ஆகஸ்ட் 9, 2024 அன்றைய மமதாவின் இருண்ட தருணம்

31-வயது 'நிர்ப்பயா' என்ற பயிற்சி பெறச் சேர்ந்த டாக்டரின் உடல் ஆர்.ஜி.கார் மெடிகல் காலேஜ் அண்ட் ஹாஸ்பிடலின் செமினார் ஹாலில் உயிரற்ற நிலையில் இருந்துள்ளது. அவரது போஸ்ட் மார்ட்டம் அறிக்கையின் படி அந்தப் பெண் டாக்டர் கொடூரமாகக் கற்பழிக்கப்பட்டு, அவரது உடல் உறுப்புக்கள்  சேதப்படுத்தப்பட்டு - குறிப்பாக அவரது முகம், கழுத்து ஆகியவைகள் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டுள்ளன. அவரும் கற்பழிக்கப்பட்டதும் அந்த அறிக்கை உறுதி செய்துள்ளது. அவர் ஒருவருக்கும் மேற்பட்டவர்களால் கற்பழிக்கப்பட்டாரா என்பதை அந்த அறிக்கை தெளிவு படுத்தவில்லை. 

இந்த இழி செயலைச் செய்தவன் என்று சஞ்சய் ராய் என்ற அதே ஹாஸ்பிடலில் வேலை பார்க்கும் ஒரு சிவிக் வாலண்டியர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சிவிக் வாலண்டியர் என்பது மமதா பானர்ஜியால் இளஞர்களுக்கு வேலை வாய்ப்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாகும். அப்படி வேலையில் சேர்ந்தவர்களின் குணாதிசயங்கள் குறைபாடுடையவைகள் என்பது தெரிந்த ஒன்றே. இது அரசியல் காரணங்களுக்காக உருவாக்கப்பட்ட வேலை வாய்ப்பு என்பதை அறிய வேண்டும். 

இந்த சஞ்சய் ராய் எப்படிப்பட்டவன் என்பதை சி.பி.ஐ. இவ்வாறு தெரிவிக்கிறது: 

'உளவியல் ஆய்வு மூலம் இந்த சஞ்சய் ராய் பரிசோதிக்கப்பட்டதில் வெளியானவைகள் அவனை ஒரு 'மிருகத் தனமான செக்ஸ் மேனியா' என்று தெரிவிக்கிறது. தான் செய்த மிகவும் கொடூரமான, கீழ்த்தரமான செயல்களுக்கு எந்தவிதமான வருத்தமும் கொள்ளாத மனத்தைக் கொண்டுள்ளான். ' 

இந்த கொடூரமான கற்பழிப்பு, படுகொலை ஆகியவைகளை ஹாஸ்பிடலோ அல்லது மமதா அரசின் போலீசோ சரியான முறையில் கையாளவில்லை என்பதையும் சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். 

சி.பி.ஐ. சுப்ரீம் கோர்ட்டில் 'கற்பழிப்பு நடந்த இடம் பாதுகாக்கப் படவில்லை. அங்குள்ள பொருட்கள் மாற்றப்பட்டதால், உண்மையைக் கண்டறிவது ஒரு மிகப் பெரிய சவாலாக இருக்கப் போகிறது. இதற்கு ஹாஸ்பிடல் நிறுவாகம், பெங்கால் போலீஸ் ஆகியவைகள் குற்றம் இழைத்தவர்களாகிறார்கள்' என்று தெரிவித்துள்ளதையும் கவனிக்க வேண்டும் . 

சுப்ரீம் கோர்ட் மமதா அரசை 'இந்த கேசில் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்வதில் தாமதம் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும் போராட்டக்காரர்கள் இந்த கொடூரமான கொலை நடந்த ஹாஸ்பிடலில் நுழைந்து பல ஹாஸ்பிடல் சொத்துக்களைச் சேதம் செய்தைதத் தடுக்கத் தவறியது பெங்கால் போலீஸ் என்பது மிகவும் கவலை அளிக்கும் செய்தியாகும். 

இந்த கொடூரமான கற்பழிப்பு - கொலை ஆகியவைகளை மறைக்க போலீஸும், ஹாஸ்பிடல் நிறுவாகமும் செயல்பட்டுள்ளதையும் சி.பி.ஐ. சுப்பீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது. தாமதமான முதல் தகவல் அறிக்கையுடன், இதை ஒரு தற்கொலை என்று முதலில் அறிவித்த போலீஸ் - ஹாஸ்பிடல் நிறுவாகம் - மமதா அரசு - அதுவும் போஸ்ட் மார்டம் அறிக்கை கிடைத்த பிறகும் உண்மை நிலையை மறைக்க முயன்றது ஒரு மன்னிக்க முடியாத குற்றமாகும். 

