18 வயது குகேஷ் டொம்மராஜு 18-வது உலக செஸ் சேம்பியன்
குகேஷ் வெற்றியின் பின்னே அவனது பெற்றோர்களின் பங்களிப்பும், தியாகமும் இருப்பதை இந்த சமயத்தில் குறிப்பிட வேண்டும்.
குகேஷின் தந்தையின் பெயர் டாக்டர் ரஜினிகாந்த் - அவர் ஒரு இ.என்.டி. சர்ஜன். அவனது தாய் பத்மா குமாரியும் மைக்ரோ பயாலஜிஸ்ட் டாக்டர்.
பையனுடன் பல தேசங்களுக்குச் செல்ல வேண்டி இருந்ததால் குஷேனின் தந்தை தனது வேலையை ராஜினாமா செய்து தன் மகனுடன் கூடவே துணையாக இருந்து உதவி உள்ளார். தன் மகனின் வெற்றியே தன் வாழ்வின் குறிக்கோளாக தாயும் - தந்தையும் உழைத்துள்ளார்கள்.
குகேஷின் வெற்றிக்கு 15-வது உலக செஸ் சேம்பியன் விஸ்வநாதன் ஆனந்தின் பயிற்சியும். வழிகாட்டலும் முக்கிய அங்கம் வகிக்கிறது. விஸ்வநாதன் ஆனந்த இந்தியாவின் வருங்கால கிராண்ட்மாஸ்டர்களை உருவாக்க வெஸ்ட்பிரிட்ஜ் ஆனந்த் செஸ் அகாடமி (WACA) -யை ஆரம்பித்து அதில் குகேஷ் டி போன்ற நட்சத்திரங்களை உலகளாவிய வெற்றிக்கு உதவி செய்துள்ளார். ஆகையால் அவருக்கும் நன்றி சொல்ல வேண்டும்.
வாய்மை இந்த 18-வது உலக செஸ் சேம்பியன் குகேஷ் தொம்மராஜுக்கு பூச்செண்டு கொடுத்து வாழ்த்துகிறது.
பாரதம் இந்த இளம் வயது செஸ் சாம்பியனின் வெற்றியை கொண்டாடி மகிழ்கிறது.
இந்த நேரத்தில் செஸ்
சேம்பியன் குகேஷின் குரு முன்னாள் செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்தனுக்கும்
பூச்செண்டு கொடுத்து வாய்மை கெளரவிக்கிறது.
Comments