துடைப்பக் கட்சியின் தற்போதைய பொம்மை முதல்வர் அதிஷி சிங் மர்லினா

 














அரவிந்த் கெஜ்ரிவால் அவரது டெல்லி அரசின் மதுபானக் கொள்கை ஊழல் தொடர்பான முறைகேடு வழக்கில் கைதாகி டெல்லி திஹார் சிறையில் 155 நாட்களாக இருந்துள்ளார். அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு கோர்ட் நிபந்தனை ஜாமீன் வழங்கி உள்ளது

அந்த ஜாமீனில் இரண்டு முக்கிய நிபந்தனைகளை கோர்ட் விதித்துள்ளது

அவைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன

  1. ஜாமீனில் இருக்கும் போது கெஜ்ரிவால் முதல்வர் அலுவலகத்திற்கோ, டெல்லி செயலகத்துக்கோ செல்ல முடியாது.
  2. அவர் அதிகாரப்பூர்வ கோப்புகளில் கையெழுத்திட முடியாது. 

இதன் காரணமாக கெஜ்ரிவால் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நெருக்கடி உண்டாகி, அவரும் ராஜினாமா செய்ய, 43 வயதே ஆன அதிஷி சிங் மர்லினா 21-ம் தேதி செப்டம்பர் 2024 அன்று பதவிப் பிரமாணம் எடுத்து எட்டாவது டெல்லி முதல் மந்திரியாகவும் - மூன்றாவது டெல்லி பெண் முதல் மந்திரியாகவும் பொறுப்பேற்றுள்ளார்



பொறுப்பேற்றவுடன் அதிஷி செய்த முதல் பணி தனது குருவாகவும், கூடப்பிறவா மூத்த சகோதரனாகவும் மதிக்கப்பட்ட துடைப்பக் கட்சியின் முன்னாள் முதல் மந்திரி பெயில் கெஜ்ரிவாலின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கியதாகும்



ஆசீர்வாதம் வாங்கிய கையோடு மீடியாவுக்கு டெல்லி முதல் மந்திரியாக சூளுரையாகச்  சொன்னார்: 'இன்னும் 4 மாதங்கள் தான் இருக்கின்றன அடுத்த டெல்லி சட்டசபைத் தேர்தலுக்கு. அது வரை கெஜ்ரிவாலை மீண்டும் டெல்லி முதல்வர் கட்டிலில் அமர்த்துவது தான் என் லட்சியம். அதற்காக நான் உழைப்பேன்.' 

அதிஷி சிங் மர்லினா மெத்தப் படித்தவர். அவர் 13 இலாக்காக்களை நிர்வகிக்கிறார்

அதிஷி குடும்பமே தீவிரவாதியும், பார்லிமெண்ட் கட்டிடம் தாக்குதலுக்கு உடந்தையாக இருந்த தூக்குத் தண்டனை பெற இருக்கும் அப்சல் குருவுக்கு ஆதரவான கருணை மனுவில் கையெழுத்திட்டுள்ளது என்பது ஒரு சாதாரண விஷயம் இல்லை. மேலும் அவரது பெயரில் உள்ள 'மர்லினா' - காரல் மார்க்ஸ் & லெனின் ஆகிய பெயர்களின் சுருக்கமாகும். மார்க்ஸ் - லெனின் என்பது மர்லினாக உருமாறியதாகும். அவரது தாய் தந்தையர்கள் - தாய் திருப்தா வாஹி & தந்தை விஜய் சிங் - இருவரும் கல்லூரி பேராசிரியர்கள். அவர்கள் இடது சாரிக் கொள்கையில் தீவிர பற்றுக் கொண்டவர்கள்

அவர்களது மகளான அதிஷ் சிங் மர்லினா பஞ்சாப் தேர்தலின் போது தமது பெயரில் உள்ள மர்லினாவை உதறித் தள்ளினார். ஆனால் தமது இடது சாரிக் கொள்கைகளை விட்டுக் கொடுத்தாரா என்பது சந்தேகம் தான்


அதிஷி துடைப்பக் கட்சியின் டம்மி, தஞ்சாவூர் தலையாட்டுப் பொம்மை, கெஜ்ரிவாலின் மன் (மவுன) மோஹன் சிங் - என்ற அடைமொழிகள் அந்தக் கட்சிக்கு எந்தவிதத்திலும் பெருமை சேர்க்கப்போவதில்லை

