தமிழகத்தின் தூய ஆட்சியின் விடி வெள்ளி அண்ணாமலை

 

தமிழகத்தின் தூய ஆட்சியின் விடி வெள்ளி அண்ணாமலை


https://enmannenmakkal.com/


இந்த வருடம் 14-ம் தேதி தமிழக பிஜேபி கட்சியின் தலைவர் அண்ணாமலையின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் 12 முக்கிய புள்ளிகளின் சொத்துப்பட்டியலை வெளியிட்டு தமிழகத்தில் தூய – தெய்வீக – ஆன்மீக – தமிழ் மணம் கமழும் பிஜேபியின் ஆட்சிக்கு அடிக்கல் நாட்டி உள்ளார். அவரது இலக்கு – 2024-ல் லோக் சபா தேர்தலுக்கு அதிக பிஜேபி எம்பிக்களை டெல்லிக்கு அனுப்புவது, 2026-ல் திமுக அரசை வீழ்த்தி பிஜேபி தனிபெரும்பான்மையுடன் ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பது என்பதாகும். 

ஒரு லோக் சபா சீட்டு கூட தமிழகத்தில் இல்லாத பிஜேபி – வெறும் 4 எம்.எல்.ஏக்கள் சீட்டுக்களே சென்ற தேர்தலில் ஜெயித்த பிஜேபி கட்சியை அசுர வளர்ச்சி அடையச்செய்யும் – இலக்கு/இலட்சியத்தோடு அண்ணாமலை அரசியல் களத்தில் இறங்கி உள்ளார். 

அண்ணாமலை அரசியல் களத்தில் குதித்த பிறகு இப்போது ஆட்சி பீடத்தில் அமர்ந்திருக்கும் ஸ்டாலின் தலைமையில் உள்ள திமுக ஆட்சியின் அவலங்களை ஆணித்தரமாக பொது வெளியில், மீடியாக்களில், பல பேட்டிகளில் மிகவும் விரிவாக கடந்த பல மாதங்களாகச் சொல்லி வருகிறார். 

திமுக ஊழல் மலிந்த கட்சி – அதன் தலைவர்கள் தமிழையும் வளர்க்கவில்லை. தமிழர்களையும் வாழவிடவில்லை. தங்களது பொருளாதார நிலையை ஊழல் செய்து பல கோடி சொத்துக்களுக்கு அதிபதிகளாக ஆகி உள்ளார்கள் என்பதை ஆதாரபூர்வமாக பல முறை சொல்லி இருக்கிறார். அதன் உச்ச கட்டமாக இப்போது முதல் பட்டியல் – DMK FILES – என்ற தலைப்பில் தமிழ்ப் புத்தாண்டான சோபகிருது வருடம் 14-ம் நாள் பல மீடியாக்கள் முன்னிலையில் வெளியிடப்பட்டுள்ளது. அதன் முழு விபரமும் - https://enmannenmakkal.com/ - என்ற இணைய தளத்திலும் உள்ளது. இது முதல் பட்டியல் என்று அண்ணாமலை கூறியதுடன், திமுகவினரின் பினாமி நிலங்கள், உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்துகள், கறுப்பு பணம், கணக்கில் வராத நகை, ஆடம்பரக் கார்கள் மற்றும் வாட்சுகள் போன்ற விவரங்களை அடுத்தகட்டமாக DMK Files -ல் பாகம் 2 விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.











134317 – கோடிகள் சொத்துப் பட்டியல் - 134 ஆயிரம் கோடி சொத்துப் பட்டியல் – அதாவது 134க்குப் பின் 10 பூஜ்யங்கள் கொண்ட எண் – இது வெறும் 12 திராவிடக் கழகப் பெரும் புள்ளிகள் பிளஸ் இரண்டு ஸ்தாபனங்கள் ஆகியவைகள் குறுகிய காலத்தில் குவித்த அவர்களின் சொத்துப் பட்டியல் இங்கு இடது பக்கத்தில் உள்ளது.. 

