கார்த்திகை தீபம் - 13 - 12 - 2024 - வெள்ளிக்கிழமை

 


திருக்கார்த்திகை திருநாள் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஹிந்து பண்டிகையாகும்

பரணி தீபம்: முதல் நாள் பரணி தீபம் காளிதேவியை வழிபட்டு ஏற்றப்படும்

அண்ணாமலையார் தீபம்: இரண்டாம் நாள் கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் கோயிலிலும் திருவண்ணாமலையிலும் மஹா தீபம் ஏற்றப்படும்.

விஷ்ணு தீபம்: மூன்றாம் நாள் ரோகிணி நட்சத்திரத்தில் வைணவர்களால் விஷ்ணு ஆலயங்களில் ஏற்றப்படும்

நாட்டுக் கார்த்திகை: நான்காம் நாள் மிருக சீரிட நட்சத்திரத்தில் பெண்ணையும், மருமகனையும் வீட்டுக்கு அழைத்து குடும்ப விழாவாகக் கொண்டாடுவார்கள்

தோட்டக் கார்த்திகை: ஐந்தாம் நாள் திருவாதிரை நட்சத்திரத்தில் வயல்கள், தோட்டங்கள், கிணற்றடிகள் ஆகியவைகளில் தீபங்களை ஏற்றி வழிபடுவார்கள்

இந்த கார்த்திகை தீப விழாவின் முக்கிய நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதலாகும்

சொக்கப்பனை என்பது பனை மரம் அதன் ஓலைகளால் ஆனதாகும். பனை மரத்தை வெட்டி எடுத்து ஆலயத்தின் முன் வீதியில் நட்டு அதைச் சுற்றி பல பனை ஓலைகளைச் சுற்றி 10 அல்லது 15 உயரத்திற்கு சொக்கப்பனை உருவாக்குவார்கள்.

 

கோயிலில் உள்ள சிவபிரானுக்கு தீபாராதனை காட்டி அந்த தீபாராதனைத் தீயால் சொக்கபனையையும் தீமூட்டி எரிப்பார்கள். சொக்கப்பனை எரிந்த பிறகு அதன் சாம்பலை பயபக்தியோடு விபூதியாகப் பூசிப்பார்கள். வயல்களிலும் இந்த சாம்பலைத் தூவுவார்கள். இதனால் விளைச்சல் பெருகும் என்பது நம்பிக்கை

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் அண்ணாமலைத் தீப ஒளி அவர்கள் வீடுகள் - உள்ளங்கள் அனைத்திலும் ஒளிவிட்டுப் பிரகாசித்து அந்த ஒளியால் தூய்மை பெற்று, வாழ்வில் எல்லா வளங்களும் பெற்று பெரு வாழ்வு வாழ அந்த ஒப்பற்ற கடவுளான அண்ணாமலையாரை வணங்கி வாய்மை வேண்டுகிறது

ஆண்டவன் அருள் அனைவருக்கும் கிட்டும். அருளுடன் மன அமைதி, ஆன்மீக ஒளி, திடமான உடல் - உள்ளம் பெற்று வாழப் பிரார்த்திக்கும் உங்கள் வாய்மை ஆசிரியர் குழாம்.

 அண்ணாமலையாருக்கு அரோகரா!

திருவண்ணாமலை மஹா தீப கொப்பறை மை - அனுப்பு: எஸ். ஷங்கர்


திருவண்ணாமலை மஹா தீபம் தொடர்ந்து 11 நாட்களுக்கு எரியும்.

12 வது நாள் அந்த தீ கொப்பறையில் இருந்து பத்து கிலோ அளவில் மையை எடுப்பார்கள். அந்த மை திருப்பதிக்குக் கொண்டு செல்வார்கள். அந்த கறுப்பு மை திருவேங்கட முடையான் கற்பக் கிரகத்தில் வைக்கப்படும்

ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் பெருமாளுக்கு இந்த திருவண்ணாமலை தீப மையை தயிலக் காப்பாக சாத்தப்படும். இதில் என்ன விசேஷமென்றால் இந்த மை அடுத்த கார்த்திகை தீப நாள் வரை பெருமாளுக்கு சாத்தப்படும் அளவில் இருக்கும்

இதுதான் அண்ணாமலையாருக்கும் - திருப்பதி பெருமாளுக்கும் உள்ள அற்புதமான தொடர்பாகும்

அண்ணாமலைக்கு அரோகரா!

ஏடு கொண்டல வாடா வெங்கட்ரமணா கோவிந்தா கோவிந்தா !

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017