நவராத்திரி - ஒன்பது நாள் விழா 03 - 10 - 2024 -லிருந்து 12 - 10 - 2024 வரை





நவராத்திரி ஒன்பது நாட்கள் ஒன்பது நிறங்களை முன்னிலைப் படுத்தி ஆனந்த மயமான இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாவாகும். ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிறம். ஒன்பது நாட்களில் சிறப்பெய்தும் நிறங்கள்:

மஞ்சள், பச்சை, சாம்பல், ஆரஞ்சு, வெள்ளை, சிவப்பு, கரும் நீலம், இளம் சிவப்பு, ஊதா



இந்தியாவின் தென் பகுதி மக்கள் குறிப்பாக தமிழகத்தில் கொலு வைத்து நவராத்திரி கொண்டாடுவர்

அப்போது கும்மி கோலாட்டம் என்று அமர்க்களப்படும்


குஜாராத்தில் தாண்டியா என்ற பெண்களும் - ஆண்களும் சேர்ந்து ஆடும் ஆட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது. அப்போது பலவிதமான வண்ண ஆடைகளில் தோன்றி ஆனந்தமாக ஆடிப்பாடிக் களிப்பார்கள்.

 



கல்கத்தாவில் நவராத்திரி காளி சிலைகளை பொது வெளியிடங்களில் பெரிய பந்தல்களை உருவாக்கி அதில் அந்த பிரம்மாண்டமான சிலைகளை வைத்து பூஜித்து பிறகு கடலில் கறைப்பார்கள்

இந்த காளி பூஜை கல்கத்தாவாசிகளான பெங்காலிகளால் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் ஒரு மிகவும் முக்கியமான பண்டிகையாகும்.  

மஹாராஷ்டிராவில் கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி போல் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் பண்டிகைதான் கல்கத்தா நவராத்திரி காளி பூஜையாகும். 

இந்த நவராத்திரி பண்டிகை சக்தி தெய்வமான பார்வதி, செல்வம் தெய்வமான லட்சுமி, கல்வி தெய்வமான சரஸ்வதி ஆகிய தெய்வங்களை வணங்கிப் பூஜிப்பது நமக்கு சக்தி, செல்வம், கல்வி ஆகியவைகளை அடைய வேண்டுவதாகும்

வாய்மை அன்பர்கள் அனைவருக்கும் அனைத்துவிதமான அருளும், நோயற்ற நீண்ட வாழ்வும் கிட்ட வேண்டுகிறோம்

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017