இந்த அண்ணாமலையின் அதிரடிச் செயல்களுக்கு மூலகாரணம் திமுக டாஸ்மாக் துறை அமைச்சர் வி. செந்தில் பாலாஜி அண்ணாமலை  கட்டி இருக்கும் ரஃபேல் வாட்ச் லஞ்சமாகப் பெற்றது என்று குற்றம் சுமத்த அண்ணாமலை அந்த வாட்ச் குறித்த விவரங்களுடன், திமுக ஆட்சியாளர்களின் சொத்துப் பட்டியல் மற்ற பல ஊழல் விவரங்களையும் வெளியிடுவதாகச் சொன்னதை இப்போது செய்து விட்டார்.

 

.




பின்னர் தான் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் குறித்த விவரங்களைக் கூறினார் அண்ணாமலை. 

இந்த வாட்சின் விலை 3 லட்ச ரூபாய். டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் பெல் அண்ட் ரோஸ் உடன் இணைந்து வாட்ச்சை தயாரித்துள்ளது. 

உலகில் மொத்தமாக 500 வாட்ச்கள் தான் இருக்கின்றன. 147வது வாட்சை நான் வாங்கியுள்ளேன்” என்று அண்ணாமலை தன்னிலை விளக்கம் அளித்துள்ளார். இதற்கான ரசீது ஆகியவைகளையும் தெரியப்படுத்தி உள்ளார். .

இந்தியாவில் இரண்டு வாட்ச்கள் மட்டும் தான் விற்கப்பட்டுள்ளன. ஒரு வாட்ச் மும்பையில் உள்ள எம்.என்.சி நிறுவனத்தில் வேலை பார்க்கும் சீனியர் அதிகாரி ஒருவர் கட்டியுள்ளார். மற்றொரு வாட்சை கோவையை சேர்ந்த சேரலாதன் என்ற நண்பர் வாங்கினார். அவரிடமிருந்த அந்த வாட்சை ரூ. 3 லட்சத்திற்கு வாங்கியதாக அண்ணாமலை தெரிவித்தார். 

இந்த வாட்சை நீங்கள் சாதாரணமாகக் கட்ட முடியாது. ஒரு செங்கல் போல இந்த வாட்ச் கனமாக இருக்கும். நான் இந்த வாட்சை 2021ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வாங்கினேன். இந்த வாட்சை யாரும் இனிமேல் வாங்க முடியாது. ஏனென்றால் இந்த வாட்ச் மார்க்கெட்டில் இல்லை” என தெரிவித்துள்ளார்.


அதே நேரத்தில் மு.க.ஸ்டாலின், அவரது மகன் அமைச்சர் உதய நிதி ஸ்டாலின் ஆகியவர்களின் விலையுயர்ந்த வாட்ச் – கார்கள் பற்றிய விவரங்கள் வெளியிடப்பட்டன.

 அதன் பட்டியல்: 

மு.க.ஸ்டாலின் கட்டியிருக்கும் வாட்ச் ரிச்சர்ட் மில்லி (Richard Mille) நிறுவனத்தின் வாட்ச். இதன் ஆரம்ப விலை 1.3 கோடி ரூபாய். அதிகபட்சமாக 2.25 கோடி ரூபாய் வரை இருக்கிறது.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பயன்படுத்தும் வாட்ச் Panerai 8.78 லட்ச ரூபாய் மதிப்பிலானது.  மேலும் உதயநிதி ஸ்டாலின் 1.64 கோடி ரூபாய் முதல் 1.84 கோடி மதிப்பிலான Range Rover Sports கார், 2.26 கோடி ரூபாய் மதிப்பிலான Range Rover Vogue கார், 82.54 லட்ச ரூபாய் மதிப்பிலான Volvo XI.60 கார், 80 லட்ச ரூபாய் மதிப்பிலான Hummer H-3 கார் அவர் பயன்பாட்டில் உள்ளது. 

