பொங்கலோ பொங்கல்! - தைப் பொங்கல் விழா 14 - 01 - 2025
கரும்பாய் இனிக்கும் பொங்கல்
அரிசி - வெல்லம் பொங்கி சக்கரைப் பொங்கலாக இனிக்கும் பொங்கல்
மங்களகரமான மஞ்சள் கொத்து புதுப்பானையின் கழுத்தில் அலங்கரிக்க இனிக்கும் பொங்கல்.
சூரிய பகவானின் கதிர்கள் சூழ சுற்றத்தார் புடைசூழ புத்தாடை உடுத்தி, புது மலர்கள் தலையில் சூடி 'பொங்கலோ பொங்கல்' என்று உரக்க உச்சரித்து உழவுக்கு வந்தனை செய்யும் புனித நாள் இது.
பாரத தேசமெங்கும் கொண்டாடும் திருவிழா இது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், இவ்விழா பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது - கர்நாடகா, தெலுங்கானா, உத்தரபிரதேசத்தில் மகர சங்கராந்தி, தமிழ்நாட்டில் பொங்கல், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் உத்தராயணம், ஹரியானா மற்றும் பஞ்சாபில் மகி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கத்தில் பூஷ் சோங்கராந்தி.
மகர சங்கராந்தி ஒரு புனிதமான நாளின் தொடக்கமாகும். ஏனென்றால் கடவுள்கள் தூக்கத்திலிருந்து விழிப்படையும் நாள் தான் சங்கராந்தி ஆகும்.
சங்கராந்தி என்றால் நகர்தல் - பயணம் என்று பொருள். ஆகையால் மகர சங்கராந்தி என்றால், சூரியன் மகர ராசிக்கு நகர்ந்து பயணம் செய்வதைக் குறிக்கும். இந்த சூரியனின் சங்கராந்தி - அதாவது ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பயணம் ஒரு வருடத்தில் 12 முறை மாதம் ஒன்றாக நிகழும். மகர சங்கராந்தி பனி போய் கோடை வருவதை அறிவிக்கும் காலமாகும். இந்தக் காலம் அறுவடைக் காலமுமாகும்.
இந்த மகர சங்கராந்தியில் தான் அம்புப் படுக்கையில் படுத்துக் கொண்டிருந்த பீஷ்மப் பிதாமகர் தமது உயிரை தமது விரும்பம் போல் விட்டார் என்பது மஹாபாரதக் கதை. அந்தக் காலம் புண்ணிய காலமானதால், அந்த நேரத்தில் உயிர் பிரிந்தால் மோக்ஷம் கிட்டும் என்பது ஹிந்துக்களின் நம்பிக்கை.
மஹாராஸ்டிரா - குஜராத்தில் இந்த நாளில் பட்டங்கள் விடுவதும் ஒரு பெரிய நிகழ்ச்சியாக நடைபெறும்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் எமது சங்கராந்தி - பொங்கல் வாழ்த்துக்கள்.
Comments