அயோத்தியில் ராம ஜென்ம பூமி கோயிலில் பால ராம சிலை பிரதிக்ஷை
ராம ஜென்ம
பூமியில் ராமர் கோயில் கட்டி, பால ராமர் சிலையை அங்கு நிறுவ முடியுமா? – என்ற 500 ஆண்டுகால
ஏக்கம் 22-ம் தேதி ஜனவரி 2024 அன்றோடு முடிவுக்கு வந்து இந்தியாவில் வாழும் ஹிந்து
மக்கள் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷங்கள் எழுப்பி ஆனந்த சாகரத்தில் மூழ்கினர் என்றால்
மிகையாகாது.
இதற்குக்
காரணமான கோடானு கோடி மக்கள் கடந்த 500 ஆண்டுகளாகப் போராடி, உயிர் நீத்த ராம பக்தர்கள்
அனைவரின் பாதங்களைத் தொட்டு வணங்குவோமாக.
இந்த
உன்னதமான காரியம் நமது கர்ம யோகி, தர்ம யோகி, பக்தி யோகியான பாரதப் பிரதமர் மோடி அவர்களால்
முடிக்க வேண்டும் என்பது ராமனின் சித்தம் போலும்.
வாய்மை
அத்துனை ராம பக்தர்களுக்கும் வந்தனை செய்து அவர்களுக்கு அனைத்து கல்யாண குணங்களும்
கிடைக்கப் பெற்று நலமுடன் வாழ அந்த ராம் லாலவை வேண்டுகிறோம்.
ஜெய் ஸ்ரீ ராம் ஜெய் ஸ்ரீ
ராம் ஜெய் ஸ்ரீ ராம்
Comments