தமிழ்ப் புத்தாண்டு குரோதி வருடம் – 14 – 04 – 2024 – ஞாயிற்றுக் கிழமை
இந்த வருஷத்திய வெண்பா பலன் நல்ல பலனைத் தெரிவிக்கவில்லை. என்றாலும் பொதுப்பலன் சாதகமாக இருக்கிறது.
குரோதி வருஷத்திய வெண்பா பலன்:
கோரக் குரோதிதனிற் கொள்ளிமிகுங் கள்வரினால்
பாரிற்
சனங்கள் பயமடைவார் - கார்மிக்க
அற்பமழை
பெய்யுமே மஃகங் குறையுமே
சொற்பவிளை
யுண்டெனவே சொல்.
பாடல் விளக்கம்: குரோதி தமிழ் ஆண்டு கோரமான வருடம். எங்கும்
கொள்ளை களவு பகை பெருகும். திருடர்கள் மக்களை தாக்கி அழிப்பர். ஊரில் பயம்
மிகுதியாகும். மழையும் தேவையான நேரத்தில் மிகவும் குறைவாகவே பொழியும். எங்கும்
காய்கறிகளின் பற்றாக்குறை காணப்படும். பயிர்களும் அழிந்து போய் மிகவும் அற்பமான
விளைச்சலைத் தரும்.
வெண்பா பலன்:
குரோதி தமிழ் ஆண்டில் உலகில் உள்ள முக்கிய
பிரமுகர்கள் உடல் நலனிலும், பாதுகாப்பிலும் அதிக
கவனம் செலுத்துவது நல்லது.
எரிமலைச் சீற்றம், கடல் தொந்தளிப்பு, மலைப்
பிரதேசங்களில் மண் சரிவு, தீ விபத்துகள், ரசாயனக் கழிவுகளால் அபாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. தகுந்த பாதுகாப்பு
நடவடிக்கைகள் அவசியமாகிறது.
அரசியல் கட்சியினருக்குள் குழப்பங்கள் ஏற்படும்.
நாட்டில் விலைவாசி உயரும். காய் கனிகள் விலை உயரும். புதுவித நோய்கள் ஏற்பட
வாய்ப்பு உண்டு. அதற்கு தகுந்தவாறு உரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.
பொதுப் பலன்:
இந்தியா பல்வேறு வகையில் வளர்ச்சியை அடையும்.
இந்தியாவின் புதிய கண்டுபிடிப்புகளை உலகமே வியந்து பார்க்கும். நல்ல பலன்
அளிக்கக்கூடிய வகையில் அவை இருப்பதால், நல்ல பாராட்டைப் பெறும். கரும்பு, மஞ்சள் விளைச்சல்
அதிகரிக்கும். சிவப்புநிற பொருட்கள் விளைச்சல் அதிகமாகும். வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியமாகிறது. குற்றச்
செயல்களையும், தீராத நோய்களையும் களையும் பொறுப்பில் அவர்கள்
உள்ளனர்.
மத்திய அரசின் நிலையான ஆட்சியும் - பல முக்கிய தலைவர்களுக்கு பல
புதிய பதவி உயர்வுகளும் ஏற்படும். இந்த ஆண்டு 9 புயல்கள்
உருவாகி அதில் நான்கு புயல்கள் பலஹீனம் அடைந்து மற்ற புயல்களினால் மிதமான மழை
ஏற்படும். ஆறு ஏரி குளம், குட்டை, கால்வாய்களில்
ஓரளவு தண்ணீர் நிரம்பும். இந்த ஆண்டு புரட்டாசி, ஐப்பசி,
கார்த்திகை மாதங்களில் வால் நட்சத்திரங்கள் தோன்றும்.
இந்த ஆண்டு அயல்நாடுகளில் மூலதனம் அதிகமாகும். ஏற்றுமதி இறக்குமதி
மூலம் வருவாய் அதிகரிக்கும். இந்த ஆண்டு பூமி நிலம் வீடு மனை விலை சற்று குறையும்.
