Posts

Showing posts from December, 2023

பரசுராமர் தன் தாய்க்கு இழைத்த பெரும் பிழை

Image
பரசுராமர் என்பது பரசு + ராமர் என்ற இரண்டு பதங்களைக் கொண்டதாகும். பரசு என்றால் கோடலி. பரசுராமர் என்றால் கோடலி ஆயுதத்தை ஏந்திய ராமர் என்று பொருள் படும். பரசுராமர் திரேதா யுகத்தில் பாதி பிராமண குணமும், பாதி க்ஷத்திரிய குணமும் கொண்டு பத்து அவதாரங்கள் எடுத்த விஷ்ணுவின் ஆறாவது அவதாரமாகும். ஆகையால் பரசுராமர் பிராமணக்ஷத்திரியர் என்றும் அழைக்கப்படுகிறார். பரசுராமர் சிரஞ்சீயாவார். பரசுராமர் ராமாயணம், மஹாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலும் வருகிறார். அவர் கலியுகத்தின் இறுதியில் விஷ்ணுவின் கடைசி அவதாரமான கல்கி அவதாரத்தின் போது கல்கிக்குக் குருவாக வந்து சகல யுத்தக் கலைகளையும் கற்றுக் கொடுப்பார் என்று புராணங்கள் கூறுகின்றன. பரசுராமருக்கு குருவாக இருந்து அவருக்குச் சகல யுத்த வித்தைகளையும் கற்றுக் கொடுத்தவர் மஹரிஷி விஸ்வாமித்திரர். விஸ்வாமித்திரர் க்ஷத்திரிய அரசராக இருந்து தவம் செய்து பிராமணராக பிரம்மரிஷிப் பட்டம் பெற்றவர். சத்யவதியின் பேரன் தான் பரசுராமர். சத்யவதியின் தாய்க்குப் பிறந்தவர் தான் விஸ்வாமித்திரர். பிரம்ம ரிஷியான விஸ்வாமித்திரரிடம் க்ஷத்திரியப்ராமணரான பரசுராமர் ஆயுதப் பயிற்சி பெற்றார். ஆனா...

வெள்ளத்தை வெல்ல முடியாமல் தவிக்கும் ஸ்டாலின் அரசு

Image
இயற்கைச் சீற்றத்தை எதிர்கொள்ள பல துரித முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசுகள் எடுக்கத் தவறினால் அதனால் தவிர்க்கக் கூடிய பேரிழைப்புகள் – மனித உயிர் இழப்புகள், பொருட் சேதங்கள் – அதிக அளவில் ஏற்படும். மேலும் கழுவு நீர்க் கால்வாய்களைத் தூர் எடுத்து மழை நீர் எந்த தடைகளும் இன்றி எப்போதும் செல்லும் படி வைத்திருக்க வேண்டியது மிக மிக அவசியம். மேலும் இருக்கும் குளம், ஏரி, ஆறு ஆகியவைகள் ஆக்கிரமிப்பிலிருந்து காப்பாற்றப்பட்டு பாதுகாக்கப் படவேண்டும். இவைகளை ஒரே வரியில் சொல்ல வேண்டு மென்றால், கிராம – நகர வளர்ச்சித் திட்டங்கள் இந்த நீர் வேளாண்மைகளை முன்னிலைப் படுத்தி செயல்படுத்த வேண்டும். சென்னை நகரத்தில் பல நீர்த் தேக்கங்களை ஆக்கிரமித்து கட்டிடங்கள், நினைவாலயங்கள் என்று தவறான வழிமுறைகளை தமிழக அரசுகள் கடைப்பிடித்து வந்துள்ளன. உதாரணாத்திற்கு, நுங்கம்பாக்கத்தில் உள்ள வள்ளுவர் கோட்டம் நீர் தேக்கம் இருந்த இடமாகும். அதைப் போல் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, அரசாங்க அதிகாரிகளையும் மிரட்டிப் பணிய வைத்து அல்லது அவர்களையும் பணத்திற்கு அடிமையாக்கி நகரத்தையே நரகமாக்கும் இழி செயலில் ஈடுபட்டவர்கள் தான் அரசின் ஆட்...

ஆருத்ரா தரிசனம் செவ்வாய்க்கிழமை டிசம்பர்-26, 2023 - (மார்கழி 10)