மேலும், திமுகவினரின் பினாமி நிலங்கள், உறவினர்கள் பெயர்களில் உள்ள சொத்துகள், கறுப்பு பணம், கணக்கில் வராத நகை, ஆடம்பரக் கார்கள் மற்றும் வாட்சுகள் போன்ற விவரங்களை அடுத்தகட்டமாக வெளியிடுவதாகவும் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

நான் வெளியிட்ட பட்டியலில் இருக்கும் அனைத்து சொத்துகளும்,திமுகவினரின் நேரடி குடும்பத் தொடர்பில் இருக்கக் கூடியவர்களின் சொத்துகள். பினாமி மற்றும் உறவினர்களின் பெயரில் இருக்கும் சொத்துகள் இதில் இடம் பெறவில்லை. 

புதிதாக திமுகவில் சேர்ந்திருக்கும் சிலரின் கறுப்பு பணமும், பினாமி சொத்துகளுமே ரூ.20 ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். அதுகுறித்த விவரங்களை இரண்டாம் கட்டமாக நான் வெளியிடுவேன்என்றும் தெரிவித்துள்ளார் அண்ணாமலை. 

உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயன்ட் நிறுவனத்தை தொடங்கியபோது, அவருக்கு எந்தவித தொழிலும், சொத்தும் கிடையாது. தற்போது ரெட் ஜெயன்ட் நிறுவனத்தின் மதிப்பு ரூ.2,010 கோடி. 

முதல்வரின் மருமகன் சபரீசன், லண்டனில் உள்ள குற்ற வழக்குகளில் சிக்கிய நிறுவனங்களின் பங்குதாரராக உள்ளார். உதயநிதி ஸ்டாலினும், அன்பில் மகேஸ் பொய்யாமொழியும் இயக்குநராக இருந்து ராஜினாமா செய்த நிறுவனத்துக்கு, தமிழகத்தில் ரூ.1,000 கோடி முதலீடு செய்யும் வகையில், முதல்வர் ஸ்டாலின் துபாய் சென்றிருந்தபோது ஒப்பந்தந்தில் கையெழுத்திட்டுள்ளார்.

அண்ணாமலையின் முழக்கம்: 

திமுக மட்டுமல்ல, தமிழகத்தில் உள்ள வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்களின் சொத்து விவரங்களையும் 2024-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கு முன்பு நான் வெளியிடுவேன். 

துணை முதல் அமைச்சராக ஸ்டாலின் தமது தந்தை கருணாநிதி முதல்வராக பதவி வகுத்த கால கட்டத்தில் சுமார் 13 வருடங்களுக்கு முன் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் முதல் கட்ட்த்தில் அந்நிய கம்பனி ஒப்பந்தம் கிடைக்க ஸ்டாலினுக்கு லஞ்சமாக அந்த கம்பனி ரூபாய் 200 கோடி இரண்டு ஷெல் கம்பனிகள் மூலம் கொடுக்கப்பட்டது. ஒப்பந்தம் கொடுக்கப்பட்ட அந்த அந்நிய கம்பனி பல நாடுகளில் முறைகேடாக லஞ்சம் கொடுத்து ஒப்பந்தங்கள் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு டாலர் 772 மில்லியன் அளவில் தண்டனையை யு.எஸ்.கோர்ட் விதித்துள்ளது. 

இந்த சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் லஞ்சம் பெற்றது தொடர்பான கூடுதல் ஆதாரங்களுடன் 20-ம் தேதி டெல்லி சென்று சிபிஐயில் புகார் அளிக்க இருக்கிறேன். என் மீது திமுகவினர் வழக்கு தொடர்ந்தால் தொடரட்டும். நீதிமன்றமும், மக்கள் மன்றமும் இருக்கிறது. அதனால் எனக்கு பயம் இல்லை.   நான் கூறியிருக்கும் எந்த குற்றச்சாட்டையும் திமுகவினர் மறுக்கவில்லை. நான் வைத்த குற்றச்சாட்டு அனைத்தும் ஆதாரத்துடன் முன்வைக்கப்பட்டது. 

ஊழலுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும். இன்னும் பல ஆதாரங்களை நான் வெளியிடுவேன். நீதிமன்றத்தில் இன்னும் அதிகப்படியான ஆதாரங்களை அளிக்கத்தான் போகிறோம். 

ஜூன் 4-லிருந்து தமிழகம் முழுவதும் ‘என் மண்... என் மக்கள்’ என்ற, ஊழலுக்கு எதிரான எனது நடைபயணம் தொடங்கும்.

என் மண் என் மக்கள்...’ இணையதளம் தொடங்கி 24 மணி நேரத்தில் ஊழலுக்கு எதிராக கட்சி சாராத 31 ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர். இன்னும் 3 நாட்களில் ஒரு லட்சம் பேர் பதிவு செய்துவிடுவார்கள்என்று அண்ணாமலை கூறினார். 

``பா.ஜ.க தலைவர் அண்ணாமலை சாட்டிய குற்றச்சாட்டுக்கு மன்னிப்புக் கேட்டு, 48 மணி நேரத்தில் ரூ.500 கோடி இழப்பீடாகத் தர வேண்டும்" என தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நோட்டீஸ் அனுப்பியிருந்தார். 

இதற்கு பதிலளிக்கும்விதமாக பாஜக தலைவர் அண்ணாமலை: 

"இதற்கு முன்னர் BGR நிறுவனத்துக்கு முறைகேடாக தி.மு.க வழங்கிய ஒப்பந்தத்தை வெளிக்கொண்டு வந்ததற்கு 500 கோடி ரூபாய் இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினின் துபாய் பயணம் குறித்து கேள்வி எழுப்பியதற்காக ரூ.100 கோடி இழப்பீடு கோரி சட்ட அறிக்கை அனுப்பினார்கள்.

அதைத் தொடர்ந்து மீண்டும் தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ரூ.500 கோடி இழப்பீடு கேட்டு சட்ட அறிக்கை அனுப்பியிருக்கிறார். 

கோடிகளில் சொத்துகளைக் குவித்துவைத்திருக்கும் தி.மு.க-வினர் என்னிடம் மேலும் ரூ.500 கோடி கேட்கிறார் தி.மு.க-வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி. 

ஆர்.எஸ். பாரதி நேரிடையாக அண்ணாமலை குறித்துக் கூறிய  குற்றச் சாட்டுகளுக்கு அண்ணாமலை பத்திரிகையாளர்களைச் சந்தித்து “தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஆருத்ரா நிதி நிறுவனத்திடம் 84 கோடி ரூபாய் நான் பெற்றுக்கொண்டதாக ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டை சுமத்தியிருக்கிறார். என்மீதும், பா.ஜக-வின் மீதும் ஆதாரமற்ற குற்றச்சாட்டை பொதுவெளியில் வைத்ததற்கு, ரூ.500 கோடியே 1 ரூபாய் இழப்பீடாகக் கோருகிறேன். இதை நான் PM Cares நிதிக்குச் செலுத்த விரும்புகிறேன்” என்று பதிலடி கொடுத்துள்ளார். 

அண்ணாமலையிடம் திமுக கேட்ட இழப்பீடு தொகையான 500 கோடிக்குப் பதில் அண்ணாமலை 500 கோடியே 1 ரூபாய் கேட்டு அதாவது ஆர். எஸ். பாரதி கேட்ட 500 கோடியை விட ஒரு ரூபாய் அதிகம் கேட்டு அவர்களை கேலிசெய்துள்ளார் என்பதை அறியவும்.  

ஊழல் குற்றச் சாட்டுகள் வார்த்தைப் போர்கள் என்ற நிலையிலிருந்து, சிபிஐ கோர்ட் ஆகிய வளாகங்களில் நடக்கும் நிலையை அண்ணாமலை தனி ஒரு நபராக பிஜேபின் தலைவராக ஏற்படுத்தியதை பாராட்டியே ஆகவேண்டும். 