இந்த ஆண்டு ராஜாவாக செவ்வாய் வருவதால் மத்திய அரசுகளில் நல்ல
வருவாயும் பங்குச்சந்தை சம்பந்தப்பட்ட துறையில் முதலீடும் அதிகம் ஏற்படும்.
அரசுகளின் முயற்சியினால் கல்வித்தரம் சர்வதேச அளவில் உயரும். மத்திய மாநில
அரசுகளுக்கு இடையே நட்புறவு நீடிக்கும்.
மந்திரியாக சனி வருவதால் பெண்களுக்கு இந்த வருடம் நன்றாக
இருக்கும். ராணுவம் சம்பந்தப்பட்ட துறைகளில் பல புதிய நவீன ஏவுகணைகள்
சேர்க்கப்படும். காவல் துறை நவீனமாகும். கார் லாரி பஸ் இதர வாகனங்கள் நவீன
மயமாக்கப்பட்டு விலை ஏறும்.
இந்த ஆண்டு சேனாதிபதியாக சனி வருவதால் போர் பதற்றம் தணிந்து
பேச்சுவார்த்தைகளில் மூலமாக நாடுகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். பொதுவாக இந்த ஆண்டில்
சந்திரன் பலமாக இருப்பதால் ராணுவம் காவல்துறை ஊர்க்காவல்படை இதர துறைகளில் பெண்கள்
அதிகமாக சேர்க்கப்படுவார்கள்.
மேக அதிபதியாக சனி ஆட்சியாக இருப்பதால் வருட வெண்பாவையும் தாண்டி
ஓரளவு மழை பெற முடியும். அணைகள் முக்கால்வாசி நிரம்பும். காய்கறி வகைகள் - பழங்கள்
- பருப்பு வகைகள் - எண்ணெய் வித்துக்கள் விலை ஏறும். சிறுதானியங்களின் உபயோகம்
அதிகரிக்கும்.
நீரஸாதிபதியாக செவ்வாய் இருப்பதால் மதுவகைகள் - தேயிலை - காப்பி -
லாகிரி வஸ்துக்கள் வகைகள் விலையில் நல்ல மாற்றம் ஏற்படும்.
இந்த ஆண்டு ஈரான், ஈராக், அமெரிக்கா, கொரியா ஆகிய நாடுகளில் உள்நாட்டு குழப்பங்கள் மனக்கசப்புகள் ஏற்படலாம்.
ஆக மொத்தம் இந்த ஆண்டு, மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ஆண்டாகவும், பல வித அனுபவங்களைத் தரக் கூடிய ஆண்டாகவும் அமைகிறது.
இந்த குரோதி ஆண்டில் ஆண்டவனை வேண்டி வீடும் – நாடும் நலமாக இருக்க வேண்டுவோமாக.
பாரதம் ஒரு புண்ணிய பூமி. உலக மக்கள் அனைவரும் நோய் நொடியின்றி, திடகார்த்திரர்களாகவும், தீர்க்காயுசு உள்ளவர்களாகவும் இனிய இன்ப வாழ்வு வாழ வாய்மை ஆண்டவனை வேண்டுகிறது.
சர்வ ஜனா சுகினோ பவந்து – அனைத்து உலக மக்களும் சுகமாக இருக்க வேண்டும் என்று ஒவ்வொரு சுப காரியங்களில் பிரார்த்திக்கும் மதம் சனாதன மதமான ஹிந்து மதம் என்று பெருமை கொள்வோம்.
ॐ सर्वे भवन्तु सुखिनः
|
Om Sarve Bhavantu Sukhinah |
ஓம், எல்லோரும் சந்தோஷமாக இருக்க பிரார்த்திக்கிறோம் அனைவரும் நோய் இல்லாமல் இருக்கப் பீரார்த்திக்கிறோம். அனைத்தும் அனைவருக்கும் மங்களமாக அமையட்டும்.
ஒருவரும் துயரப் படாமல் இருக்கட்டும்.
ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி. |
Comments