அண்ணாமலையின் அதிரடி அரசியல் அரங்கம்



பாரதிய ஜனதா கட்சியை ஆட்சி பீடத்தில் அமர்த்தத் துடிக்கும் 38 வயது கொங்கு மண்டல கவுண்டர் இன வாலிபர் தமது மேலான .பி.எஸ். பதவியையும் துறந்து மோடியின் அரசியலால் ஈர்க்கப்பட்டு, பிஜேபியின் தேசிய பொதுச் செயலாளரான பி.எல். சந்தோஷின் ஏற்பாட்டில்மோடி/அமித் ஷா ஆகியவர்களின் முழு ஆதரவுடன் அண்ணாமலை குப்புசாமி ஜூலை 2021 –லிருந்து பிஜேபியின் தமிழ் நாட்டின் மாநிலத் தலைவரானார். மத்திய மந்திரியாக முருகன் நியமிக்கப்பட அந்தப் பதவி அண்ணாமலைக்கு அளிக்கப்பட்டது.   

ஜனவரி 28, 2021-ல் அண்ணாமலை பி.எல். சந்தோஷிற்கு தான் ஆங்கிலத்தில் காக்கிக்கு அப்பால் அடியெடுத்து வைக்கிறேன்என்ற தலைப்பில் எழுதிய புத்தகத்தை அன்பளிப்பாக அளிக்கும் புகைப் படம் தான் மேலே பிரசுரமாகி உள்ளது.

காக்கிக்கு அப்பால் அடியெடுத்து வைக்கும்எண்ணம் மோடி இந்திய அரசியல் களத்தில் இறங்கி. பாரத தேசத்தை ஒரு வளர்ச்சி பெற்ற நாடாக உருவாக்க அயராது பாடு பட்டு உழைக்கும் அவரை தேச பக்தியில்லாதசுயநலவாதிகள் இந்தியாவிலும்வெளிநாட்டிலும் அவதூறு பரப்புவதைக் கண்டார் அண்ணாமலை. மேலும் தமிழ் நாட்டில் திராவிடக் கட்சிகளால் தேசியம், ஆன்மீகம், பக்தி என்ற நல் மார்க்கம் சீரழிந்து தமிழ் நாட்டு மக்கள் திக்குத் திசை தெரியாமல் அவதிப்படுவதையும் கண்கூடாகக் கண்டார். மேலும் ஒரு சீரான தொலை நோக்குப் பார்வையுடனான வளர்ச்சியை இந்த இரண்டு திராவிடக் கட்சிகள் தமிழ் நாட்டில் கொண்டு வரவில்லை.

இலவசம், அரசின் அபிரிமித டாஸ்மாக் வியாபாரம், நேர்மை இன்மை, எங்கும் ஊழல்எதிலும் ஊழல்ஊழலோ ஊழல்என்ற அளவில் பெரிய இரு திராவிட அரசியல் கட்சிகள்என்ற அளவில் இதைச் சரிசெய்ய ஒரு நேர்மையான தூய்மையான சேவை செய்யும் மனோபாவம் கொண்ட ஒரு நம்பத்தகுந்த கட்சி தற்போதைய நிலையில் பிஜேபி தான்அந்தக் கட்சியை நன்கு பலம் பொருந்திய கட்சியாக உருவாக்கும் நோக்குடன் அதில் தன்னை இணைத்துக் கொண்டார்.

அண்ணாமலை பிஜேபியில் ஏதோ பதவி ஆசையால் தன்னை இணைத்துக்கொள்ளவில்லை. தமிழ்நாட்டு மக்கள் ஒரு பெரும் இருளான திராவிட மாயையில் மூழ்கி அதிலிருந்து மீளமுடியாமல்மீண்டும் திராவிட விடியல் அரசின் மாயத் தோற்றத்தில் தான் காலம் கழிக்க வேண்டும், அது தான் எங்களது தலையெழுத்து என்று அவலநிலைக்குத்தள்ளப்பட்டார்கள். அந்த நிலைக்கு ஒரு முடிவு கட்டத்தான் பிஜேபி மேலிடம் மிகுந்த யோசனைக்குப் பிறகு அண்ணாமலையை தமிழக பிஜேபி தலைவராக கட்சியில் அவர் சேர்ந்த உடனேயே அளித்தது.   அந்த பிஜேபி மேலிடத்தின் முடிவு சரியான ஒன்று தான் என்று கடந்த இரண்டு ஆண்டுகளில் அண்ணாமலையின் அசாதாரண அதிரடி அரசியல் நிரூபித்து விட்டது.