அதிஷி இந்த அடைமொழிகள் எல்லாம் தனது குருவான அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு மன மகிழ்வை அளிக்கு மென்றால் அது தனக்கும் ஏற்புடையதே என்ற மன நிலையில் இருக்கிறார்

அதிஷி பதவிப் பிரமாணம் அரசியல் சாதனத்தில் படி எடுத்துக் கொண்டாலும், அதைப் பற்றி எல்லாம் அவர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை

அதிஷி தனக்கு அருகில் ஒரு பெரிய காலி நாற்காலியைப் போட்டுக் கொண்டு, அதற்கு அடுத்து ஒரு சிறிய நாற்காலியில் முதன் மந்திரியாக அமர்ந்துள்ளார்

'ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள்?' என்று பத்திரிகையாளர்கள் கேட்ட பொழுது அதற்கு அவரின் பதில் இதோ

'ராமாயணத்தில் பரதன் ராமனின் பாதுகையை அரச சிம்மாசனத்தில் வைத்து அரசாண்டான். அதே போல் தான் என் குரு - என் அண்ணா அரவிந்கெஜ்ர்வால் வழிகாட்ட இந்த நான்கு மாதங்கள் ஆட்சி செய்யப்போவதின் அறிகுறிதான் இந்த என் ஏற்பாடு

இந்தச் செய்கை அப்பட்டமான அரசியல் சாதன அவமதிப்பாகும். அதிஷி எடுத்துக் கொண்ட பதவிப் பிரமாணம், ரகசியப் பிரமாணம் இரண்டையும் மீறிய குற்றத்திற்கு அவர் ஆளாகிறார். இது ஒரு சிறுபிள்ளைத்தனமான - ஏதோ டெல்லி அரசு அவர்கள் ராஜ்யமாக - தாங்களே பங்கு போட்டுக்கொள்ளக் கூடிய அரசு - அரசாங்கம் என்ற நிலையாக நினைத்துச் செயல்படுவது ஜன நாயகப் படுகொலையாகும்

இது குடும்ப அரசியலின் புதிய கோணம் என்று தான் கணிக்கத் தோன்றுகிறது

ஜன நாயகத்தின் பலஹீனம் தனிநபர் துதி பாடுவது. அதுவும் ஒரு முதல்வர் இதைச் செய்வது மிகவும் கண்டிக்கத் தக்கது

இது மட்டுமல்ல அதிஷி செய்தது. கெஜ்ரிவால் தான் டெல்லியின் முதன் மந்திரி - அதிஷி வெறும் கெஜ்ரிவாலின் நிழல் என்பதில் அவர் முழுத் திருப்தி அடைவதாகத் தான் தெரிகிறது

டெல்லி முதல் மந்திரி அதிஷி தான் நிஜம் இல்லை - நிழல் என்பதை பல முறை செயல்படுத்தி உள்ளார். அவர் முதல் அமைச்சராக இருந்தாலும் வெறும் எம் எல் ஏ ஆன கெஜ்ரீவாலுக்கு இரண்டு மூன்று அடிகள் பின்னால் தான் நடந்து வருகிறார். அவரை 'சார்' என்றோ, 'குரு' என்றோ தான் வெளிப்படையாக விளிக்கிறார்

முதன் முதல் ஐன்தர் மந்தரில் நடந்த பொதுக் கூட்டத்தில் பலர் பேச நிழல் அம்மையார் மவுனம் காக்கப் பணிக்கப்பட்டார் என்றே தோன்றுகிறது

பிறகு கூடிய டெல்லி சட்ட சபையிலும் நிஜ முதல் மந்திரி 18 நிமிடங்கள் மோடியைச் சாடிப் பேசினார். ஆனால் நிழல் முதல் மந்திரி எதுவும் பேசாமல் ஒரு தீர்மானத்திற்கு திருத்த மசோதாவை அசம்பளியில் தாக்கல் செய்ததோடு சரி. டெல்லி சட்டசபைக் கூட்டம் முடிந்த பிறகு நிழல் முதல் மந்திரி நிஜ முதல் மந்திரியை அவரது சொகுசுக் காரில் ஏற்றி அனுப்பிய பிறகு தான் தனது சாதாரண அரசு காரில் ஏறி பயணித்தார்

