சித்தராமையாவின் சித்து விளையாட்டு
ஜூலை 15 - கர்நாடகா மாநில
தொழில்கள், தொழிற்சாலைகள்
மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் வேட்பாளர்களின் வேலைவாய்ப்பு மசோதா,
2024 – கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் தலைமையில் மந்திரிகள் ஒப்புதல். அந்த மசோதா
வருகிற சட்ட மன்றத்தில் ஒப்புதலுக்கு கொண்டு வருவதாக முடிவாயிற்று.
ஜூலை 17 – தொழிலதிபர்களின் எதிர்ப்பால், சித்தராமையா அரசு
இந்த மசோதா தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு. அந்த அறிவிப்பின்
போது, தொழில் மந்திரி எம்.பி.பாட்டீல் விளக்கியது: ‘ஒரு குழு இந்த மசோதாவைத் தீவிரமாக
ஆலோசித்து முடிவெடுக்கும். மேலும் இந்த தொழிற்சாலைகளில் கர்னடிகருக்கான இட ஒதிக்கீடு
‘ஒரு யோசனையே’ அன்றி சட்டமில்லை.’
இந்தியர்கள் இந்திய அரசியல் சட்டத்தின்படி அனைத்து
இடங்களிலும் எந்தவிதமான தடங்களும் இன்றி வசிக்கவோ, படிக்கவோ, வேலையில் சேரவோ
முடியும் என்ற உத்திரவாதம் உண்டு. இந்த உத்திரவாதம் தான் இந்தியா என்பது
இந்தியர்களுக்காக, இந்தியர்களால், இந்தியர்கள் மூலம் சுதந்திரமாக வாழ
வழிவகுக்கிறது. ஆனால் இந்த சித்தராமையாவின் சித்தத்தில் உதித்து அவரது சகா
மந்திரிகள் ஒப்புதல் அளித்த இந்த மசோதா அந்த சுதந்திரமான இந்திய அரசியல் சட்டம்
அளித்த பாதுகாப்பை தகர்க்கும் நிலையில் உள்ளது. இது ஒரே இந்தியா என்ற
எண்ணத்திற்கும், செயலுக்கும் நேர் எதிரானதாகும்.
அந்த மசோதாவில் அப்படி என்ன தான் உள்ளது என்பதை இப்போது
பார்க்கலாம்.
v கர்நாடகாவில் உள்ள எந்தவொரு தொழில்,
தொழிற்சாலை அல்லது பிற நிறுவனங்களும் உள்ளூர் வேட்பாளர்களில் 50%
நிர்வாக பதவிகளிலும், 75% நிர்வாகம் அல்லாத
பதவிகளிலும் நியமிக்க வேண்டும்.
v உள்ளூர் வேட்பாளர் என்பது கர்நாடக மாநிலத்தில் பிறந்து, 15 ஆண்டுகள் அங்கு தங்கியிருப்பவர் மற்றும்
கன்னடத்தை தெளிவாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் திறன் கொண்டவராகவும், தேவையான தேர்வில்
தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
v போதுமான எண்ணிக்கையிலான
உள்ளூர் வேட்பாளர்கள் கிடைக்கவில்லை என்றால், கர்நாடகாவில்
உள்ள ஒரு தொழில், தொழிற்சாலை அல்லது பிற நிறுவனங்கள் இந்தச்
சட்டத்தின் விதிகளில் இருந்து தளர்வு கோரி அரசுக்கு விண்ணப்பிக்கலாம். உரிய விசாரணைக்குப் பிறகு அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க்ம். தளர்வு மேலாண்மை பிரிவினருக்கு 25% மற்றும்
மேலாண்மை அல்லாத பிரிவுகளுக்கு 50% க்கும் குறைவாக
இருக்கக்கூடாது.
v சட்டத்தின்
விதிகளை மீறும் எந்தவொரு முதலாளி அல்லது குடியிருப்பாளர் அல்லது மேலாளர் அபராதம்
விதிக்கப்படுவார், இது பத்தாயிரம் ரூபாய் முதல்
இருபத்தைந்தாயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
மற்றும் அபராதம் விதிக்கப்பட்ட பிறகும் மீறல் தொடர்ந்தால், பின்னர்
, மேலும் அபராதத்துடன், நேர மீறல்
தொடரும் வரை ஒவ்வொரு நாளும் நூறு ரூபாய் வரை நீடிக்கப்படலாம்.
இந்த மசோதா ‘ஒரே இந்தியா’ என்ற கருத்திற்கு எதிரான
இந்தியா இறையாண்மைக்கு ஊறு செய்யும் ஒரு சட்டமாகும் என்பதில் எந்தவிதமான
சந்தேகமும் இல்லை.