பாதிக்கப்பட்ட பெண்ணோடு தகப்பனாருக்கு ஹாஸ்பிடல் நிறுவாகமோ அல்லது போலீஸோ தகுந்த பதில் அளிக்க வில்லை. பெண்ணின் தகப்பனார் 'ஹாஸ்பிடல் நிறுவாகத்தில் நடக்கும் ஊழல் போன்றவைகளை வெளிக்கொனற முயன்ற என் மகளுக்கு தண்டனை கொடுக்க அனுப்பப் பட்டவன் தான் இந்த சஞ்செய் ராய் என்ற அயோக்கியனாகும். அவனைத் தூண்டியவர்களை அடையாளம் கண்டு தண்டிக்கப்பட வேண்டும்' என்று மீடியாவில் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார். மேலும் மமதா பானர்ஜி முன் வந்து £ 90 லட்சம்    அளித்த பணத்தை வாங்க மறுத்த தந்தை தன் மகளுக்கு நீதி வழங்கினாலே போதும் என்று கொதித்துள்ளார். ஆனால் இதற்கெல்லாம் அசைந்து கொடுக்காத இரும்பு மனத்தினளாக இருக்கும் மமதா பானர்ஜியை வங்காள மக்கள் புறக்கணிக்கும் நாள் தான் மேற்கு வங்காளம் நீதி, நேர்மை, பாதுகாப்பு அகியவைகள் கோலோட்சும் ஆட்சி அமையும். 

ஒரு இளம் பயிற்சி டாக்டர் கொடூரமாக கொலையுண்ட பிறகும் அந்த ஆர்.ஜி.கார் ஹாஸ்பிடலின் தலைமை டாக்டரைப் பதவி நீக்கம் செய்த மமதா இன்னொரு ஹாஸ்பிடலுக்கு தலைமை டாக்டராக சந்தீப் கோஷை நியமித்துள்ளதையும் இங்கு குறிப்பிட வேண்டும். ஆனால் அவைகள் கோர்ட்டால் தவிர்க்கப்பட்ட நிலையில் இங்கு மமதாவின் அத்துமீறல்கள் - அராஜகம் - ஆகியவைகள் அவரது அரசின் சின்னங்களாக இருக்கின்றன. இப்போது இந்த சந்தீப் கோஷை மற்றும் 4 டாக்டர்கள் உண்மை அறியும் சோதனை செய்ய சுப்ரீம் கோர்ட்டே உத்திரவிட்டுள்ளது டீடிக்கு ஒரு பெரும் பின்னடைவு என்றால் அது மிகையாகாது. 

இந்த வங்காள பயிற்சி டாக்டரின் கற்பழிப்பு - கொலை ஆகியவைகளை சுப்ரீம் கோர்ட்டே தானாக முன் வந்து கேசை நடத்துகிறது என்பது ஒரு அரசுக்கு எவ்வளவு கேவலம் என்பதை அனைவரும் அறிவர். சுப்ரீம் கோர்ட்டில் உத்திரவுப் படி பல நடவடிக்கைகள் மேற்கொள்ளாப்பட்டு அதனால் டாக்டர்களில் நாடு தழுவி போராட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு டெல்லியில்முனிர்க்கா என்ற இடத்திலிருந்து பஸ் ஏறிய நிர்ப்பயாவின் கொடூரக் கற்பழிப்பு - கொலை ஏழு வருடங்களுக்கு முன் நடந்து இந்தியாவின் நற்பெயரைக் கெடுத்தது. அதனாலேயே அப்போது ஆட்சியில் இருந்த காங்கிரஸ் பதவி இழந்தது மட்டுமல்ல அரசியல் ரீதியாக டெல்லியில் அதனால் தலை தூக்க முடியாத அளவுக்கு தேர்தலில் தோற்றது. அந்தத் தோல்வி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து எதிரொலிக்கிறது. 

அதே நிலை மமதா பானர்ஜிக்கும் இந்த ஆர்.ஜி.கார். ஹாஸ்;பிடல் கற்பழிப்பு - கொலை ஏற்படுத்தும் நாள் வரும் என்பது தான் வாய்மையின் கணிப்பு. டெல்லியில் தெருவில் நடந்த சம்பவம் மேற்கு வங்காளத்தில் ஹாஸ்பிடல் வளாகத்திற்குள்ளேயே நடந்து ஹாஸ்பிடலின் பாதுகாப்பற்ற நிலையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. 

புள்ளி இந்தியா கூட்டணியால் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளைத் தவிர - பிஜேபி மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளைத் தவிர - மற்ற அனைத்துக் கட்சிகளும் மவுனம் சாதிக்கின்றன. 

மோடி வெறுப்பினால் எதிர்க் கட்சிகள் அனைத்தும் தர்மத்தையும், நீதியையும், நேர்மையையும், பெண்களின் பாதுகப்பையும் நினைத்துப் பார்க்காமல் அரசியல் செய்யும் அவலத்தையும் இந்திய மக்கள் கவனித்துக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கு தகுந்த பதில் அளிப்பார்கள் என்று தான் வாய்மை நம்புகிறது. 

வாய்மை மேற்கு வங்க அரசை ஆளும் திருமதி. மமதா பானர்ஜி அவர்களுக்கு 

அவரது இதயமற்ற ஆட்சியைக் கண்டித்து அவருக்கு முள் கீரீடம் சூட்டி தனது 

எதிர்ப்பைத் தெரிவிக்கிறது. 


சில கருத்துப் படங்கள் உங்கள் பார்வைக்கு: 



Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017