தமிழ்த் தாய் வாழ்த்து - விவாதமான விந்தை
தூர்தர்ஷன் தமிழ் சென்னை தொலைக்காட்சி நிலையத்தில் அதன் பொன்விழா ஆண்டு சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியோடு, இந்தி மாத நிறைவுக் கொண்டாட்டங்களும் நடத்தப்பட்டது. ஆளுநர் ஆர்.என். ரவி இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். நிகழ்ச்சியின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் பாடப்படும்போது, `தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்' என்ற வரி வரும்போது சிறு குழப்பம் ஏற்பட்டு, அந்த வரி படப்படாமல் அடுத்த வரியிலிருந்து பாடல் தொடர்ந்தது.
அதைத்தொடர்ந்து, விழாவில் உரையாற்றிய
ஆளுநர் ஆர்.என்.ரவி, ``கடந்த 3 ஆண்டுகளில் மாநிலத்தின் மூலைமுடுக்குகளுக்கெல்லாம்
சென்றிருக்கிறேன். பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகளில் மாணவர்களுடன்
கலந்துரையாடியிருக்கிறேன். அங்கெல்லாம், தமிழக மக்களிடம் இந்தி கற்கும் ஆர்வம் அதிகரித்து
வருவதைக் கண்டேன். தமிழக மக்களிடையே இந்திக்கு பெரிய வரவேற்பு இருக்கிறது. இந்தி
என்பது திணிப்பு மொழி அல்ல. இந்தி திணிக்கப்படவில்லை. பாரதத்தின் ஒவ்வொரு மொழியும்
கொண்டாடப்படுகிறது. ஒன்றைவிட ஒன்று பெரியது என்ற பேச்சுக்கே இடமில்லை.
தமிழ் மிகவும் பழமையான மொழி என்பதில் பெருமைகொள்கிறோம். எதிர்பாராத விதமாக, தமிழ்நாட்டு அரசியலில் கடந்த 50 ஆண்டுகளாக இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டைத் தனிமைப்படுத்தும் முயற்சி தொடர்ச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த 50 ஆண்டுகளாக மக்களின் எண்ணத்தில் நச்சு நிரப்பப்பட்டிருக்கிறது. அவர்கள் இனிமேல் இங்கு வெற்றிபெறுவார்கள் என்று நான் நினைக்கவில்லை. இந்த நாட்டில் 28 மாநிலங்கள் இருக்கிறது. ஆனால், தமிழ்நாடு மட்டும்தான் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எந்தவொரு பிற இந்திய மொழியையும் அனுமதிப்பதில்லை."
இந்த தமிழ்த்தாய் வாழ்த்தை அந்த விழாவில் பாடியவர்கள் மூன்று பெண்கள். ஒருவர் பாடியதை மற்றவர்கள் பின் தொடர்ந்து பாடியதில் 'திராவிட நல் திருநாடும்' என்ற பாடல் வரிகள் அந்தப் பெண் பாடகரால் விடுபட்டு அதுவே தூர்தர்ஷன் - கவர்னர் ஆர்.என்.ரவி - தமிழக முதல்வர் ஸ்டாலின் - ஆகியவர்களிடையே வார்த்தைப் போரக மாறி, முதல்வர் 'கவர்னரை மாற்றவும்' என்ற அளவிற்குச் சென்று விட்டது.
இது குறித்து கவர்னர் - தூர்தர்ஷன் மன்னிப்புக் கோரியுள்ளனர்.
அதன் நகல் மேலே இதோ உங்கள் பார்வைக்கு.
தூர்ஷன் அத்துடன் நில்லாமல் பாடிய அந்த மூன்று பெண்களிடமும் விசாரணை நடத்தியதில் அவர்கள் 'இது தங்களது கவனக் குறைவால் தவறு ஏற்பட்டு விட்டது. எங்களை மன்னிக்கவும்' என்று கண்ணீர விட்டு அழுதார்கள் என்றும் தெரிவருகிறது. இந்த அனைத்து விபரங்களை தூர்ஷன் கவர்னர், முதல்வர் ஆகியவர்களுக்கும் அனுப்பி, அந்த தவறு இழைத்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிகிறது.
இந்த சம்பவத்தில் கவர்னரை முதல்வர் இழுப்பது தவறு என்பதையும் நாம் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
தூர்தர்ஷன் விழா என்பது ஒரு அரசு விழாவாகும். அதிலும் கவர்னர் பங்குகொள்ளும் போது விழா நிகழ்ச்சிகள் எந்தவிதமான தவறும் நிகழாமல் நடத்துவது மிக மிக அவசியமானதாகும்.