சுதந்திரம் கிடைக்கப் பாடுபட்ட அப்போதைய காங்கிரசுக்கும்
இப்போதைய ராஹுல் காங்கிரசுக்கும் நிறைய வேறுபாடு உள்ளது. தேசிய சிந்தனை அதற்கு
இல்லை என்ற அளவில் அது செயல்படுகிறது. காங்கிரஸ் சிறுபான்மை நலன் மட்டும் காக்கும்
கட்சியாகவே உருமாறிவிட்டது.
கர்நாடக முதல்வர் முஸ்லீம்களின் நண்பராக இருப்பதில்
முன்னிலை வகிப்பவர். இந்துக்களின் நலன் அவருக்கு இரண்டாம் பட்சம். மேலும் இந்திய
தேசிய கண்ணோட்டம் என்பது அவரது அகராதியில் – கர்நாடகம் முதல் – இந்தியா கடைசி –
என்ற பொருள் படத்தான் உள்ளது. அவருக்கு தேர்தல் ஓட்டுக்களும், தன் நாற்காலிப்
பதவியும் தான் முக்கியம்.
அஹிண்டா என்பது கர்நாடகாவில் உள்ள சிறுபான்மையினர்,
பிற்படுத்தப்பட்டோர், தலித் ஆகியவர்களை அங்கத்தினர்களாகக் கொண்டு செயல்படும் சமூக
– அரசியல் அமைப்பாகும். அதன் தலைவராக இருப்பவர் சித்தராமையா. இந்த அமைப்பின் மூலம்
காங்கிரஸைப் பணிய வைக்க முயன்று பல சமயங்களில் வெற்றியும் பெற்றுள்ளார். அந்த மன
நிலையில் தான் அவர் பல சமயங்களில் தன்னிட்சையாகவும் செயல்படுபவர். அதன் ஒரு
தொடர்ச்சியாகத் தான் கர்நாடக மாநிலத்திற்கு ஒரு தனிக் கொடியையும் கொண்டு வர முயன்ற
அவர் முயற்சியை அவரது அகில இந்திய தேசிய சிந்தனையில் விழுந்த ஒட்டையாகவே நாம் கணிக்கலாம்.
இந்த மசோதா நிறைவேறாமல் கைவிடப்படலாம். ஆனால் இந்த
சித்தராமையாவின் தவறான செயலால் மாநிலத்தின் தொழில் வளம் பாதிக்கப்பட்டு, மக்கள்
துன்பத்திற்கு உள்ளாவார்கள் என்பது திண்ணம். இதன் மூலம் தொழில் முதலீடும்
குறையும்.
நாஸ்காம் போன்ற தொழில்துறை அமைப்புகள் இந்த மசோதாவை மிகவும் வலுவாக எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. கடந்த காலங்களில், இந்தியாவில் உள்ள ஹரியானா,
மகாராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்
போன்ற மாநிலங்கள், தனியார் துறையில் தங்கள் உள்ளூர்வாசிகளுக்கு
இடஒதுக்கீடு வழங்கும் இதேபோன்ற சட்டங்களை இயற்றியுள்ளன, இதில்
பெரும்பாலான சட்டங்கள் நீதிமன்றங்களால் அல்லது அரசியலமைப்பிற்கு முரணானவை
என்பதால் அவைகள் இன்னும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.
ஆகவே, இந்த சித்தராமையா மசோதாவும் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டாலும்,
அது அரசியலமைப்பு
அடிப்படையில் சட்டரீதியான சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
‘எனக்கு 46 வயதாகிறது.
என் வாழ்நாளில், 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒரே மாநிலத்தில் நான்
வசித்தது இல்லை. காரணம், என் தந்தை
கடற்படையில் பணியாற்றினார். அதனால், நாடு
முழுதும் அவருக்கு பணியிட மாற்றம் வரும்; பல ஊர்களில்
வசித்துள்ளேன்.
கர்நாடக அரசு அறிவித்த இட ஒதுக்கீடு மசோதா, என்னைப் போன்ற
ஆட்களுக்கு அநீதி இழைப்பதாக உள்ளது. என் நிறுவனத்தின் வாயிலாக நாடு முழுதும் 25,000
வேலை வாய்ப்புகளை அளித்துள்ளேன். என்
பிள்ளைகள் கர்நாடகாவில் பிறந்து வளர்ந்தவர்கள். இருந்தும், அவர்கள்
இந்த மண்ணில் வேலை பெற தகுதியற்றவர்கள் என்பது வெட்கக்கேடு.”
இந்த மசோதா சட்ட சபையில் நிறைவேற்றப்பட்டாலும்,
அது நடைமுறைப்படுத்த முடியாது என்று தெரிந்தும் சித்தராமையா இந்த இட ஒதுக்கீடு
மசோதாவைக் கொண்டு வர முயல்வது அரசியல் நோக்கமும், ஓட்டு வங்கி அரசியலும் தான்
காரணம்.
வாய்மை சித்தராமையாவின் இந்த தேச
விரோதப் போக்கை கடுமையாகக் கண்டிக்கிறது.
Comments