இவ்வளவு துணிவுள்ள ஒரு தலைவரை இது வரை தமிழக அரசியலில் கண்டதில்லை. அவரது லட்சியமான தூய தமிழக ஆட்சிமலர இறைவன் அண்ணாமலையார் அண்ணாமலைக்கு துணை நிற்க வேண்டும். 

அண்ணாமலையின் துணிச்சலில் வீரம் இருந்தாலும் வேகம் அதிகம் இருப்பதால் விவேகம் இல்லையோ என்ற கருத்து வாய்மைக்கு இருக்கிறது. அத்துடன் அண்ணாமலை ஒரே சமயத்தில் திமுக அதிமுக என்ற இரு பெரும் கட்சிகளையும் ஒரே மூச்சில் சாடுகிறார். அந்தக் கட்சிகள் இரண்டும் மாறிமாறி தமிழகத்தில் ஆட்சி செய்த கட்சிகள். இரண்டும் ஊழலில் உழன்று ஆனால் மாறி மாறி ஓட்டு வாங்கி ஆட்சி பீடத்தில் அமர்ந்த கட்சிகள். அந்த இரண்டு கட்சிகளுக்கு கணிசமான அசைக்க முடியாத ஓட்டு வங்கிகள் இருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். 

அதே சமயத்தில் பயத்தில் களம் இறங்குவது கொண்ட லட்சியத்திற்கு வலு சேர்க்காதுஇமாலய அளவு கடினமான லட்சியமான பிஜேபியின் ஆட்சியை தமிழகத்தில் அமைக்கும் இலட்சியத்தையும், இலக்கையும் கொண்டுள்ள இப்போதைய அண்ணாமலையின் தலைமை எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகள் அதிகம் தான். மேலும் அவரே ஊழலை பகிரங்கமாக பயமில்லாமல் பல விதமான ஆதரங்களுடன் தனி மனிதனாக அரசியல் களத்தில் இதுவரை முடிசூடாமன்னாக வலம் வருவதைப் பார்க்கும் போது அவரின் பாதை கரடு முரடானது என்றாலும், அதை வெற்றிகரமாக கடந்து இலக்கை எட்டுவார் என்ற நம்பிக்கை ஏற்படுகிறது. 

அண்ணாமலைக்கு தமிழக மக்களிடம் ஆதரவு மிகவும் அதிக அளவில் பெருகிவருவதையும் காணமுடிகிறது. அதற்காக அண்ணாமலையின் உழைப்பு மோடி உழைப்புக்கு ஈடாக உள்ளது. 

தமிழக பிஜேபியில் அண்ணாமலைக்கு எதிர்ப்பும் கிளம்பி சிலர் வெளியில் வந்து அண்ணாமலை குறித்து வசை பாடினர். பிஜேபி மேலிடம் அண்ணாமலையை நீக்கும் என்று பலரும் கனவு கண்டனர். ஆனால் அது வெறும் பகல் கனவாகியது. நட்டா மோடி அமித்ஷா ஆகியவர்களின் முழு ஆதரவையும் அன்பையும் பெற்றுள்ளார் அண்ணாமலை என்பது இப்போது தெளிவாகி விட்டது. 

அண்ணாமலையின் தலைமை 2026 ஆண்டு வரை நீடிக்கும் என்று நம்பலாம். இரண்டு பெரிய ஜாம்பவான் கட்சிகளான திமுக அதிமுக ஆகியவைகளை எதிர்கொள்ள புதிய உயிரோட்டமான உரமான தீரமான தீர்க்கமான லட்சியமும், தைரியமும் கொண்ட தலைவராக அண்ணாமலை இருப்பதால் அவர் சொல் செயல் திட்டம் ஆகியவைகள் மேலிடத்தின் ஆதரவை நிச்சயம் பெற்றுத் தரும். 

