திருச்செந்தூர் முருகன் 6 நாட்கள் கந்தசஷ்டி விரதம்
இந்த கந்தசஷ்டி விரம் - நவம்பர் 2, 2024 லிருந்து நவம்பர் 7, 2024 வரை - 6 நாட்கள் நடைபெறும். கடைசி நாளான ஆறவது நாள் சூரசம்காரத்துடன் முடிவுபெறும்.
முருகன் தம் தாயான பாரவதி அம்மனிடம் வேல் வாங்கி சூரனை வதம் செய்து, தர்மத்தை நிலைநாட்டும் தெய்வீகத் திருவிழாவாகும்.
8-ம் நாளில் முருகப் பெருமான் தேவசேனா தேவை திருக்கல்யாண உற்சவம்.
இந்தத் திருவிழாக்கள் திருச்செந்தூர் முருகன் கடற்கரை கோயிலில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படும்.
முருக பக்தர்கள் சஷ்டிவிழா, சூரசம்ஹாரம், முருகன் திருக்கல்யாணம் ஆகியவற்றில் பெரும் திரளாக கலந்து கொண்டு முருகன் அருள் பெறுவார்கள்.
வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் முருகன் அருள் கிட்ட வேண்டுகிறோம்.
வெற்றி வேல் முருகனுகு அரோகரா! வீர வேல் முருகனுக்கு அரோகரா!
Comments