29 – 10 – 2023 - இன்றைய இனிய பொன் மொழி

தைரியம் என்பது கடைச் சரக்கல்ல. துட்டுக் கொடுத்து கடைகளில் பொட்டலமாக வங்குவதற்கு. அது நம் உடல், உள்ளம், அறிவு, ஆற்றல் என்ற பல பரிமாணங்களால் உருவான குணமாகும். சில ஜீவராசிகளுக்கு பகவானால் பிறக்கும் போதே அளிக்கப்பட்ட ஜீன்ஸ் சம்பந்தப்பட்ட சக்தியால் தைரியம் கூடப் பிறந்த ஜீவனாக அவைகளின் உடம்போடு ஒட்டி ஒரு பெரும் கேடயமாக அமைந்து வாழ்க்கையில் எதிர்கொள்ளும் பல அபாயங்களிலிருந்து காக்க உதவும. மற்றும் சில ஜீவராசிகளுக்கோ பயம் என்பது கூடப்பிறந்த அந்த ஜீவராசிகளின் உயிருடன் கலந்த ஒன்றாகவே இருக்கும். தைரியம் என்பது அதற்குக் கிடையாது. தினம் தினமும் செய்துப் பிழைக்கும் ஜீவனாகவே காலங்கழிக்கும் நிலையில் அவைகளின் வாழ்வு இருக்கும். மான் காட்டு விலங்குகளான சிங்கம், புலி, சிறுத்தை, ஓநாய் என்ற பலவற்றிலிருந்து தன்னைக் காக்க தினமும் போராட வேண்டிய நிலைதான் அதற்கு. அத்துடன் மனித வேடுவனின் அம்புக்கும் பயப்பட்டு வாழ வேண்டும். அதற்கு தைரியம் புகட்டுவது வியர்த்தம். மான் எதிர்கொள்ளும் ஆபத்தை உணர்ந்தவுடன், தன் கால்களிலின் பலத்தை நம்பி நாலு கால் பாய்ச்சலில் ஓடி தன்னைக் காத்துக் கொள்ள வேண்டியது தான் அதற்கு இருக்கும் ஒ...