மோடியின் தலைமை இருக்கும் வரை நான் பிஜேபியில் தொடர்வேன் என்றும், லோக் சபா தேர்தல் தமிழ் நாட்டில் மோடியின் தலைமையில் தான் நடைபெறும் என்றும் சொல்வதிலிருந்து தமிழ் நாட்டில் லோக் சபாவுக்கு பல எம்.பி.க்களைச் ஜெயிக்க வைக்க வேண்டும் என்ற லட்சியத் தெளிவை அண்ணாமலை தமிழக மக்களிடம் பரப்புவது ஒரு நல்ல முயற்சி. அதில் ஒரளவு வெற்றி பெற்றாலே அடுத்து வருகிற சட்டமன்ற தேர்தலில் பிஜேபி தனித்தோ அதன் தலைமையில் கூட்டணி அமைத்தோ போட்டி இட்டு தமிழகத்திலும் முதன் முறையாக தாமரை ஆட்சி கட்டிலின் அமரும் வாய்ப்புக் கிட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 

அதன் ஆதார சுருதியாகத்தான் அண்ணாமலையின் மே மாதம் 4-ம் தேதியிலிருந்து தொடங்க இருக்கும் என் மண் என் மக்கள் நடைப்பயணமாகும். அண்ணாமலை தமிழக பிஜேபி மாநிலத் தலைவராக வந்ததிலிருந்து தமிழக மக்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறார். காசி தமிழ் சங்கமம் மற்றும் வுராஸ்ட்ரா தமிழ் சங்கமம் ஆகியவைகள் அண்ணாமலைக்கும் பிஜேபிக்கு ஆதரவு அளிக்கும் செயல்கள். இவைகள் ஓட்டுக்களாக பிஜேபிக்குக் கிடைக்கும் என்று நம்பலாம்மேலும் முதன் முறையாக முஸ்லீம்களும், கிருஸ்துவர்களும் பிஜேபியை நம்மாவிடினும், அண்ணாமலையை நம்பும் நிலையும் தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டு இருப்பதைக் காண முடிகிறது. 

இந்த சமயத்தில் அண்ணாமலை தமது மாதச் செலவுகளைப் பற்றி இப்படிச் சொல்லி இருக்கிறார்: 

மாநிலத் தலைவராக எனக்கு மாதத்துக்கு ரூ.8 லட்சம் செலவாகிறது.

நண்பர்கள், கட்சியின் உதவியால்தான் இவற்றைச் சமாளிக்க முடிகிறது.

காருக்கு டீசல், உதவியாளர்கள் ஊதியம், வீட்டு வாடகைஎன அனைத்தையும் மற்றவர்கள்தான் கொடுக்கிறார்கள்.

தனி நபரின் தயவில் அதுவும் மாதா மாதம் இருப்பது யாருக்கும் உசிதம் கிடையாது. அதுவும் ஒரு பெரும் கட்சியின் தலைவர் இந்த மாதிரி பணத்திற்கு மதா மாதம் மற்றவர்களைச் சார்ந்து இருப்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று தான் வாய்மை கருகிறது.

பிஜேபி கட்சியே அண்ணாமலையின் முழுச் செலவுகளையும் ஏன் ஏற்க வில்லை என்பது ஒரு மிகவும் கசப்பான ஒன்றாகவே மனத்தில் படுகிறது. மனச் சஞ்சலமும் இதனால் ஏற்படுகிறது.

கட்சி மேலிடம் இந்த அண்ணாமலையின் நிலையைப் புரிந்து முழு பண ஆதரவு

அளிக்க வேண்டியது அவசியமாகிறது


















திருவண்ணாமலையில் ஆட்சி செய்யும் அண்ணாமலையார் தமிழகத்தில் தாமரையை மலரச் செய்து தூய்மையான ஆட்சியைக் கொண்டு வர இரவு பகலாக உழைக்கும் உத்தமர்இளைஞர்பக்திமான் - அறிவாளிதமிழக மாநிலத் தலைவர்அண்ணாமலைக்கு அவரது லட்சியம் ஈடேர அருளவேண்டுகிறோம்

வாழ்க அண்ணாமலைவீழ்க ஊழல் ஆட்சி மலர்க தாமரை ஆட்சி

 


Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017