தமிழ்ப் புத்தாண்டு சோபகிருதுவை வரவேற்போம் வாரீர்

 



சோபகிருது 36-வது வருட வரிசையில் வருகிறது. சோபகிருது என்ற சம்ஸ்கிருத பதத்திற்கு மங்கலம் என்று பொருள்

 

சோபகிருது வருட பலன்

சோப கிருதுதன்னிற் றெல்லுலகெல் லாஞ்செழிக்குங்

கோப மகன்று குணம்பெருகுஞ்- சோபனங்கள்

உண்டாகு மாரி பொழியாமற் பெய்யுமெல்லாம்

உண்டாகு மென்றே யுரை.

பொழிப்புரை

சோபகிருது வருடத்தில் உலகின் பழமையான நகரங்களெல்லாம் செழிப்பாகும்.

கோபம் அகன்று குணம் பெருகும். நற்பலன்கள் மேலோங்கும். சுப காரியங்கள் நடக்கும்.

மழை காலம் தவறாமல் பெய்யும்.

இத்தகைய பல மிகப் பெரியளவில் நன்மைகள் நிகழும் என்று உரைப்போம்.

ஆகையால் இந் வருட புத்தாண்டு 12 மாதங்கள் முழுமையும் மிகப் பெரியளவில் நன்மைகளும், சுப நிகழ்வுகளும் நடக்கும்.

இந்தாண்டு மொத்தம் 4 கிரகணங்கள் நடக்க உள்ளன. அதில் 3 சூரிய கிரகணம், ஒரு சந்திர கிரகணம் வர உள்ளன. இந்த மூன்று சூரிய கிரகணமும் இந்தியாவில் தெரிய வாய்ப்பில்லை. சந்திர கிரகணம் மட்டும் இந்தியாவில் தெரியும்.வாய்மை அன்பர்கள் இல்லங்களிலும், உள்ளங்களிலும் மங்கல மணம் பரவட்டும்.

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017