இதை எல்லாம் விட மிகவும் கவலை தரும் விஷயம் என்ன வென்றால் பல அரசுத் திட்டங்கள் எல்லாம் துடைப்பக் கட்சியின் அலுவலகத்திலிருந்து நிழல் முதல்வர் முன்னிலையில் நிஜ முதல்வர் தான் வெளியிடுகிறார். நிழல் முதல்வர் இதைப் பார்த்து மனம் மகிந்து 'கெஜ்ரிவால்' கோஷம் எழுப்ப கூடி இருந்த எம் எல் ஏக்கள் 'ஜிந்தாபாத்' என்று வாழ்த்தும் அவலமும் நிகழ்ந்துள்ளது. ஏதோ டெல்லி அசம்பளியே துடைப்பக் கட்சியின் அலுவலகத்திற்கு மாறியது போல் காரியங்கள் நடக்கின்றன

அரசியல் சாதனம், ஆட்சியில் அமர எடுத்துக்கொண்ட சத்தியப்பிரமாணம் ஆகிய எல்லாம் துடைப்பத்தால் தூசிபோல் துடைத்து எறியப்பட்ட நிலையை டெல்லி ஓட்டர்கள் சகித்துக் கொண்டிருப்பது தான் ஆச்சரியம்

டெல்லிக்கு தேர்தல் 5-ம் நடந்து அதன் முடிவுகள் 8-ம் தேதி வர இருக்கிறது

இதில் மீண்டும் துடைப்பக் கட்சி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தால், அது டெல்லிக்கு ஒரு சாபக் கேடு என்று தான் சொல்ல வேண்டும்

டெல்லியின் மாசு - யமுனா நதி சுத்திகரிப்பு செயல்படுத்தாத நிலை  - சாலைகள் பராமரிப்பில் ஈடுபடாமை - கல்விச் சாலைகளின் மோசமான நிலை - மழை காலத்தில் மக்கள் பட்ட அவதிகள் ஆகியவைகள் டெல்லி மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும்

காங்கிரஸ் - பிஜேபி ஆகிய இரண்டு கட்சிகளும் துடைப்பக் கட்சியை எதிர்கொண்டு போட்டியில் இருக்கின்றன

இந்தத் தேர்தலில் டெல்லி மக்கள் தாமரைக்கு பெரும்பான்மையான 36 இடங்களுக்கு மேல் ஓட்டுப் போட்டு டெல்லியின் மோசமான நிலைமையையும் - ஊழலையும் ஒழித்துக் கட்டி, இரட்டை இஞ்சின் மூலம் டெல்லியின் வளர்ச்சி மேம்படச் செய்ய வேண்டும்

தாமரை டெல்லியில் மலர வேண்டும்

தரமான அரசு ஆள வேண்டும்

துடைப்பம் தூர தூக்கி எறியப்பட்டு ஆம் ஆத்மி கட்சி ஒரு அழுக்குக் கட்சி என்பதை டெல்லி தேர்தல் நிரூபிக்க வேண்டும்

வாய்மைக்கு நம்பிக்கை இருக்கிறது ! உண்மை நிலைக்கு 8-ம் தேதி வரை பொறுத்திருக்க வேண்டும். அது வரை பிரார்த்தனை தான் நமக்குத் துணை.

 

அதிஷியின் அரசியல் சாதன அவமதிப்பிற்கு அவருக்கு அவரது அரசியல் சின்னமான துடைப்பக் கட்டைக் கிரீடம் அணிவித்து இன்னும் இரண்டு  துடைப்பங்களை இரண்டு கைகளுக்குமாக அன்பளிப்பாக அளித்து அதை அவரே தன்னை அடித்துக் கொண்டு தண்டனையை அளித்துக் கொள்ளும் படி வாய்மை மிகவும் பணிவுடன் வேண்டுகிறது.

 

இதன் மூலம் இனியாவது இந்திய அரசியலில் காலில் விழும் கலாச்சாரம், தனி நபரான கட்சியின் தலைவர் துதி பாடும் கலாச்சாரம் ஜன நாயக மரபுக்கு  எதிரானது என்ற எண்ணம் அனைவரின் உள்ளத்தில் பதிந்து அரசியல் தூய்மை அடைய விழைகிறோம்




Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017