பாரதியின் தாயின் மணிக்கொடி பாட்டில் வரும் வரிகளைச் சற்று நினைவு கூறுவோம். அந்தப் பாட்டு இதோ:

கம்பத்தின் கீழ்நிற்றல் காணீர்எங்கும்

       காணரும் வீரர் பெருந்திருக்கூட்டம்

நம்பற்குரியர் அவ்வீரர் தங்கள்

       நல்லுயிர் ஈந்தும் கொடியினைக் காப்பர்

ஒரு கட்சி நேர்மையாக வெற்றி பெற வேண்டும் என்றால் பாரதி மேற் சொன்ன பாட்டில் குறிப்பிட்டிருப்பது போல், கட்சித் தொண்டர்கள் வீர்ர்களாகவும், நம்பற்குரியவர்ளாகவும், வீர்ர்களாகவும், தங்கள் நல்லுயிர் ஈந்து கட்சியை காப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆகையால் அண்ணாமலை முதலில் புதிய ரத்தத்தை கட்சியில் பாய்ச்சினார். இருக்கும் சில கோழைகளையும், நம்பத்தகாதவர்களையும், பகைவர்களிடம் பாசம் காட்டும் பச்சோந்திகளையும் இனம் கண்டு – ‘மாறுங்கள்இல்லாவிடில் மாற்று அணிக்குத் தாவுங்கள்என்று துணிந்து எடுத்த அண்ணாமலையின் நடவடிக்கை தமிழ் நாட்டு அரசியல் கட்சியினர்களுக்கு புதிது.

வேகம்விவேகம்வீரம்இவைகள் அரசியல் தலைவருக்கு அவசியம். அது பரிபூர்ணமாக அண்ணாமலையிடம் இருக்கிறது.

இது பிஜேபியில் உள்ள பழமையான தலைவர்கள், புதிய பதவி ஆசை புகழ் ஆசை கொண்டவர்கள் மத்தியில் அண்ணாமலைமேல் ஒரு வெறுப்பு உண்டாவதும் அவைகளை மேலிடத்தில் புகாராக அளிப்பதும் ஆச்சரியமில்லை. ஆனால் மேலிடம் அண்ணாமலைக்கு முழு அதிகாரமும் அளித்து, இந்த ஆசாமிகள் பலர் வெளியே வந்து விட்டனர். இது மேலோட்டமாகப் பார்க்கும் போது கட்சி பலவீனமாகி விடும் என்று நினைப்பது ஒரு நேர்மையான தலைவனுக்கு அழகல்ல.

வெளியே செல்பவர்கள் செல்லட்டும். பலர் உள்ளே வர இருக்கிறார்கள். கட்சிக் கொள்கைப் பிடிப்புள்ளவர்கள் தான் இப்போது வேண்டும்என்று அண்ணாமலை வெளிப்படையாக சொல்லி விட்டார்.

சமீபத்தில் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி. நட்டா தமிழகம் முழுவதும் தமிழக பாஜக 10 புதிய மாவட்ட அலுவலகங்கள் திறப்பு விழாவில் தலைமை தாங்கி திறந்து வைத்துள்ளார். இது ஒரு சாதாரண விஷயமில்லை. அந்த மாவட்டங்களில் பல புதிய ஆர்வமுள்ளவர்கள் வர இருக்கிறார்கள். பூத் அளவில் பாஜக-வை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் அண்ணாமலை ஆர்வம் காட்டுகிறார்.

அண்ணாமலையின் இலக்கு தமிழ் நாட்டு பிஜேபி கட்சி 2024 நாடாளு மன்றத் தேர்தலில் இரண்டு இலக்க லோக் சபா சீட்டுக்கள் வெற்றி பெற வேண்டும். அடுத்து வருகிற 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் தனித்தோகூட்டணியோடோ ஆட்சிக் கட்டிலில் அமர வேண்டும்.