Image
வியாக்ரபாத முனிவர் , பதஞ்சலி முனிவ ர் ஆகிய இருவ ரும் சிவ பெருமானின் திருநடனத்தை காண விரும்பி ஈசனை துதித்தனர். அவர்களுக்காக திருநடனத்தை நிகழ்த்திக் காட்டிய நிகழ்வு தான் ஆருத்ரா தரிசனமாக கொண்டாடப்பட்டு வருகிறது . சிவபெருமானின் அம்சமான நடராஜரை ஆருத்ரா நன் நாளில் வணங்குவது வாழ்வில் நலன்கள் பல பெற்று உன்னத நிலையை அடைவதற்குச் சிறந்த வழியாகும்.     ஆடி முதல் மார்கழி வரை தேவர்களின் இரவு பொழுதாகக் கருதப்படுகிறது. கடைசி பகுதியான மார்கழி மாதம் தனுர் மாதம் என போற்றப்படுகிறது. இது தேவர்களின் பிரம்மமுகூர்த்த காலமாகும். மார்கழி மாத திருவாதிரை நட்சத்திர தினத்தன்று தேவர்கள் இறைவனுக்கு திருவாதிரை நட்சத்திர நாளில் பூஜை செய்வதாக ஐதீகம். அப்போது சிவன் கோயில்களில் நடராஜப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. தமிழ் மொழியில் திருவாதிரை என்று கூறப்படும் நட்சத்திரத்திற்கு வடமொழியில் ஆருத்ரா என்று பெயர். இதுவே ஆருத்ரா எனப்படுகிறது. ஆருத்ரா தரிசனம் அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பாக நடைபெறும். அதுவும் சிதம்பரம் கோயிலில் ஆருத்ரா தரிசனம் மிகவும் முக்கிய ஆராதனை விழாவாகக் கொண்டாடப்பட...

வைகுண்ட ஏகாதசி – 23 டிசம்பர் 2023 – சனிக்கிழமை

Image
  சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த சிறப்பு தினமாகும். அந்த நாளில் இந்த வருடம் வைகுண்ட ஏகாதசி வருவது சிறப்பு அம்சமாகும். ஆகையால் அந்த பெருமாள் தினமான வைகுண்ட ஏகாதசியில் விரதம் இருந்து, பெருமாள் ஸ்தோத்திரங்களைப் பாடி, பெருமாள் கோயிலுக்குச் சென்று பெருமாளைச் சேவித்து, சொர்கவாசல் வழியாக வருவது அந்த வருடம் பூராவிலும் நமது க்ஷேமத்திற்கு உத்திரவாதம் பெருமாளிடம் பெற்றதற்குச் சமம். ஒரு வருடத்தில் ஏகாதசி 24 முறை வருகிறது. அதாவது ஒவ்வொரு மாதத்திலும் இரண்டு ஏகாதாசிகள் வருகின்றன. அந்த ஏகாதசிகளில் விரதம் இருப்பது, பகவான் விஷ்ணுவை நினைத்து மேற்கொள்ளப்படும் உபவாசமாகக் கருதப்படும்.   ஏகாதசி என்றால் ஏக் + தசம் என்று பொருள் கொள்ள வேண்டும். அதாவது ஒன்று + பத்து என்ற பொருளில் ஏகாதசி குறிப்பிடப்படுகிறது. 11 நாட்களுக்கு ஒரு முறை ஏகாதசி வருவதை இது குறிக்கிறது. 24 ஏகாதசிகள் இருப்பினும், நான்கு ஏகாதசிகள் முக்கிய விரத நாட்ககளாக் கருதப்படுகின்றன. நிர்ஜலா ஏகாதசி – தண்ணீர் கூடப் பருகாமல் விரதம் இருத்தல் சஜாலா ஏகாதசி – தண்ணீர் - பழங்கள்,ஆகியவைகளை உட்கொண்டு விரதம் இருத்தல். ஃபராலி ஏகாதசி – தண்ணீர், ...

மங்களகரமாக பக்தி மகுடத்தைச் சூடும் மார்கழித் திங்கள்

Image
மார்கழி மாதம் பக்தி மாதம். எல்லா மாதங்களிலும் பக்தியோடு பகவானைத் துதிக்கலாம். ஆனால், மார்கழி மாத பக்தியோ மிகவும் சிறப்பானது. பகவான் ஸ்ரீ கிருஷ்ணன்  மாதங்களில் தனக்குப் பிடித்த மாதம் மார்கழி என்று பகவத் கீதையில் தெள்ளத் தெளிவாகச் சொல்லி இருக்கிறான். ஆகையால் மார்கழி கிருஷ்ணனின் மாதம் என்று சொல்லலாம். பகவத் கீதையில் சொல்லப்பட்டுள்ள பக்தியோகம் ஸ்லோகங்களை அந்த புனிதமான மார்கழியில் ஓதி ஸ்ரீ கிருஷ்ணனின் புகழ் பாடி ஸ்ரீ கிருஷ்ணனின் பாதம் மனத்தில் பதிய துதிப்போர்க்கு அனைத்து செளபாக்கியங்களும் கிட்டும். பகவத் கீதையில் பக்தி யோகம் 20 ஸ்லோகங்களைக் கொண்டு 12-வது அத்தியாயமாக மிளிர்கிறது. ஆன்மிகத்திற்கு பக்திதான் சிறந்த மார்க்கம் என்பது குருவிற்கெல்லாம் குருவாக இருக்கும் பகவான் கிருஷ்ணனின் அமிர்த்த வாக்கியமாகும். “நான்கு வகையான மனிதர்கள் என்னை வணங்குகிறார்கள்” என்று சொன்ன கிருஷ்ணன் அதை பகவத் கீதை பக்திமார்க்கத்தில் இப்படி விளக்குகிறான்: “ஆபத்தில் தத்தளிக்கும் மனிதன், அறிவைத் தேடி அலையும் மனிதன், செல்வத்தை அடைய முயலும் மனிதன், ஞான மார்க்கத்தை தேர்வு செய்த மனிதன் – என்ற நான்கு வகையான மன...