவர்களுக்கு நாம் கடமைப் பட்டுள்ளோம். 

இந்த சண்டையில் உயிர் இழந்த போர்வீரர்களுக்கும் நாம் நமது இறங்கலைத் தெரிவிக்க கடமைப் பட்டுள்ளோம்.  

இந்தியா மோடி ஜி தலைமையில் தலைநிமிர்ந்து உயர்ந்து நிற்கிறது

வாழ்க பாரதம் - பாதமாதாகி ஜே !



ஆபரேஷன் சிந்தூர் பற்றிய சில முக்கிய புகைப்படங்கள்:



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017