அண்ணாமலை பிஜேபியின் தேர்தல் வியூகம் பற்றிக் குறிப்பிடுகையில் சொன்னார்: இனி தமிழக பிஜேபி கூட்டணிக்காக ஏங்காது. தனித்துப் போட்டி இடவும் தயங்காது. ஆனால் அனேகமாக வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பிஜேபி-அதிமுக கூட்டணி இருக்கும் என்று தான் படுகிறது. அண்ணாமலையின் இலக்கு திமுகவை 2024 மக்களவைத் தேர்தலில் அதிக இடங்களில் தோற்கடிப்பது – 2026 சட்ட மன்றத் தேர்தலில் திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவது என்பது தான். அண்ணாமலையின் தமிழ் நாட்டு அரசியல் களத்தில் கூட்டணிதான் பிஜேபியின் லட்சியம் என்ற அரசியல் ஜுரம் விடுபட்டு, கூட்டணி இல்லாவிடினும் தனித்து தேர்தல் களம் காண்போம்வெற்றி பெறுவோம்என்ற தீர்க்கமான தொலை நோக்குப் பார்வையால் தமிழக அரசியலில் ஒரு தூய்மை வெளிச்சம் படர வழிபிறக்கும்.

முந்தைய பிஜேபிகூட்டணி அரசியல் தான் நமக்கு வேண்டும். தனித்துப் போட்டியால் வெற்றி பெற முடியாதுஎன்ற இந்தகாங்கிரஸ்மனோநிலை ஒரு பெரிய அகில இந்திய பிஜேபி கட்சிக்கு இனியும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பது தான் அண்ணாமலையின் கணிப்பு.

இந்த இலக்கு அசாதாரணமான ஒன்று தான். ஆகையால் அந்த லட்சியத்தை அடைய அசாதாரணமான அதிரடி அரசியல் தான் வேண்டும்.

அண்ணாமலையின் ஆன்மீகப் பேச்சு, கல்விக் கூடங்களில் மாணவர்களிடம் பேச்சு, இலக்கியப் பேச்சு, பொருளாதார மேதைகளின் கூடங்களில் பேச்சு ஆகியவைகளைக் கேட்கும் போது அவரது பார்வையில் கருத்தில் நோக்கில் ஒரு தெளிவு இருப்பதைக் காண முடிகிறது. ஆழ்ந்த படிப்பு, ஆழ்ந்த சிந்தனை, தெளிவான கண்ணோட்டம் - ஆகிய திறமைகளை அண்ணாமலையிடம் நாம் காண்கிறோம். அண்ணாமலை ஊடகங்களை அதிரவைக்கும் காட்சி தமிழக மக்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது. ‘அண்ணாமலை மடியில் கனமில்லை. ஆகையால் பயமில்லை. மேலும் அண்ணமலை ஒரு நம்மத் தகுந்த செயல் வீரர்என்ற கருத்து பரவலாக தமிழக மக்களிடம் தென்படுகிறது. அவைகள் ஓட்டுக்களாக மாற வேண்டும்.

அண்ணாமலை 38 வயதே ஆன ஒரு இளைஞர். அவர் நிச்சயம் சாதித்துக் காட்டுவார். அண்ணாமலை ஜெயித்தால் அது தமிழக மக்களுக்கு ஒரு மஹத்தான விடிவெள்ளியாகும்.

ஏப்ரல் 14-ல் அண்ணாமலை வெளியிடப்போகும் ஊழல் அறிக்கை தமிழக மக்களை விழிப்படைய வைக்க வேண்டும்.

அண்ணாமலையின் நடைப் பயணம்அதுவும் தமிழ் நாட்டின் 234 மொத்த அசம்பளி தொகுதிகளிலும் பயணம்ஏப்ரலில் தொடங்க இருக்கிறது. அவரது பயணத்தில் சுமார் 600-க்கும் மேற்பட்டோர் முதலிலிருந்து இறுதிவரை அண்ணாமலையுடன் செல்வதாக இருக்கிறார்கள்.

