ஆவணியா அவிட்டம் என்ற உபாகர்மா - 19 - 08 - 2024 - திங்கட் கிழமை

 



ஆவணியா அவிட்டம் என்ற பூணூல் மாற்றும் கர்மா பிராமணர்களுக்கு உரித்த ஒரு சடங்காகும். இது சனாதன தர்மத்தைக் காக்கும் கடமையைச் செய்ய பணிக்கப்பட்ட பிராமணர்கள் அனுஷ்டிக்க வேண்டிய ஒரு முக்கியமான கர்மாவாகும். பிராமணர்களுக்கு அடையாளமான குடுமி போய்விட்டது. பூணூல் வெளிநாடுகளுக்கு மேல் படிப்பு, வேலை ஆகியவைகளுக்காகச்  செல்லும் பிராமணர்கள் பூணூலை அப்பா - அம்மாவிடம் ஒப்படைத்து விட்டுச் சென்று விடுகிறார்கள். நெற்றியில் விபூதி, கோபிச் சந்தனம், நாமம் - ஆகியவைகள் காணாமல் போய்விட்டன.

படிப்பு, பதவி, பணம், பகட்டு ஆகியவைகளில் பிராமணர்கள் ஆசை கொள்ளக் கூடாது என்பது சாஸ்திரம். அவர்கள் சனாதன தர்மத்தைக் காக்க தங்களை அர்ப்பணித்து ஒரு நித்திய தியாக வாழ்க்கையை அனுசரிக்க வேண்டும் என்பது பிராமணர்களுக்கான விதி. ஹிந்து மதத்தைக் காக்க இந்த எளிய வாழ்க்கை தான் அவர்களுக்கு இடப்பட்ட வழிமுறையாகும். ஆனால் அதிலிருந்து அனேகமாக பல பிராமணர்கள் குடும்பம் குடும்பமாக விடுபட்டு, சனாதன  தர்மத்தைக் கடைப்பிடிக்காமல் தவறிழைத்துத்துக் கொண்டிருக்கிறார்கள்.

பிராமணப் பெண்களால் தங்கள் நீண்ட தலைமுடி, பின்னல், நெற்றியில்  குங்குமம், தாவணி, புடவை ஆகியவைகள் புறக்கணிக்கப்பட்டு பல தலைமுறையாகி விட்டது. வீட்டிலே பூஜை அறையும் இல்லாத நிலையும் பல பிராமண வீடுகளில் ஏற்பட்டு விட்டன. பிராமணப் பெண்களும் ஆண்களுக்கு நிகராக படிப்பு, பதவி, பணம், பகட்டு என்று பொருளாதாரத்தில் முன்னேறி அதனால் பல சனாதன சடங்குகளும் கைவிடப்பட்ட நிலையில் பல பிராமணக் குடும்பங்கள் இப்போது செயல்படுகின்றன.

அடுத்த தலைமுறை அப்பா - அம்மா ஆகியவர்கள் இந்த நவநாகரீக முறையில் வாழ்ந்தவர்களாக இருப்பதால் இனி பிராமண சமூகம் காணாமல் போகும் நிலை ஏற்பட்டால் ஆச்சரியப்படுவதற்கில்லை. இந்த நிலையிலும் பல ஹிந்துமத ஆச்சார்யர்கள், உபன்யாசகர்கள், ஹிந்து மத சடங்குகள் செய்யும் வாத்தியார்கள் ஆகியவர்களால் பிராமண சடங்குகள், உபாசனைகள் ஆகியவைகள் கடைப்பிடிக்கப் பட்டு வருவது சனாதன தர்மத்திற்குக் கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்த உபாகர்மா நாளில் அனைத்து பிராமணர்களையும் வாழ்த்துவோமாக.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017