தூர்தர்ஷனில் தமிழ்த் தாய் வாழ்த்துப் பாடுவதற்கு முன்னால் அதற்கான ஒத்திகையும் நடந்திருக்கும். அந்த மூன்று பெண்களும் திறமைசாலி களாகத்தான் இருந்திருக்க வேண்டும். இந்தப் பிழையை அவர்கள் செய்திருக்கவே கூடாது. பாடும் பொழுதாவது கூட இருந்த மற்ற இரண்டு பெண்களாவது இதை நேர் செய்திருக்க வேண்டும். ஆனால் அது நடக்கவில்லை. ஆகையால் முன்று பெண்களும் தவறுக்கு உடந்தை ஆகிறார்கள். இது அவர்களின் மஹா - மன்னிக்க முடியாத பிழை என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை.
மேலும் இதில் வேண்டுமென்றே கவர்னரை இழுப்பது - அதுவும் முதல்வரே இதைச் செய்வது மிகவும் கண்ணியக் குறைவான செயலாகும். இது அவரது அரசியல் முதிர்ச்சி இல்லாமையையே காட்டுகிறது.
இப்போது தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை ஒரு சிறிது ஆராய்வோம்.
இது பற்றி வாய்மை முன்பே சில கட்டுரைகளில் 'இது முதல்வராக இருக்கும் பொழுது கருணாநிதி செய்த இமாலயத் தவறு' என்று சுட்டிக் காட்டி இருக்கிறோம்.
ஒரு கவிஞரின் பாடலை அப்படியே ஏற்பது தான் அந்த இலக்கிய கர்த்தாவுக்கு நாம் செய்யும் நன்றியாகும். ஆனால் இதை கருணாநிதி மறந்து ஆக்கிய கவிக்கு அவமரியாதை செய்து விட்டார். அது இன்று இல்லாவிடினும், ஒரு நாள் இது நடக்க வேண்டும். நடக்கும் என்பது தான் நமது நம்பிக்கை.
இந்த நிகழ்வால் பலர் 'திராவிட நல் திருநாடும்' என்ற வரிக்குப் பதில் 'தமிழர் நல் திருநாடும்' என்ற வரிகள் தான் சாலப்பொருந்தும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
வேறு சிலரோ அந்தப் பாடலில் விடுபட்ட வரிகளையும் சேர்த்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மாற்றப்படவேண்டும் என்றும் விருப்பம் தெரிவித்துள்ளனர். சிலர் தங்கள் விழாக்களில் முழுப்பாடலையும் பாடி ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த விழைகிறார்கள்.
இதில் குற்றவாளிக் கூண்டில் ஏற வேண்டியது தூர்ஷன். இரண்டாவது அந்தப் பாடலைப் பாடிய மூன்று பெண்களும்.
இந்த சமயத்தில் ஒன்றைச் சொல்லி இந்த விவாதத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க விழைகிறோம்.
இந்தப் பாடலை தமிழக அரசு தமிழ்த்தாய் வாழ்த்து என்று அரசாணை பிறப்பித்துள்ளதை யாவரும் அறிவோம்.
பாடலின் 4-வது வரிகள் மற்றும் 7-வது வரிகள் ஆகியவைகளை நாம் சிறிது ஆராய்வோம்:
4-வது வரி:
திராவிட நல் திருநாடும்
7-வது வரி:
பெருந் தமிழணங்கே
4-வது வரியை 'தமிழக நல் திருநாடும்' என்று மாற்றுவதால் 7-வது வரியான தமிழணங்கே என்ற சொல்லாடல் வலிமையும், தெளிவும், இனிமையும் பெரும்.
இது தமிழ்த்தாய் வாழ்த்து. இது திராவிடத் தாய் வாழ்த்தாக தமிழக அரசு கருதவில்லை. அப்படி இருக்கும் போது 'திராவிட நல் திருநாடும்' என்பதை 'தமிழக நல் திருநாடும்' என்று மாற்றுவது சாலப்பொருத்தமாகும்.
'தமிழர் நல் திருநாடும்' என்று சிலர் மாற்றம் சொல்கிறார்கள். அதுவும் சரியாகப் படவில்லை. ஏனென்றால் திராவிடம் என்பது நிலம் சார்ந்தது. இனம் சார்ந்து இல்லை.
'தமிழர்' என்பது இனத்தைக் குறிப்பதால் அந்தச் சொல் இப்பாட்டிற்கு ஏற்புடையது அல்ல என்பது எமது கருத்து.
வதனம் , திலகம், திராவிடம் போன்ற ஸம்ஸ்க்ருத சொற்கள் தமிழ் தாய் வாழ்த்தில் உள்ளதே ?
Comments