மேலும் பாரதிய ஜனதா கட்சியின் மத்திய மந்திரிகள், மாநில முதல்வர்கள், அனைத்து எம்.பி. - எம்.எல்..க்கள், கட்சி நிர்வாகிகள் என்று இது வரலாறு காணாத ஒரு நிகழ்வாக நடத்த முடிவாகி உள்ளது.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் தொடங்கி சென்னையில் முடிவாக உள்ளது. இது பல மாதங்கள் நடக்க உள்ளது. மதுரையில் அமித் ஷா அவர்களும், மோடி யாத்திரை பூர்த்தியாகும் சென்னையிலும் பங்கேற்பதாக முடிவாகி உள்ளது. தமிழ் நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் மோடி அரசின் திட்டங்களைக் குறித்து விளக்கும் நிகழ்ச்சியும் அண்ணாமலையின் பாத யாத்திரையில் இருக்கும். அத்துடன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஊழல், திராவிட மாடல் என்ற ஸ்டாலின் அரசின் மக்களை ஏமாற்றும் சதியும் அந்த பாதயாத்திரையின் முக்கிய அம்சமான பிராசார உத்தியாக இருக்கும்


இந்த நேரத்தில் ஒரு சம்பவத்தை நினைவு கூறவேண்டும். சமீபத்தில் மோடி அவர்கள் திண்டுக்கல் காந்திகிராமத்தில் அமைந்துள்ள காந்தி கிராமிய பல்கலைக் கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிறகு, தரை மார்க்கமாக காரில் மதுரை விமான நிலையம் செல்லும் போது அண்ணாமலையையும் உடன் அழைத்து சுமார் ஒரு மணி நேரம் தமிழக அரசியல் நிலையைப் பற்றி அண்ணாமலையிடம் நேரடியாகவே கேட்டுத் தெரிந்து கொண்டார். பொதுவாக பாரதப் பிரதமருடன் காரில் மற்றவர்கள் செல்வதை அனுமதிப்பதில்லை. ஆனால் மோடி அவர்கள் இந்த விதிக்கு விதிவிலக்காக அண்ணாமலையைத் தன்னுடன் காரில் பயணிக்கச் செய்தது பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. இதன் மூலம் பிஜேபி மேலிடம் அண்ணாமலையிடம் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளதையே காட்டுகிறது.

அண்ணாமலை உயிரைக் கொடுத்து உழைக்கிறார். மேலிடமும் அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு அளித்து அவரை ஊக்குவிக்கிறது. அண்ணாமலையின் உழைப்பு நிச்சயம் பலன் தரும். அதற்கு தமிழக மக்கள் ஆதரவு தரவேண்டும். தமிழ் நாட்டில் தாமரை மலர்ந்தால் தமிழக மக்களின் வாழ்வும் மலரும். நாற்றமெடிக்கும் நாத்திகம்சட்டம் ஒழுங்கு சீர்குலைவுஊழல் ராஜ்யம்குடியால் கெட்ட சமூகம்தேச விரோத செயல்கள்பிரிவினை வாத பேச்சுக்கள்இவைகள் அனைத்தும் ஒழிய தமிழ் நாட்டில் தாமரை மலர வேண்டும்.

தமழக மக்கள் அண்ணாமலையை ஆட்சி பீடத்தில் அமர்த்தி நன்மைகள் அடைய வேண்டும்.

வாழிய செந்தமிழ் ! வாழ்க நற்றமிழர் !

வாழிய பாரத மணித் திருநாடு !

இன்றெமை வருத்தும் இன்னல்கள் மாய்க !

நன்மை வந்தெய்துக ! தீதெலாம் நலிக !

அறம் வளர்ந்திடுக ! மறம்மடிவுறுக!  - மஹா கவி பாரதி


 

Comments

Popular posts from this blog

முக்குணங்கள் – நான்கு வர்ணங்களின் மூலாதாரம் ஆக்கம்: எஸ். சங்கரன்

தமிழில் நான்கு வேதங்கள்

முருகன் பிறந்த தினமான புனித வைகாசி விசாகம் – 07-06-2017